என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு முகாம்
- முகாமில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் வயல் வெளியில் நாற்றுகள் நட்டு, பயிர்களுக்கு இயற்கை உரங்களை விதைத்து நேரடி செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொண்டனர்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் இயற்கை முறை விவசாயம் குறித்த விழிப்புணர்வு முகாம் இலஞ்சி குமார கோவில் அருகே உள்ள வயல்வெளி பகுதிகளில் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்திய மக்களின் உயிர்நாடி விவசாயம் என்பதை உணர்த்தும் வகையில் வேளாண்மை தொழிலில் பயிர் செய்யும் முறை பற்றியும், பயிர் பாதுகாப்பதின் முக்கியத்துவம் பற்றியும், பயிர் விளைச்சலில் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினை களை பற்றியும் எடுத்து ரைக்கும் விதமாக மாணவ- மாணவிகள் விவசாயம் செய்வதற்கு பாரம்பரிய ஆடை யினை அணிந்து வயல் வெளியில் நாற்றுகள் நட்டு, பயிர்க ளுக்கு இயற்கை உரங்களை விதைத்தும், தண்ணீர் பாய்ச்சு தல் போன்ற வேளாண் செயல்களை தங்களின் நேரடி செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொண்டனர்.
விழிப்புணர்வுக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.