search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BCB"

    • ஷேக் ஹசீனா கட்சியின் எம்பியாக ஷகிப் அல் ஹசன் இருந்தார்.
    • மாணவர்கள் போராட்டத்தின் போது ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் உள்ளார்.

    மாணவர்கள் போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    மாணவர்கள் போராட்டத்திற்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.

    கலவரத்தின்போது கனடாவில் நடந்த குளோபல் டி20 லீக்கில் ஷகிப் அல் ஹசன் விளையாடி கொண்டிருநதார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை. .

    இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன், நாடு திரும்பினால் எந்த துன்புறுத்தலும் இருக்காது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.

    இதனையடுத்து, அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக வங்கதேசத்திற்கு ஷகிப் அல் ஹசன் திரும்ப உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    • வங்காளதேசம் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ஆலன் டொனால்ட் செயல்பட்டு வருகிறார்.
    • இவரது ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பை வரை இருந்தது.

    வங்காளதேசம் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் எதிர்வரும் 2023-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை வரையில் இருப்பார் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக டொனால்ட் நியமிக்கப்பட்டார். இவரது ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பை வரை இருந்தது. பின்னர் பிசிபி தனது ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடர் வரை நீட்டித்தது.

    இந்தியாவுக்கு எதிராக வங்காள தேச அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இந்நிலையில் டொனால்டின் ஒப்பந்தம் உலகக் கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிசிபி கிரிக்கெட் இயக்கத் தலைவர் ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் விளையாட ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பிசிபி தடைவிதித்துள்ளது. #BPL #BCB
    வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் வங்காளதேசம் பிரிமீயர் லீக் டி20 தொடரை நடத்தி வருகிறது. அடுத்த சீசன் ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான கொமிலா விக்டோரியன்ஸ் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை ஏலத்தில் எடுத்திருந்தது.

    சோயிப் மாலிக் தொடரின் மத்தியில் சர்வதேச அணிக்கு திரும்ப இருக்கிறார். இதனால் கொமிலா விக்டோரியன்ஸ் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்தை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. இதற்கு மற்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில் வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் ஸ்மித் விளையாடுவதற்கு வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தடைவிதித்துள்ளது.



    இதுகுறித்து பிசிபி தலைவர் நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில் ‘‘வங்காள தேசம் பிரிமீயர் லீக்கின் விதிப்படி, ஒரு அணி மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அவருடைய பெயர் வீரர்களின் ஏலத்திற்கான தொடக்க வரைவு பட்டியலில் இடம்பெற வேண்டும். ஆனால், ஸ்மித் பெயர் தொடக்க வரைவில் இல்லை.

    ஸ்மித் விளையாடுவதற்கு சில அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆகவே, நாங்கள் வங்காளதேசம் பிரிமீயர் லீக்கில் விளையாட அவருக்கு தடைவிதித்துள்ளோம்’’ என்றார்.
    வங்காள தேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் மெக்கென்சி நியமிக்கப்பட்டுள்ளார். #BCB
    வங்காள தேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகர் பதவி காலியாகவே இருந்து வந்தது. சுமார் ஓராண்டிற்குப் பிறகு தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் நீல் மெக்கென்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

    தற்போது வங்காள தேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. அப்போது மெக்கென்சி அணியுடன் இணைவார்.



    வங்காள தேச அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீவ் ரோட்ஸ், பந்து வீச்சு ஆலோசகராக ரியால் குக் ஆகியோர் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் திலன் சமரவீரா பேட்டிங் ஆலோசகராக இருந்துள்ளார். அவர் சென்ற பின்னர், சைமன் ஹெல்மோட் இடைக்கால ஆலோசகராக பணியாற்றினார். #BCB #NeilMcKenzie
    ×