என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bairava"
- 'கல்கி 2898 AD' படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார்.
- சந்தோஷ் நாராயணன் இசையில் முழு பாடல் நாளை வெளியாகிறது.
இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'கல்கி 2898 AD' படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், கல்கி 2898 கி.பி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பைரவா பாலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும், சந்தோஷ் நாராயணன் இசையில் முழு பாடல் நாளை வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நிலத்தின் அடியில் புதைக்கப்படும் பொருட்களை கண்டுபிடிக்கும் திறமை கொண்ட மோப்பநாய் ‘பைரவா ஆகும்.
- மதுரை மாவட்டம் வைகை அணை பகுதியில் கடந்த 6 மாதங்களாக பைரவாக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ெபாள்ளாச்சி,
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, அமராவதி, உடுமலை ஆகிய 6 வனச்சரகங்களை கொண்டது. இங்கு புலி, மலபார் அணில், சிங்கவால் குரங்கு, வரையாடு உட்பட பல அரிய வகை விலங்குகளும், தாவரங்களும் உள்ளன. வனக்கொள்ளை, வன விலங்குகள் வேட்டை ஆகியவற்றை தடுக்கும் பணியிலும், கண்காணிக்கும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு உதவும் வகையிலும், வனக்குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறிவதற்காகவும், தற்போது டாபர்மேன் ரகத்தைச் சேர்ந்த ஒரு வயதுடைய பைரவா என பெயர் சூட்டப்பட்டுள்ள மோப்பநாய், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை பராமரிக்கவும், வனங்குற்றங்கள் ஏற்படும் இடங்களுக்கு அழைத்துச் சென்று குற்றவாளிகளைப் பிடிக்கவும் வேட்டைத்தடுப்பு காவலர் கணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுவது, வன விலங்கு வேட்டை உள்ளிட்ட சட்ட விரோத வனக்குற்றங்களை கண்டறியும் வகையில், வாகனங்களில் சோதனையிடுதல், சந்தனம், ஈட்டி மரங்களின் வாசனைகளை வைத்து கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது," வனப்பகுதியில் நடைபெறும் காட்டுயிர் வேட்டை, திருட்டு, மரம்வெட்டுதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை உடனுக்குடன் கண்டறியவும், குற்றப் புலனாய்வுக்கு உதவியாகவும் வனத்துறையின் ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்பு மோப்பநாய் பிரிவு ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, தற்போது ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பைரவா எனும் பெயர் சூட்ட ப்பட்டுள்ள மோப்பநாய் பணியமர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, மதுரை மாவட்டம் வைகை அணை பகுதியில் கடந்த 6 மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வனப்பொருட்கள் கடத்தல், வன விலங்குகள் வேட்டை ஆகியவற்றை துப்பறிவதுடன், நிலத்தின் அடியில் புதைத்து வைக்கப்படும் எந்த பொருளையும் எளிதில் கண்டறிந்துவிடும் அளவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காடுகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் பணியில், மோப்ப நாய்கள் பங்களிப்பும் இருக்கும்" என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்