என் மலர்
நீங்கள் தேடியது "Bangalore"
- பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
- பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர்.
பெங்களூரு:
தெலுங்கு வருட பிறப்பான யுகாதி நாளை கொண்டாடப்படுகிறது. இதே போல் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யுகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதன் காரணமாக பெங்களூரு பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஹூப்ளி, தார்வாட், பெலகாவி, பீதர், ராய்ச்சூர், கொப்பல், பெல்லாரி, கலபுரகி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் மக்கள் பெங்களூரு மெஜஸ்டிக் கெம்பேகவுடா பஸ்நிலையத்திலும், ரெயில் நிலையத்திலும் திரண்டனர். அவர்கள் அனைத்து ரெயில்கள் மற்றும் பஸ்களிலும் ஏறி இடம்பிடித்துக் கொண்டனர். இதனால் முன்பதிவு செய்தவர்கள் இடம் கிடைக்காமல் தவித்தனர்.
சாளுக்யா வட்டம், ஆனந்த்ராவ் வட்டம், மைசூரு சாலை, யஷ்வந்த்பூர், ஆர்.எம்.சி. யார்டு, தும்கூர் சாலை மற்றும் ஓசூர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மெதுவாக நகர்ந்தன.
பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர். மேலும் தனியார் பஸ்களும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி சென்றது. குறிப்பாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த 17 பஸ்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ரூ.9 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.
- ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழா நடைபெற்றது.
- காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது
கர்நாடகா தலைநகர் பெங்களூரு அடுத்த ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழாவின்போது 150 அடி உயர தேர் சாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது
இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு.
- அவரது பெயர் மற்றும் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை.
பெங்களூரு:
துபாயில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யாராவ் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து வரலாறு காணாத வகையில் தற்போது பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கத்தாரில் இருந்து நேற்று கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு பெண்ணின் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அதில் 3.2 கிலோ எடை கொண்ட கோகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.38.4 கோடி ஆகும். இதையடுத்து அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தி வந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவரது பெயர் மற்றும் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை. பெங்களூருவில் அவர் யாரிடம் சேர்க்க போதைப்பொருள் கடத்தி வந்தார் என்றும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
தங்க கடத்தல் வழக்கு பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.38.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கி இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மொத்தம் 3 ஆயிரத்து 193 எந்திரங்கள் உள்ளன.
- 15 ஆண்டுகள் நிறைவடைந்த எந்திரங்கள் மீண்டும் பயன்படுத்தாமல் அவற்றை அழிக்கப்பட உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 193 எந்திரங்கள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி 2008-ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்த எந்திரங்கள் மீண்டும் பயன்படுத்தா–மல் அவற்றை அழிக்கப்பட உள்ளது.
இதற்காக இன்று நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் இருந்து மின்னணு எந்திரங்கள் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் எடுக்கப்பட்டு, கண்டெய்னர் லாரி மூலமாக பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக வளர்ச்சி பிரிவு மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் செய்திருந்தனர்.
- 15 ஆண்டுகளான வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்றது.
- பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தே ர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ராயபுரம் பகுதியில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பலத்த பாதுகா ப்புடன் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி 15 ஆண்டுகளான வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் 15 வருடங்களுக்கு மேலான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்க ப்பட்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன.
- நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம்.
தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சசிகலா, அவருடைய அண்ணி இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் நிறைவுற்ற நிலையில், பொருட்களை ஏலம் விடுமாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம் என்று பெங்களூரு நீதிமன்றம் தெரிவித்தது.
அந்த வகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி நகைகளை மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளலாம் என்று பெங்களூரு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி பெங்களூருவில் இருந்து 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள் மொத்தமாக 6 பெட்டகங்களில் தமிழகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது தமிழகம் வரவிருக்கும் ஜெயலலிதா நகைகளின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும். இந்த வழக்கில், வழக்கு கட்டணமாக ரூ. 5 கோடியை கர்நாடகாவுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- கணவனை கத்தியால் மனைவி குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- அதிகாலை 1.30 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் கிரணை, கத்தியால் குத்தியுள்ளார் மனைவி
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருமண நாளுக்கு பரிசு தராத கணவனை கத்தியால் மனைவி குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிரண். இவரது மனைவி சந்தியா (வயது35). சமீபத்தில் இவர்களுக்கு திருமண நாள் வந்துள்ளது. அந்நாளில், மனைவிக்கு கிரண் பரிசு வாங்கித் தரவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தியா, கணவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே சண்டையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன் கிரண் தூங்க சென்றார். அதிகாலை 1.30 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் கிரணை, கத்தியால் ஆத்திரத்தில் குத்தியுள்ளார் மனைவி சந்தியா.
இதனால் ரத்த வெள்ளத்தில் அலறிய கணவன் கிரணை அக்கம் பக்கத்தினர் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
கிரணின் தாத்தா சம்பவ தினத்துக்கு முந்தைய நாள்தான் இறந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனால், மனைவிக்கு மணநாள் பரிசு வாங்கித் தரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கணவனை கத்தியால் குத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர் .மேலும் அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர்.
- நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொடிகேஹள்ளி பகுதியில் ஹந்தாராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.
ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த ஹந்தாராமை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
நகைக்கடைக்குள் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது.
- திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.
இந்தியாவில் வாகனத் திருட்டுகள் 2022-ம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது, 2023-ம் ஆண்டில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என அக்கோ டிஜிட்டல் இன்சூரன்ஸின் 'தெப்ட் அண்ட் தி சிட்டி 2024' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது. இந்தியாவில் அதிகளவிலான வாகனங்கள் திருடு போகும் நகரங்களில் டெல்லி தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.
இந்தியாவில் திருடப்பட்ட வாகனங்களில் 80% கார்கள் ஆகும். திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.
டெல்லியில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுகிறது. டெல்லியில் மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் தான் அதிகளவில் திருடு போகின்றது. அதைத் தொடர்ந்து ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் ஆகியவை உள்ளன.
சென்னையில் 2022 -ம் ஆண்டு 5% ஆக இருந்த வாகன திருட்டுகள் 2023-ம் ஆண்டில் 10.5% ஆக இரட்டிப்பாகியுள்ளது. பெங்களூரிலும் வாகனத் திருட்டுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
- நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
- தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.
கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
பெங்களூருவில் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற குடிநீர் வாரியத்தின் உத்தரவை மீறும் ஒவ்வொரு குடும்பமும் ரூ.5,000 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) 22 வீடுகளிடம் இருந்து ரூ. 1.1 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.
இதைத்தவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் குடிநீர் பற்றாக்குறை நெருக்கடியை மனதில் வைத்து, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பரிந்துரைத்தது. வாகனங்களை கழுவுதல், கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.
மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள், ஒவ்வொரு முறையும் உத்தரவை மீறும்போது கூடுதலாக ரூ.500 அபராதம் விதிக்க வாரியம் முடிவு செய்துள்ளது.
கடுமையான தண்ணீர் பற்றாக்குறை பெங்களூருவை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. நகரவாசிகள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரு முறை பயன்படுத்தும் தட்டில் சாப்பிடுவதும், மால்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நெருக்கடியில் இருந்த வருகின்றனர்.
- பைஜூஸ் ஊழியர்கள் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளனர்
- இதனால் அந்நிறுவன ஊழியர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
2011-ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு ரவீந்திரன் என்பவரால் பைஜூஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.
ஆன்லைன் எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட பைஜூஸ், கல்வி உலகில் மாபெரும் நிறுவனமாக 2020 களில் வளர்ந்தது. கொரோனா காலத்தில் பலரும் ஆன்லைனில் கல்வி பயின்றதால், பைஜூஸ் நிறுவனம் பெரும் வளர்ச்சி அடைந்தது.
மேலும் 'போர்ப்ஸ்' பணக்கார பட்டியலில் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் இடம் பிடித்தார்.கோடிகளில் புரண்ட பைஜூஸ் நிறுவனம் கொரோனா காலம் முடிந்த பின்னர் சிக்கலை சந்திக்க தொடங்கியது.
கடந்த 2022 -ம் ஆண்டு முதல் பல்வேறு சிக்கல்கள் ஆரம்பித்தன. குறிப்பாக கணக்கு முறைகேடுகள், தவறான நிர்வாக அணுகுமுறை, பணி நீக்கம், வருவாய் இழப்பு, கடன் சுமை, அடுத்தடுத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விலகல் என பெரிய சிக்கல்களை சந்தித்தது பைஜூஸ் நிறுவனம்.

மேலும் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் எழுந்ததால், ரவீந்திரனின் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சோதனை நடந்தது.
பைஜூஸ் ஊழியர்கள் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளனர்.வாடகை கூட செலுத்த முடியாமல் பெங்களூருவில் உள்ள தனது பிரம்மாண்ட அலுவலகத்தை காலி செய்து உள்ளது
இந்த சூழலில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.17,545 கோடியாக இருந்தது. இன்று அவரது சொத்து மதிப்பு பூஜ்ஜியமாக சரிந்தது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
- சுரேஷ் என்பவர் தனக்கு திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி அனுஷா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
- ஜெ.பி.நகர் அருகில் உள்ள சராக்கி பூங்காவுக்கு நேற்று மாலை 4:15 மணிக்கு அனுஷாவும் சுரேசும் சந்தித்து பேசினர்
பெங்களூரில் கோரகுண்டேபாலயா பகுதியை சேர்ந்த 45 வயதான சுரேஷ் என்பவரும் ஜேபி நகரைச் சேர்ந்த 24 வயதான அனுஷாவும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது சுரேஷ் தனக்கு திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி அனுஷாவுடன் பழகி வந்துள்ளார். ஆனால் சுரேசுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்தபிறகு அனுஷா அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெ.பி.நகர் அருகில் உள்ள சராக்கி பூங்காவுக்கு நேற்று மாலை 4:15 மணிக்கு அனுஷாவும் சுரேசும் சந்தித்து பேசினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால், அனுஷாவை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.
அந்த சமயத்தில் அனுஷாவை பின்தொடர்ந்து வந்த அவரது தாயார் கீதா, சுரேஷை தடுத்து நிறுத்த ஓடியிருக்கிறார். அப்போது அங்கிருந்த செங்கல்லை எடுத்து சுரேஷின் தலையில் அவர் அடித்தார். இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன் பிறகு தனது மகளை கீதா மருத்துவமனைக்கு அழைத்துவந்த போது, அங்கே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.