என் மலர்
நீங்கள் தேடியது "basket"
- ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வார்டுகளிலும் சிறப்பு துப்புரவு முகாம்.
- குப்பைகளை சேகரித்து இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் பணி.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அலுமினிய கூடை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு தலைமை தாங்கினார். பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் 38 துப்புரவு பணியாளர்களுக்கு அலுமினிய கூடை வழங்கி பேசுகையில், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வார்டுகளிலும் சிறப்பு துப்புரவு முகாம் மக்களை இணைத்து உறுதிமொழி எடுக்கப்படுகிறது.
மக்கும் குப்பைகளை தனியே சேகரித்து இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. இப்பணி சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கும் பாலம் தொண்டு நிறுவனத்திற்கு நன்றி, என்றார். நிகழ்ச்சியில் பிரிவு அலுவலர் செந்தில்குமார், மேற்பார்வையாளர்கள் வீரையன், பெரமையன் ஈஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.