என் மலர்
நீங்கள் தேடியது "Baby care"
- ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு.
- மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது.
பத்து நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வதைக்கிறது வியர்வை. கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு. தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வியர்க்குருவை எதிர்கொள்ளலாம்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். கோடைகாலமும் ஆரம்பிக்க உள்ளதால் மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது. இந்நிலையில் வெப்பத்தால் வரும் வியர்க்குருவை தடுப்பதற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய வைத்திய முறைகளை பார்க்கலாம்.

வியர்க்குரு
உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் தோன்றுகிறது வியர்க்குரு.
எப்படி தடுப்பது...?
* உடலுக்கு குளுமை அளிக்கும் சந்தனத்தை கொஞ்சம் மஞ்சளும் தண்ணீருக்கு பதில் ரோஸ் வாட்டரும் கலந்து உடம்பு, கழுத்து என தடவினால் வியர்க்குரு வருவதை தடுக்கலாம்.
* முல்தானி மெட்டியையும் ரோஸ் வாட்டரில் கலந்து வியர்குருவை விரட்ட பயன்படுத்தலாம்.
* பருத்தித் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உடலில் போர்த்தி ஈரம் காயும் வரை வைத்திருப்பதும் வியர்க்குரு வருவதை தடுக்கும்.
* அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது 'அறுகன் தைலம்', 'தூர்வாரி தைலம்' என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.
* மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.
* பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும்.
* கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.
- குழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன.
- குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுவது பசி தான். இது பெரும்பாலும் சரியாக இருந்தாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இது உண்மையாக இருக்காது. குழந்தைகள் அழுவதற்கு உளவில் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.
பசிக்கு அடுத்தபடியாக குழந்தைகள் பெற்றோரை அழைக்கவே அதிகமான சந்தர்ப்பங்களில் அழுகின்றன. குழந்தைகளால் தனக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு ஏற்படும் எல்லா அசௌகரியங்களுக்கும் ஒரே விளக்கம் அழுகையாக தான் இருக்கும். இதனை சாதாரணமாக நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் குழந்தைகளின் உளவியல் பற்றிய அடிப்படை அம்சங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாகவும் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க குழந்தைகளின் உளவியல் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
பொதுவாக பசியை தவிர்த்து குழந்தைகள் அழுவதற்கு பல நேரங்களில் குழந்தைகள் இறுக்கமான ஆடைகளை அணிந்திருப்பதால் அழ ஆரம்பிக்கிறார்கள். அதுமட்டுமன்றி, அவர்கள் இதனை சங்கடமாகவும் உணர்கிறார்கள். எனவே, குழந்தைகளுக்கு எப்போதுமே தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது அவர்களை சவுகரியமாக வைத்திருக்க துணைப்புரியும்.
தாய் எதை சாப்பிட்டாலும், குழந்தைக்கு பால் கொடுப்பதன் மூலம் அது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.
மேலும் வறுத்த மற்றும் காரமான உணவுகளை தாய் அதிகமாக சாப்பிட்டால் அதன் தாக்கம் குழந்தைகளை பெரிதும் பாதிக்கும். இதனால் தான் குழந்தைகள் அழ தொடங்குகிறார்கள். உதாரணமாக, வயிற்று வலி அல்லது வாயு பிரச்சனை போன்றவை ஏற்படும்.
பல நேரங்களில், தெரிந்தோ தெரியாமலோ, தாய் குழந்தைக்கு அதிக பால் கொடுப்பதுண்டு. அதேசமயம், சில சமயங்களில் அவசர அவசரமாக குழந்தைகளுக்கு உணவளிப்பதும் அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் குழந்தைகள் அழுவதுண்டு.
மேலும் சிறு குழந்தைகளின் எலும்புகள் மிகவும் மென்மையானதாக இருக்கும். குழந்தைகளை பெற்றோர்கள் கையாளும் போது ஏற்படும் கவனக்குறைவால் அவர்களின் எலும்புகள் பாதிப்படையும் அபாயம் உள்ளது.
ஒரு குழந்தையின் எலும்பு அதன் இடத்தில் இருந்து நழுவினால், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும். அதனால் குழந்தைகளை கையாளும் போது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஒரு குழந்தை தினமும் மாலையில் ஒரே நேரத்தில் அழுதால், அவர் கோலிக் நோயால் பாதிக்கப் பட்டிருக்கலாம். இந்த நோயினால் குழந்தைகளுக்கு வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலியை அனுபவிக்கிறார்கள்.
அதனால் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக் கின்றார்கள். பெரும்பாலும் குழந்தைகள் மூன்று மாதங்களுக்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயில், குழந்தைகள் பல மணி நேரம் அழுவார்கள். அதனை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
- காட்டன் டயப்பர்கள் குழந்தைகளுக்கு அணிவித்தால் குழந்தைகளின் தோலுக்கு எந்தவித கெடுதலும் இருக்காது.
- அதிக செயற்கை பொருட்களாலான டயப்பர்களை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும்.
குழந்தைகளுக்கு டயப்பர் அணிவது பெற்றோர்களுக்கு சவுகரியமான செயல் என்றாலும் அந்த டயப்பரால் சில தீமைகளும் இருக்கின்றன.
அதிக செயற்கை பொருட்களாலான டயப்பர்களை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும்.
ஈரமான டயப்பர்கள், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களையும், சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள் அதிகரிக்கவும் வழி வகுக்கின்றன.

காட்டன் டயப்பர்கள் குழந்தைகளுக்கு அணிவித்தால் குழந்தைகளின் தோலுக்கு எந்தவித கெடுதலும் இருக்காது. அதை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் கெமிக்கல் கலந்த மாடர்ன் டயப்பர் அணிவிப்பது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் முடிவுகள் தெரிவித்துள்ளன.
மாடர்ன் டயப்பர்களில் ஒரு சில விஷப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அது குழந்தைகளின் உடல்நலனை பெரிதும் பாதிக்கும் என்றும் குறிப்பாக சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது
எனவே வேதிப்பொருள்கள் பயன்படுத்தாத சுத்தமான காட்டன் டைப்பர்கள் பயன்படுத்தினால் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. அது மட்டுமின்றி அடிக்கடி டயப்பரை மாற்ற வேண்டும்.
ஈரம் கசிந்தால், டயப்பர் கனமாக தெரிந்தால், குழந்தை மலம் கழித்துவிட்டால், துர்நாற்றம் வருகையில், குழந்தை விடாத அழுது கொண்டிருந்தால் டயப்பர்களை உடனே மாற்ற வேண்டும். குறைந்தது 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
- பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும்.
- பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம்.
முதல்முறையாக தாயான பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும். குழந்தைகள் பிறந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இளம் தாய்மார்களுக்கு சந்தேகம் இருக்கவே செய்யும். குழந்தையின் அழுகை, குழந்தை பராமரிப்பு வரை எதைக்கண்டாலும் மனதில் ஒருவித அச்சம் இருக்கவே செய்யும்.
சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சையாக இருந்தாலும் குழந்தை பிறந்த பிறகு மற்றுமொரு சவால் குழந்தை வளர்ப்பு தான். பல பெண்களும் குழந்தை பிறந்தவுடன் கர்ப்பகால அவஸ்தைகள் முடிந்துவிடுவதாக நினைக்கிறார்கள். ஆனால் தாய்மையின் பயணமே அப்போது தான் தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக முதல் முறை தாயாகியிருக்கும் பெண்கள் அவசியம் குழந்தை வளர்ப்பு பற்றி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல்:
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம் என்பதை மருத்துவர் குழந்தை பிறந்ததும் வலியுறுத்துவார். பிரசவித்தவுடன் குழந்தைக்கு தரக்கூடிய தாய்ப்பால் சீம்பால் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலில் குழந்தைக்கு தேவையான எதிர்ப்புசக்தி கிடைக்கும் என்பதால் முதலில் வெளிவரும் மஞ்சள் நிற பாலை குழந்தைக்கு தவிர்க்காமல் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் நிலை
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள் உண்டு. இளந்தாய்மார்கள் அனைவருமே செவிலியர் அல்லது மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் முறையை அறிந்து சரியாக பின்பற்றும் போது தாய்ப்பால் சுரப்பும் கிடைக்கும். குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பிணைப்பும் அதிகமாகும்.

குழந்தையின் அழுகை
குழந்தையின் அழுகை குறித்து சரியாக தெரியாது என்றாலும் ஓரளவேனும் அதன் அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பசிக்கான அழுகை, டயப்பர் ஈர அழுகை, வயிற்றுவலிக்கான அழுகை, தூக்கத்துக்கான் அழுகை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி குழந்தையின் அழுகை காய்ச்சல் அல்லது வேறு பிரச்சனைகளால் தீவிரமாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்துகொள்வது அவசியம்.

குழந்தைக்கான தடுப்பூசி
பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணையை மருத்துவரே அளிப்பார் என்றாலும் அதை அம்மாக்களும் நினைவுபடுத்தி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதை நினைவுபடுத்தி முன்கூட்டியே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
குழந்தைக்கான மருந்துகள் பிறந்த நேரத்தில் இல்லை என்றாலும் அதிக காய்ச்சல், சளி, இருமல், தாய்ப்பால் குடிக்காத காலங்களில் அவசரத்துக்கு என்ன செய்ய வேண்டும். எப்போது சிகிச்சைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதையும் ஆலோசித்து வைத்துகொள்வது நல்லது.

குழந்தையை குளிக்கவைக்கும் முறை:
பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் அடுத்த நாள் முதலே குளிக்க வைக்கலாம். ஆனால் அம்மாக்களால் குழந்தையை குளிப்பாட்டுவது சிரமமாக இருக்கும். வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் எப்படி குழந்தையை குளிக்க வைக்க வேண்டும் என்பதை பற்றி பெற்றோர்கள் இருவருமே தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு மசாஜ் செய்யும் முறை, அதன் முக்கியத்துவம், தலைகுளியல், குளிக்க வைக்கும் முறை என அனைத்தையும் கற்றுக்கொள்வது நல்லது.
- நமது கையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன.
- உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிட முடிவதில்லை.
கையால் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அப்படியிருக்க, ஸ்பூனைப் பயன்படுத்தி உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு பேஷனாக மாறிவிட்டது. பிடிக்கிறதோ, இல்லையோ ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது. அதிலிருந்து மாறுபட்டு, கையால் சாப்பிட பழகுவோம். ஏனெனில் கையால் சாப்பிடுவதில், சில நன்மைகளும் இருக்கிறது.

உணவைத் தொட்டவுடன் அது சூடாக இருக்கிறதா?, குளிர்ச்சியாக இருக்கிறதா?, திட நிலையில் இருக்கிறதா?, திரவ நிலையில் இருக்கிறதா..? என்று எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். அந்த தகவல் உடனடியாக மூளைக்குப் போகிறது.
நாம் சாப்பிடப் போகிறோம் என்பதை மூளை உணர்ந்துகொண்டு வயிற்றுக்கு தகவல் அனுப்புகிறது. வயிறு, செரிமானத்துக்குத் தேவையான அமிலங்களைச் சுரக்கும் நிகழ்வை (உணவு வாய்க்கு வந்ததும்) தொடங்கிவிடுகிறது.
மேலும், நமது கையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குகிறது.

ஆனால் கையைக் கழுவிவிட்டு சாப்பிடும் போதுதான் இந்த பலன் கிடைக்கும். கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும்.
கைக்கு பதிலாக ஸ்பூனில் சாப்பிடும்போது மூளைக்கு தகவல் அனுப்புவது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடங்க தாமதமாகும். அது மட்டுமல்லாமல் உணவின் தன்மை நமக்குத் தெரியாது என்பதால் சூடான பொருளை ஸ்பூனில் எடுத்து வாயில் வைத்தால் நாக்கை சுட்டுக்கொள்ள நேரிடலாம்.

ஸ்பூனில் சாப்பிடும்போது நமது கவனம் முழுக்க நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஒரு விதமான இயந்திரத்தன்மை வந்துவிடுகிறது. இதனால் உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிட முடிவதில்லை. கையால் சாப்பிடும்போது ஸ்பூனில் சாப்பிடுவதைவிட அதிக திருப்தி கிடைக்கிறது.
ஸ்பூனில் சாப்பிடுபவர்கள் மிக வேகமாக சாப்பிடுவதோடு, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு சில குறைபாடுகள் வரலாம் என கண்டறிந்திருக்கிறார்கள்.
சீரற்ற மனநிலை, மன அழுத்தம் போன்றவையும் இந்த நோய் ஏற்படுவதற்கான பிற காரணங்களாக இருக்கின்றன. இந்த காரணங்களோடு ஸ்பூனில் வேகமாகச் சாப்பிடுவது சேர்ந்து கொள்ளும்போது பாதிப்பு அதிகமாகும். கையால் சாப்பிடும்போது அவ்வளவு வேகமாக சாப்பிட முடியாது என்பதால் பாதிப்புகள் குறையும்.
நாம் சாப்பிடும் போது கையை வைத்திருக்கும் அமைப்பானது யோக முத்திரைகள் மட்டுமல்லாமல் பழமையான நடன முறைகளின் முத்திரைகள் மற்றும் தியானத்தின் மூலம் நோயை குணப்படுத்தும் முறையை குறிக்கிறது.
ஆயுர்வேதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு விரலும் நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களைக் குறிக்கிறது. உணவில் உள்ள கெட்ட சக்திகளை இவை விரட்டுவதாக நம்பப்படுகிறது. இந்த பலன்கள் ஸ்பூனில் சாப்பிடும்போது கிடைப்பதில்லை.
- குழந்தையின் தனிமை, பசி உணர்வு காரணமாக ஏற்படலாம்.
- குழந்தைகளுக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குழந்தை விரல் சூப்புவதால் ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்...

குழந்தைகள் பலருக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும். விரல் சூப்புவதால் என்ன விளைவு ஏற்படும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் நாம் வளர்ந்ததால் தான் இன்று பலவித பற்கள் குறைபாடுகளும் ஏற்படுகிறது.
நம்மில் பலருக்கு நிகழந்த உடல் மற்றும் மன மாற்றங்கள் நம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க, குழந்தைகள் விரல் சூப்பினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
விரல் சூப்பும் பழக்கம் குழந்தையின் தனிமை, பசி உணர்வு காரணமாக ஏற்படலாம். குழந்தைகள் இவ்வாறு விரலை சூப்பிக் கொண்டே இருப்பது குழந்தைகளுக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குழந்தைகள் வளரும் பருவத்தில் வாயில் விரல் வைத்து உறங்குவது, எப்பொழுது பார்த்தாலும் விரலை வைத்துக் கொண்டே திரிவது, அவர்கள் வளர்ந்த பின் பால் பற்கள் முளைத்து, அவை விழுந்து பின்னர் பற்கள் முளைக்கும் பொழுது ஒரு வரிசையில் அல்லாமல், மேலும் கீழுமாக கோணலாக, எத்து பல்லாக வளர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்படி வளர்ந்த பற்களில் அத்தனை பலம் இல்லாமல் போகும் நிலை உருவாகலாம்.

குழந்தையாய் இருந்து சிறுவர் பருவத்திலும் கூட சூப்பிய கையை எடுக்காமல் குழந்தை வளர்ந்தால், பின்னர் குழந்தையின் கையில், விரல்களில் ரத்த ஓட்டம் குறைந்து அதனால் உறுப்புகளின் செயல்படும் திறன் குறைந்து விரல்கள் உணர்வற்று போகும் நிலை உருவாகலாம்.
இந்த விளைவால் குழந்தைகளின் முக்கிய உறுப்பான கைகள் மற்றும் அவற்றின் இயக்கம் பாதிக்கப்படுகின்றன.
குழந்தைகள் பிறந்ததில் இருந்து கடைபிடிக்கும் பழக்கத்தை பள்ளி சென்ற பின்னும் மேற்கொண்டால், அங்கு மற்ற குழந்தைகளின் ஆசிரியர்களின் கேலிக்கு உள்ளாகும் பொழுது குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும் குழந்தை வாயில் எதையாவது வைத்து வளர்த்து பழக்கப்பட்டு விட்டதால், வளர்ந்த பின் வாயில் வைக்க எதையாவதை தேடும். அந்த சமயத்தில் புகைபிடித்தல், மது, போதை போன்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது போன்ற பாதிப்புகள் குழந்தையின் ஒரு சிறிய பழக்க வழக்கத்தால், விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து, பின்னாளில் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கின்றன. ஆகையால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு புரியும் வகையில் அன்பாக எடுத்துச் சொல்லி வாயில் கையை வைத்து வளர விடாமல் தடுக்க வேண்டும்.
அதே சமயம் அவர்களின் உணர்வுகள் அதாவது குழந்தை பருவத்தில் இருக்கும் பயம் மற்றும் பாதுகாப்பு உணர்வுகள் குறித்து எந்தவித பாதிப்புகளும் குழந்தைகளிடம் ஏற்படாத வகையில், விரல் சூப்பும் பழக்கத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டும்.
குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நிகழ்காலத்தில் அவர்கள் மனம் பாதிக்கப்பட்டு விடாமல் இருக்கும் வகையில் அன்பாய் எடுத்து சொல்லி குழந்தைகளை திருத்துவது பெற்றோரின் கடமையாகும்.
- குழந்தைக்கு பால் ஊட்டும் போதெல்லாம், தலையை சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.
- ஒரே நேரத்தில் குழந்தைக்கு அதிக பால் கொடுக்க வேண்டாம்.
குழந்தைக்கு சில நேரங்களில் திடீரென குடித்த பால் அவர்களின் மூக்கு மற்றும் வாய் வழியாக மீண்டும் வரக்கூடும். சிலர் இதை எதுக்களித்தல், ஓங்கரித்தல் என குறிப்பிடுவதுண்டு. இதற்கான காரணத்தை பார்க்கலாம்.
கர்ப்ப காலம் மட்டுமின்றி ஒரு குழந்தை குறிப்பிட்ட வயது வரை பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் வரை பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். காரணம், குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என அவர்களால் சொல்ல முடியாது, அதை பெற்றோர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

தாயின் பால் குடித்த பிறகு குழந்தைகள் வாந்தி எடுப்பதை அடிக்கடி கவனித்திருப்போம். இது பலவீனமான செரிமான செயல்முறையின் அறிகுறியாகும்.
பல சமயங்களில் குழந்தைகள் அளவு தெரியாமல் தேவைக்கு அதிகமாக பால் குடித்துவிடுகிறது. அந்த குழந்தையின் சிறிய வயிற்றில் அதிகமான பாலை கையாள முடியாததால் கூடுதலான பால் தானாகவே வெளியேறிவிடுகிறது.

GERD எனப்படும் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் என்பது உணவுக் குழாயில் மீண்டும் குடித்த பால் வெளியேறும் நிலையாகும். இதன் காரணமாகவே மூக்கு மற்றும் வாய் வழியாக பால் வெளியேறுகிறது.
குழந்தைக்கு பால் குடிக்கும் போது அவர்களின் தலை கீழ்நோக்கி இருந்தாலோ அல்லது சரியாக பிடிக்கப்படாமல் இருந்தாலோ பால் தொண்டையிலேயே சிக்கி நிற்கிறது. இது சமயங்களில் மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியேறுகிறது.
குழந்தையின் செரிமான அமைப்பு என்பது சரியாக வளர்ச்சியடையவில்லை என்றாலும் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. குழந்தைகள் குடித்த பால் தானாகவே மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியேறுகிறது.

* குழந்தைக்கு சரியான நிலையில் உணவளிக்க வேண்டும்.
* குழந்தைக்கு பால் ஊட்டும் போதெல்லாம், தலையை சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.
* கொஞ்சம் கொஞ்சமாக பால் கொடுங்கள். ஒரே நேரத்தில் குழந்தைக்கு அதிக பால் கொடுக்க வேண்டாம்.
* ஒவ்வொரு முறையும் உணவளித்த பிறகு குழந்தையுடன் சற்று விளையாடுங்கள், அதேபோல் நன்றாக தூங்குகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
காது கேட்கும் திறன் அதிகமாக இருக்கும். மற்ற புலன்களைவிட காது கேட்பது மிகவும் கூர்மையாக இருக்கும். பழகியவர்களின் குரலை கேட்டால் குதிப்பது, கால் ஆட்டுவது போன்ற செயல்களை செய்யும். குறிப்பாக, அம்மா, பாட்டி குரல் பழகி இருக்கும்.
ஒரு அடி தூரத்துக்கு உட்பட்ட பொருட்களை குழந்தைகளாக லேசாகப் பார்க்க முடியும். அதாவது அருகில் உள்ளதை மட்டும் குழந்தைகளால் பார்க்க முடியும். பிரகாசமான ஒளி, மிக நெருக்கமான பிம்பங்கள் ஆகியவை நன்றாகத் தெரியும். அம்மாவின் முகத்தை குழந்தையால் அடையாளம் காண முடியும். அம்மாவின் குரல் கேட்டதும் அழுகையை நிறுத்தும். இரண்டு கைகளையும் விரித்து, முதுகை வில் போன்று குழந்தை வளைக்கும்.
நம் கவனத்தை ஈர்க்கும். தாய் சரியாக பால் கொடுக்காமல் இருந்தாலோ, மார்பு காம்பு நழுவும் போதோ குழந்தை கோபப்பட்டு உடலை வில் போல வளைக்கும். தாய்ப்பால் குடிக்கும் போது, குழந்தை தன் தாயின் மார்பகங்களில் கைகளை வைத்து வருடவும் செய்யும். கழுத்தில் செயின் இருந்தால் பிடிக்கவும் செய்யும். குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்துக்கு அனுபவம் மிக்க பெரியோர் உடன் இருப்பது நல்லது.
பெற்றோர் செய்ய வேண்டியவை
குழந்தையின் பாதங்களில் நெருடுதல் மூலம் குழந்தையின் கூச்சத்தை உணரலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.
பக்கத்தில் வரும் சத்தத்தை குழந்தை அறிந்து கொள்கிறதா என செக் செய்ய, லேசாக கை தட்டுதல், சொடக்கு போடுதல் ஆகியவற்றை செய்யலாம். இதனால் சத்தம் வரும் இடம் நோக்கி குழந்தை பார்க்கும். மேற்சொன்னதை ஒவ்வொரு பெற்றோரும் முதல் மாதத்தில் அவசியம் செய்ய வேண்டும். இதனால் குழந்தை வளர்ச்சி சீராக இருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும்.
தொப்புள் கொடியை அறுத்த பின்பு, குழந்தையின் தொப்புள் அருகே கிளிப் மாட்டுவது உண்டு. 2-3 வாரங்களிலே தொப்புள் பகுதி உலர்ந்து, கிளிப் தானாகவே உலர்ந்து விடும். மிகவும் முக்கியமாக, தொப்புள் பகுதியை கிருமித் தொற்று தாக்காதபடி சுத்தமாக பராமரிக்க வேண்டும். உப்புத்தண்ணீர், சோப், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது. எனினும் மருத்துவர் சொன்னதையே பின்பற்றுங்கள். குழந்தையின் தொப்புளில் ஈரகசிவு தென்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது முக்கியம்.
குழந்தையின் தலைப் பகுதி சீராக இல்லாமல், பிடறி, நெற்றி, உச்சி போன்ற பகுதிகளில் லேசாக புடைப்பு காணப்படுவதால், கபால ஓட்டு எலும்புகளின் இணைப்பு பலப்பட்டு, தானாகவே சரியாகிவிடும். குழந்தை பால் குடித்த ஒரு மணி நேரம் கழித்து, சமதளம் உள்ள தரையில். கனமான விரிப்பின் மேல், தலையணை இல்லாமல் குழந்தையை படுக்க வைப்பதால் கபால எலும்புகள் இயல்பான நிலைக்கு விரைவில் வர உதவும்.
பிறந்த குழந்தைகளின் கண்கள் மாறு கண்கள் போல தெரியலாம். கண்களை சுற்றி உள்ள ‘ரெக்டஸ்’ தசைகள் வலுப் பெறும். சில நாட்களில் கண்கள் இயல்பான நிலைக்கு வரும். கண்கள் மஞ்சளாக இருந்தாலோ, பிசுபிசுப்பான பீளை வழிந்தாலோ மருத்துவரிடம் அவசியம் சொல்லுங்கள்.
பிறந்த குழந்தைகளின் உடலில் பால் போன்ற வெண்மை திட்டுக்கள் காணப்படும். இவற்றை அழுத்தித் துடைக்க கூடாது. தோலின் வறட்சியை சமன் செய்யவே இந்த திட்டுக்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய்த் தடவி வந்தால் விரைவில் சரியாகிவிடும். குழந்தையின் உடலில் கருமை அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் காணப்பட்டால் இவை பல்லாண்டுகள் நீடிக்கலாம். அல்லது குழந்தை வளர வளர சரியாகிவிடலாம்.
கர்ப்பக்காலத்தில் தாய் உண்ட இரும்பு சத்து மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள், மரபியல் முடி வளர்ச்சி இதன் அடிப்படையில் குழந்தைக்கு முடி வளரும். கருப்பையில் மிதமான வெப்பத்தில் இருந்த காலத்தால் குழந்தைக்கு முடி வளர்ச்சி அதிகமாக காணப்படும். குழந்தை பிறந்த பிறகு 1-2 மாதங்களில் உடலில் உள்ள முடி தானாக உதிரும்.
குழந்தையின் மார்பகம், பிறப்புறுப்பு பகுதிகளில் லேசான மாற்றம் தெரியும் சில வாரங்களில் இவை சரியாகிவிடும். ஆண் குழந்தைக்கு இரண்டு விதைகள் இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள். இரண்டு விதை இல்லையென்றாலோ ஒரு விதை இல்லையென்றாலோ ‘விதை இறங்கவில்லை’ என மருத்துவரிடம் சொல்லுங்கள்.
பிறந்த குழந்தை 16 மணி நேரமாவது அவசியம் தூங்க வேண்டும். பகலிலும் இரவிலும் தூங்கி கொண்டே இருக்கும். இரவில் 3-4 முறை, பகலில் தேவைப்படும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு 2 வாரம் முடிந்த உடனே, குழந்தையை கொஞ்சுவது, ஒலி எழுப்பி கூப்பிடுவது, குழந்தையிடம் பேசுவது போன்றவை செய்தால் குழந்தைக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தை விழித்திருக்கும்போது, தாய் குழந்தையிடம் அவசியம் பேச வேண்டும்.
குழந்தை உறங்கும் இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தைகள் மூச்சு திணறி இறந்துவிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. பிறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டாம்.