search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness camp"

    • கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சக்திமுருகன் தரமற்ற உணவுப்பண்டங்களை எவ்வாறு அடையாளம் காண வேண்டும்? என்பதை மாணவ, மாணவியரிடம் எடுத்துரைத்து செய்முறை விளக்கம் கொடுத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் அக மதீப்பீட்டின் (ஐகியுஏசி) சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். உதவிபேராசிரியர் கணேசன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சக்திமுருகன் கலந்து கொண்டு தரமற்ற உணவுப் பண்டங்களை எவ்வாறு அடையாளம் காண வேண்டும்? என்பதை மாணவ, மாணவியரிடம் எடுத்துரைத்து செய்முறை விளக்கம் கொடுத்தார். நிகழ்ச்சிகளை உதவிபேராசிரியர் செல்வகுமார் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி அக மதீப்பீட்டு ஒருங்கிணைப்பாளர் இணை பேராசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார்.

    • முகாமில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவர்கள் வயல் வெளியில் நாற்றுகள் நட்டு, பயிர்களுக்கு இயற்கை உரங்களை விதைத்து நேரடி செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொண்டனர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் இயற்கை முறை விவசாயம் குறித்த விழிப்புணர்வு முகாம் இலஞ்சி குமார கோவில் அருகே உள்ள வயல்வெளி பகுதிகளில் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்திய மக்களின் உயிர்நாடி விவசாயம் என்பதை உணர்த்தும் வகையில் வேளாண்மை தொழிலில் பயிர் செய்யும் முறை பற்றியும், பயிர் பாதுகாப்பதின் முக்கியத்துவம் பற்றியும், பயிர் விளைச்சலில் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினை களை பற்றியும் எடுத்து ரைக்கும் விதமாக மாணவ- மாணவிகள் விவசாயம் செய்வதற்கு பாரம்பரிய ஆடை யினை அணிந்து வயல் வெளியில் நாற்றுகள் நட்டு, பயிர்க ளுக்கு இயற்கை உரங்களை விதைத்தும், தண்ணீர் பாய்ச்சு தல் போன்ற வேளாண் செயல்களை தங்களின் நேரடி செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொண்டனர்.

    விழிப்புணர்வுக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • உலக தென்னை தின விழிப்புணர்வு முகாம் கருங்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
    • கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் தென்னை மரத்தின் உற்பத்தி குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் வட்டார வேளாண்மை துறையின் மூலம் உலக தென்னை தின விழிப்புணர்வு முகாம் கருங்குளம் கிராமத்தில் நடைபெற்றது. கருங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவர் ருக்கு சத்யா தலைமை தாங்கினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஆமினி தென்னை மரத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

    தேங்காய் உற்பத்தியை அதிகப்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டிற்கு இனகவர்சி பொறியின் பயன்பாடு, நீர் மேலாண்மை, வறட்சி காலத்தில் தென்னையில் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடு, ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலுக்கு கண்ணாடி இறக்கை பூச்சி ஒட்டுண்ணியின் பயன்பாடு, உர மேலாண்மை, தென்னை நுண்ணூட்ட உரம், தென்னை மரக்கன்று சாகுபடி, தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் உற்பத்தி, தென்னையில் ஊடுபயிர் சாகுபடி ஆகியவற்றை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் தென்னை மரத்தின் உற்பத்தி குறித்து சிறப்புரை ஆற்றினார். முகாம் ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் திரிசூலம் ஏற்பாடு செய்திருந்தார்.

    • உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங்கை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யு.ஜி.சி., ஒவ்வொரு ஆண்டும் எடுத்து வருகிறது
    • ராக்கிங் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங்கை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யு.ஜி.சி., ஒவ்வொரு ஆண்டும் எடுத்து வருகிறது. அவ்வகையில், நடப்பாண்டும் கல்லூரிகளில் ராக்கிங் இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ராக்கிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்டு 12-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை ஒரு வாரம் ராக்கிங் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த 4 நாட்களும், ராக்கிங் எதிர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகள், கட்டுரை எழுதுதல், விளம்பர பலகை உருவாக்குதல், லோகோ (இலச்சினை) வடிவமைத்தல் போன்ற போட்டிகளை நடத்தி, அதில் மாணவர்கள், கல்லூரி ஊழியர்களை பங்கேற்க செய்ய வேண்டும்.

    போதிய வசதியிருப்பின் கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்தலாம். குறும்படம், ஆவணப்படங்களை திரையிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை, பல்கலை கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. 

    • சாயர்புரம் தேர்வுநிலை பேரூராட்சியில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம் 10-வது வார்டு புளியநகரில் நடைபெற்றது.
    • புளிய நகர் வார்டு முழுவதும் கொசு மருந்துகள் வீடுவீடாக தெளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் தேர்வுநிலை பேரூராட்சியில் சிறப்பு ஒட்டு மொத்த தீவிர தூய்மை பணி முகாம் 10-வது வார்டு புளியநகரில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.சாயர்புரம் தி.மு.க. செயலாளர் கண்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட அனைவரும் எனது குப்பை எனது பொறுப்பு, எனது சுத்தமான கிராமம் எனது பெருமை என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    முகாமில் புளிய நகர் வார்டு முழுவதும் கொசு மருந்துகள் வீடுவீடாக தெளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்த உள்ளது. இதில் சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் முத்துராஜ், சாயர்புரம், நாசரேத், ஏரல் பேரூராட்சி ஊழியர்கள், பரப்புரை யாளர்கள் ஜெயா, பெனிட்டா மேரி மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் செய்து இருந்தார்.

    • சிவகிரி பேரூராட்சியும், தேவிபட்டணம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து சிவகிரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது
    • டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சியும், தேவிபட்டணம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து சிவகிரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது. டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், ஒலிபெருக்கி மூலமாக விளம்பரம் செய்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    முகாமிற்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகி ருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். வாசுதே வநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிவகிரி யில் சிவராம லிங்க புரம் தெரு, தெற்கு ரத வீதி, அம்பேத்கார் தெரு, பால கணேசன் தெரு, மலைக் கோவில் ரோடு போன்ற பகுதிகளில் மருத்துவ முகாமும், மழையிலும் வெயிலிலும் கேட்பாரற்று கிடந்த கழிவு பொருட்களான டயர், டியூப், சிரட்டை, அம்மி, ஆட்டு உரல் போன்றவற்றை வீடுவீடாக சென்று அவற்றை அகற்றும் பணியும், ஒட்டுமொத்த துப்புரவு பணியும், நிலவேம்பு கசாயம் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராஜாராம், துப்புரவு ஆய்வாளர் லாசர் எட்வின், துப்புரவு மேற்பார்வையாளர்கள் முருகையா, இசக்கி, டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ராஜாராம் செய்திருந்தார்.

    • காயல்பட்டினத்தில் உலமாக்கள் ஓய்வூதியம் மற்றும் பணியாளர் நல வாரியம் குறித்த விழிப் புணர்வு முகாம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அரசு முஸ்லிம்களுக்கு வழங்கும் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினத்தில் உலமாக்கள் ஓய்வூதியம் மற்றும் பணியாளர் நல வாரியம் குறித்த விழிப் புணர்வு முகாம் நடை பெற்றது.

    காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஒருங்கி ணைப்பில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ்நாடு வக்பு வாரியம் ஆகியவற்றின் சார்பில் நடந்த இந்த முகாமில் உலமாக்கள் பணியாளர் நல வாரியம், உலமாக்கள் ஓய்வூதியம், இலவச சைக்கிள், இரு சக்கர வாகனத்திற்கான மானியம் மற்றும் தமிழ்நாடு அரசு முஸ்லிம்களுக்கு வழங்கும் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவற்றிற் கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    முகாமில் தூத்துக்குடி மாவட்ட துணை கலெக்டரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலருமான விக்னேஸ்வரன், தமிழ்நாடு வக்பு வாரிய நெல்லை சரக ஆய்வாளர் நூர் ஆலம் இப்ராஹிம் ஆகியோர் தலை மையில் சம்பந்தப்பட்ட துறை களின் அதிகாரிகள் பலர் பணிகளை செய்தனர்.

    காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் முகைதீன் தம்பிதுரை, செயலாளர் வாவு சம்சுதீன், துணைச் செயலாளர் நவாஸ் அகமது, துணி உமர், கலீல் ஹாஜி, கைலானி சதக் தம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செய லாளர் காயல் மகபூப், த.மு.மு.க. நகரத் தலைவர் ஜாகீர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கால்நடைகளின் ரத்தம், பால், சாணம், சிறுநீர் மற்றும் நாசி திரவம் போன்ற மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • கன்று பேரணி நடத்தி சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆலங்குளம் அருகே உள்ள நாரணபுரம் கிராமத்தில் நெல்லை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் பொன்னுவேல் மற்றும் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரி ஆகியோரின் அறிவுரைப்படி ஆலங்குளம் கால்நடை மருந்தகம் சார்பில் இன்று நடைபெற்றது.

    நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செல்வி மணிமாறன் தலைமை தாங்கி முகாமினை ெதாடங்கி வைத்தார். நெல்லை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் மருத்துவர் ஜான்சுபாஷ் முன்னிலை வகித்தார். கால்நடைகளை தாக்கும் தோல் கழலை நோய் மற்றும் பறவைக் காய்ச்சல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி நோயுற்ற கால்நடைகளின் ரத்தம், பால், சாணம், சிறுநீர் மற்றும் நாசி திரவம் போன்ற மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைத்தார்.கால்நடை மருத்துவர்கள் ஊத்துமலை டாக்டர் ரமேஷ், நெட்டூர் டாக்டர் ராமசெல்வம், ஆலங்குளம் டாக்டர். ராஜஜூலியட் ஆகியோரால் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, செயற்கை முறை இன விருத்தி, மடிவீக்க நோய் சிகிச்சை, தடுப்பூசி,கிடாரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்புக் கலவைகள் வழங்கப் பட்டது. சிறந்த கால்நடை பராமரிப்பு மேலாண்மை விருது மற்றும் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம் கால்நடை மருத்துவர் ராஜஜூலியட் நன்றி கூறினார். கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிச்சையா , முப்பிடாதி மற்றும் நாரணபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கால்நடை வளர்க்கும் ஏராளமான விவசாயிகள் முகாமில் கலந்துகொண்டனர்.

    • அரசு பள்ளிகளில் சிறந்த கல்வி கற்பதற்கு பெற்றோர்கள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்
    • கிராம உதயம் அமைப்பின் சார்பில் நடந்த முகாமை அமைப்பின் நிறுவனர் டாக்டர் சுந்தரேசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    ஆறுமுகநேரி:

    அரசு பள்ளிகளில் சிறந்த கல்வி கற்பதற்கு பெற்றோர்கள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் கல்வி தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் கைபேசியை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.

    கிராம உதயம் அமைப்பின் சார்பில் நடந்த முகாமை அமைப்பின் நிறுவனர் டாக்டர் சுந்தரேசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.மேல ஆழ்வார்தோப்பு கிளை அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.பகுதி பொறுப்பாளர் ஆறுமுகவடிவு வரவேற்று பேசினார்.தனி அலுவலர் ராமச்சந்திரன், சிறப்பு பொறுப்பாளர் சித்திரை பெருமாள், பகுதி பொறுப்பாளர்கள் பிரேமா, முத்து செல்வன் ஆகியோர் பயிற்சி வகுப்புகளை நடத்தினர். தன்னார்வ தொண்டர் லிஜியா நன்றி கூறினார்.

    • தூத்துக்குடி மாவட்ட் சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நேற்று ஆத்தூர் பேரூராட்சியில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட் சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நேற்று ஆத்தூர் பேரூராட்சியில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பிரதிநிதி கிளாரன்ஸ், ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரி, ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆத்தூர் சுகாதார ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×