search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bajji"

    • கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்தில் மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்தது.
    • பஜ்ஜி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் குண்டூர், ஆவணி கட்டா, நாகை லங்கா பகுதிகளில் பல்வேறு வகையான மிளகாய் பயிரிடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த மிளகாய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்தில் மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்தது. மேலும் வெயில் அதிகரிப்பால் பச்சை மிளகாய் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக பஜ்ஜி செய்ய பயன்படுத்த கூடிய மிளகாய் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது.

    இந்த வகை மிளகாய் கிலோ ரூ.115 வரை விற்பனை செய்யப்படுகிறது. வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.74-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதனால் இல்லத்தரசிகள் மற்றும் பஜ்ஜி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • புடலங்காயில் கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள்.
    • இன்று புடலங்காயில் சூப்பரான பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    புடலங்காய் - 1

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1/2 கப்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை:

    புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை வட்ட வட்டமாக வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெட்டி வைத்த புடலங்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், புடலங்காய் பஜ்ஜி ரெடி!!!

    கொத்தமல்லி அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவிது.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
    • இன்று இந்த ஸ்நாக்ஸ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சுத்தம் செய்த வாழைப்பூ - ஒரு கப் (வாழைப் பூவை நரம்பு நீக்கி, ஒரு ஒரு இதழாக முழுமையாக எடுத்துக் கொள்ளவும்).

    கடலை மாவு - 1 கப்,

    அரிசி மாவு - 5 டீஸ்பூன்,

    மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா ஒரு சிட்டிகை,

    சோள மாவு - ஒரு டீஸ்பூன்,

    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு வாழைப்பூவாக எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான வாழைப்பூ பஜ்ஜி ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பஜ்ஜியில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
    • இன்று தக்காளியில் பஜ்ஜி செய்து எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    அதிகம் பழுக்காத நாட்டுத் தக்காளி - 5

    பொட்டுக்கடலைமாவு - 50 கிராம்,

    சோள மாவு - 25 கிராம்,

    மைதா மாவு - ஒரு டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் விழுது - அரை டீஸ்பூன்,

    பெருங்காயத் தூள் - சிறிதளவு,

    சமையல் சோடா - ஒரு சிட்டிகை,

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,

    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    தக்காளியை கனத்த வில்லைகளாக நறுக்கி கொள்ளவும்.

    பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மைதா மாவு, உப்பு, சமையல் சோடா, மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளி வில்லைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான தக்காளி பஜ்ஜி ரெடி.

    குறிப்பு: தக்காளியில் இருக்கும் நீர் எண்ணெயில் சலசலப்பு உண்டாக்கும் என்பதால், மிதமான தீயில் மெதுவாக பொரித்தெடுக்கவும்.

    • இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்யலாம்.
    • திடீரென விருந்தினர் வந்தால் இந்த ரெசிபி செய்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    உளுந்து அப்பளம் அல்லது மிளகு அப்பளம் - 4,

    கடலை மாவு - 100 கிராம்,

    அரிசி மாவு - 20 கிராம்,

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

    சமையல் சோடா- ஒரு சிட்டிகை,

    பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு,

    எண்ணெய் - 300 கிராம்.

    செய்முறை:

    ஒவ்வொரு அப்பளத்தையும் நான்காக கட் செய்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

    இதில் ஒரு டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் விட்டுக் கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அப்பளத் துண்டுகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான அப்பள பஜ்ஜி ரெடி.

    குறிப்பு: அப்பளத்தில் உப்பு இருக்கும் என்பதால், கவனமாக சற்று குறைவான உப்பை மாவில் சேர்க்கவும்.

    • மழைக்காலத்தில் சுடச்சுட ஸ்நாக்ஸ் சாப்பிட பிடிக்கும்.
    • இன்று சுடச்சுட மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி செய்யலாம் வாங்க....

    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்

    பஜ்ஜி மிளகாய் - 6

    வெங்காயம் - 2

    வரமிளகாய் - 2

    புளி - சிறிது

    பூண்டு - 4 பல்

    அரிசி மாவு - 1/2 கப்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    சோடா உப்பு - 1 சிட்டிகை

    பெருங்காயத் தூள் - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிளகாயை இரண்டாக கீறி விதையை எடுத்து விடவும்.

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி, பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * அரைத்த கலவையை கீறிய மிளகாய்களின் நடுவில் வைக்கவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, எண்ணெயை சூடானதும் இதில் மசாலா பிரட்டிய மிளகாயை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * இதேப்போல் அனைத்து மிளகாயையும் செய்ய வேண்டும்.

    * இப்போது சூப்பரான மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி ரெடி!!!

    • இந்த வெங்காய பஜ்ஜி தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • இன்று இந்த பஜ்ஜி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வெங்காயம் - 2

    கடலை மாவு - 1/2 கப்

    அரிசி மாவு - 1/4 கப்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    ஓமம் - 1/4 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    உப்பு - சுவைக்கேற்ப

    செய்முறை:

    * வெங்காயத்தை தோல் நீக்கி வட்டமாக வெட்டிகொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு போட்டு அதனுடன் ஓமம், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காய துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அருமையான வெங்காய பஜ்ஜி தயார்.

    • கேரளாவில் இந்த நேந்திரம் பழ பஜ்ஜி மிகவும் பிரபலம்.
    • மாலை நேரத்தில் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.

    தேவையான பொருட்கள்

    நேந்திரம் பழம் - ஒன்று

    மைதா மாவு - அரை கப்

    உப்பு - ஒரு சிட்டிகை

    சர்க்கரை(சீனி) - 2 1/2 தேக்கரண்டி

    சமையல் சோடா - 2 சிட்டிகை

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை

    நேந்திரம் பழத்தை தோல் நீக்கி வட்டமாக அல்லது நீளமாக அரை செ.மீ கனத்தில் வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் நேந்திரம் பழ துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும். மிதமான தீயில் வைத்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி விடவும்.

    பொன்னிறமானதும் எடுத்து விடவும்.

    இப்போது சூடான சுவையான நேந்திரம் பழ பஜ்ஜி தயார்.

    • பேபிகார்னில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • இன்று பேபிகார்னில் பஜ்ஜி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பேபிகார்ன் - 12,

    கடலை மாவு - 1 கப்,

    அரிசிமாவு - 1 டீஸ்பூன்,

    கார்ன்ஃப்ளவர் - 1 டீஸ்பூன்,

    உப்பு - சுவைக்கேற்ப,

    எண்ணெய் - தேவைக்கு,

    ஆப்ப சோடா - சிட்டிகை

    அரைக்க:

    பச்சை மிளகாய் - 3,

    இஞ்சி - 1 துண்டு,

    பூண்டு - 3 பல்.

    செய்முறை:

    பேபிகார்னை மேல் பட்டை நீக்கி, கொதிக்கும் நீரில் 8 நிமிடம் போட்டெடுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளவர், கடலை மாவு, அரிசி மாவை போட்டு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு பேபிகார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    இப்போது சூப்பரான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி.

    • வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்தால் இந்த ரெசிபி செய்து அசத்தலாம்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 3,

    கடலை மாவு - 1 கப்,

    பெருங்காயம் - அரை டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிது,

    உப்பு - சுவைக்கேற்ப,

    எண்ணெய் - தேவையான அளவு,

    ஆப்பசோடா - சிட்டிகை.

    செய்முறை:

    வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும்.

    மாவுடன் எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை நன்கு பிசறி (இதழ் இதழாக பிரியும்படி) மாவில் சேர்த்து கலந்து காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.

    இப்போது சூப்பரான உதிர் வெங்காய பஜ்ஜி ரெடி.

    • பஜ்ஜி என்றாலே அனைவரது நாவில் இருந்தும் நீர் ஊறும்.
    • பன்னீர் பஜ்ஜி குழந்தைக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 200 கிராம்

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பன்னீரை வேண்டிய வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீர் துண்டுகளை கடலை மாவு கலவையில் நனைத்து, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான பன்னீர் பஜ்ஜி ரெடி!!!

    • கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும்.
    • கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும்.

    தேவையான பொருட்கள்

    கருணை கிழங்கு - 250 கிராம்

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

    ஆம்சூர் பவுடர் - கால் தேக்கரண்டி

    கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    கருணைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக நறுக்கி 5 நிமிடங்கள் வேக வைத்து உப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், அரிசி மாவு, ஆம்சூர் பவுடர், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்த பின்னர் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய கருணைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான கருணை கிழங்கு பஜ்ஜி ரெடி.

    ×