என் மலர்
முகப்பு » bargur accident
நீங்கள் தேடியது "Bargur accident"
பர்கூர் அருகே இன்று அதிகாலை முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி:
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தன பாண்டியன் (வயது 30). இவரது மனைவி ரஞ்சிதா(26). இவர்களுக்கு பாக்யஸ்ரீ (7), காவியாஸ்ரீ(3) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
சந்தனபாண்டியன் காரில் தனது மனைவி மற்றும் மகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மாமனார் நடராஜ் வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை மீண்டும் அவர்கள் சென்னைக்கு காரில் புறப்பட்டனர். அவர்களுடன் நடராஜூம் உடன் சென்றார். காரை சந்தனபாண்டியன் ஓட்டிசென்றார்.
கார் பர்கூரை அடுத்த ஒப்பதவாடி கூட்ரோடு பகுதிக்கு வந்தது. அப்போது கார் திடீரென்று கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் ரஞ்சிதாவும், அவரது தந்தை நடராஜூம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சந்தனபாண்டியனும், அவரது 2 மகள்களும் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ரஞ்சிதா மற்றும் நடராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

×
X