என் மலர்
நீங்கள் தேடியது "Balasubramaniya swamy"
- சூரசம்ஹாரம் மாலை 5 மணிக்கு முக்கிய ரத வீதிகளின் 3 இடங்களில் நடைபெறுகிறது.
- நாளை காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும்.
செங்கோட்டை:
செங்கோட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று இரவு சூரன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து யானை சூரன் முகம், சிங்க சூரன், மகா சூரன் முகம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருக பெருமானையும் சூரபத்மர்களையும் வழிபட்டுனர்.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மாலை 5 மணிக்கு முக்கிய ரத வீதிகளின் 3 இடங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நாளை காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.