search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bathing in"

    • மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் குறைந்தது.
    • இன்று முதல் வழக்கம் போல் கொடி வேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    கோபி:

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை, கரூர் மற்றும் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து அணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்கிறார்கள்.

    இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் கோபி செட்டிபாளை யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இதையொட்டி பவானி ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. மேலும் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் அதிகளவு சென்றது.

    இதனால் கடந்த 2 நாட்களாக கொவேரி தடுப்பணையில் குளிப்ப தற்கும், ரசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அணைக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் குறைந்தது. அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கொடிவேரி தடுப்பணையிலும் தண்ணீர் குறைந்தது. இதனால் 2 நாட்களுக்கு பிறகு இன்று முதல் வழக்கம் போல் கொடி வேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி இன்று காலை குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    • கடந்த 28 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் வழி முறைகளை கடை பிடித்து பாதுகாப்புடன் தடுப்பணை யில் குளிக்க வேண்டும்

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப் பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்ப த்துடன் வருவார்கள். அவர்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

    இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து ஆற்றில் அதிகமாக தண்ணீர் திறந்து விட ப்பட்டது. இதனால் கொடி வேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. மேலும் பொது மக்கள் குளிக்கும் இடங்க ளிலும் தண்ணீர் அதிகளவு சென்றது.

    இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அணைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. ஆற்றிலும் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொடி வேரி தடுப்பணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    இதையொட்டி கடந்த 28 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் குறைந்து உள்ளதால் இன்று முதல் பொது மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    எனவே சுற்றுலா பயணிகள் வழி முறைகளை கடை பிடித்து பாதுகாப்புடன் தடுப்பணை யில் குளிக்க வேண்டும் என்றனர்.

    இதையொட்டி இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் வந்து கொடிவேரி தடுப்பணைக்கு வந்து பார்த்து ரசித்தனர்.

    மேலும் பலர் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன்களை ருசித்து விட்டு சென்றனர்.

    ×