search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beach road"

    • அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    • பிரெஞ்சு தூதரகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    1789-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சி மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு வந்தது.

    மக்களாட்சியை நிறுவிய இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஜூலை 14-ந் தேதியான நேற்று புதுவை பிரெஞ்சு தூதரகத்தில் தேசிய தின விழா நடந்தது.

    விழாவுக்கு பிரெஞ்சு துணை தூதர் லிசே போட் பரே தலைமை தாங்கி பிரெஞ்சு தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து இசை நிகழ்ச்சியும், விருந்தும் நடந்தது. விழாவிற்கு முக்கிய பிரமுகர்கள், பிரெஞ்சு குடிமக்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.

    அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி பிரெஞ்சு தூதரகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் எதிரே வண்ண வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    • கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது.
    • போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை:

    சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 12-வது சென்னை மாரத்தான் இன்று நடந்தது. சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் பிரஷ் ஒர்க்ஸ் நிறுவனம் ஆதரவுடன் இந்த போட்டி நடந்தது. முழு மாரத்தான் (42.195 கிலோ மீட்டர்), பெர்பெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ.), அரை மாரத்தான் (21.097 கி.மீ.) மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டம் என 4 பிரிவுகளில் நடைபெற்றது.

    முழு மாரத்தான் பந்தயம் மெரீனா கடற்கரையில் உள்ள நேப்பியர் பாலத்தில் தொடங்கியது. கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது. பெர்பெக்ட் மைலர், 10 கிலோ மீட்டர் ஆகியவையும் நேப்பியர் பாலத்தில் இருந்துதொடங்கியது. அரை மாரத்தான் போட்டி எலியட்ஸ் கடற்கரை பகுதியில் இருந்து தொடங்கியது.

    4 பிரிவில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    • புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது.
    • மீண்டும் செந்நிறமாக மாறிய கடல்

    புதுச்சேரி;

    புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. மேலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலைக்கு செல்ல போலீசார் தடை விதித்தனர்.

    இந்த நிலையில் இன்று புதுவையில் மழை நின்று, வெயில் அடிக்க தொடங்கியது. கடல் சீற்றமும் குறைந்தது. இதையடுத்து கடற்கரை சாலைக்கு செல்ல பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் அனுமதித்தனர்.

    இதனால் புதுவைக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் கடற்கரையில் நடந்து சென்று கடல் அழகை ரசித்தனர். அதேநேரத்தில் கடலில் வாழைகுளம் முதல் தலைமை செயலகம் வரையில் ஒரு பகுதி செந்நிறமாக காட்சி அளித்தது. ஏற்கனவே 4 முறை கடலின் நிறம் மாறியுள்ளது. இன்று 5-வது முறையாக கடல் நிறம் மாறி காட்சி அளித்தது.

    • புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது அழகிய கடற்கரை சாலைதான்.
    • கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது அழகிய கடற்கரை சாலைதான். பழைய சாராய ஆலையிலிருந்து டூப்ளே சிலை வரையிலான 1 1/2 கி.மீ. அழகிய கடற்கரை சாலை புரமனேடு பீச் என அழைக்கப்படுகிறது.

    கடற்கரை சாலையில் தலைமை செயலகம், பிரெஞ்சு போர்வீரர்கள் நினைவிடம், கார்கில் நினைவிடம், அம்பேத்கர் மணிமண்டபம், காந்தி சிலை, நேரு திடல், சுங்கத்துறை அலுவலகம் என அழகிய கட்டிடங்கள், நினைவிடங்கள் உள்ளது.

    இந்த கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. வாகன போக்குவரத்து இல்லாத கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்த களம் அமைத்து தருவதுதான் ஹேப்பி ஸ்ட்ரீட்டின் நோக்கமாகும்.

    ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள திறமைகளை வெளிப்படுத்த விரும்புவோர் இந்த சாலையை பயன்படுத்தலாம். நடனம், நாட்டியம், ஓவியம், வேடிக்கை, விளையாட்டு என எதில் தனி திறமை இருந்தாலும், குழு திறமை இருந்தாலும் மக்கள் முன்பு வெளிப்படுத்தலாம்.

    பொதுமக்கள் பாதிக்காத வகையில் ஒரு சிறிய இடம் ஒதுக்கி தரப்படும். அதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். வெளி நாடுகளில் உள்ளதுபோல புதுவை கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற சுற்றுலாத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • தூத்துக்குடி மாநகரின் பிரதான சாலைகளை இணைக்கும் 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.
    • இந்த பணிகள் நிறைவுபெற வருகிற 10-ந் தேதி வரை ஆகும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகரின் பிரதான சாலைகளை இணைக்கும் 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது. அதனை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

    பராமரிப்பு பணி

    அப்போது அவர் கூறுகையில், இந்த பணிகள் நிறைவுபெற வருகிற 10-ந் தேதி வரை ஆகும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 2-ம் கேட் மற்றும் 4-ம் கேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. ஆகையால் போக்குவரத்து நெரிசலை தவிர்பதற்காக 2-ம் கேட் மற்றும் 1-ம் கேட் வழியாக செல்லும் பொதுமக்கள் பீச் ரோட்டையும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றார்.

    தொடர்ந்து, கலைஞர் டேங்கில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் கலந்து கொண்டார்,அப்போது முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை தாங்கி நிற்கும் இந்த டேங்கில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மகிழ்ச்சி

    எனது தந்தை சட்டமன்ற உறுப்பினராகவும், நகர்மன்ற தலைவராகவும் இருந்த போது கடந்த 1989-ம் ஆண்டு மே மாதம் 30-ந்தேதி அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பெயரில் திறந்து வைத்தார்.

    இன்று மாநகரத்தின் மேயராக இங்கு நடைபெற்ற விழாவில் நான் கலந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. இவ்விழாவில் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம், செல்வம், அனைத்து விதமான காரியங்களிலும் வெற்றி கிடைக்க இறைவனை வேண்டினேன் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    நிகழ்ச்சியில், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜோஸ்பர், பிரபாகர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தாயுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டதாக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கோவிந்தசாலை நேரு நகரை சேர்ந்தவர் பழனிவேலு. இவர் தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவரது மகள் காயத்ரி (16). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை தனலட்சுமி தனது மகள் காயத்ரியுடன் கடற்கரை சாலையில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு மொபட்டில் சென்றார்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு வீட்டுக்கு செல்வதற்காக காயத்ரியை ஒரு இடத்தில் நிற்க சொல்லி விட்டு தன லட்சுமி மொபட்டை எடுத்து வர சென்றார். சிறிது நேரம் கழித்து தனலட்சுமி மொபட்டை எடுத்து கொண்டு வந்து பார்த்த போது மகளை காணாமல் தனலட்சுமி திடுக்கிட்டார். பல இடங்களில் தேடியும் எங்கும் காயத்ரி இல்லை.

    இதையடுத்து தன லட்சுமி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் காயத்ரியை யாரோ கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் உப்பளம் நேதாஜி நகர் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் தாஜேஸ்வரி (23). இவர் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த தாஜேஸ்வரியை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் தாஜேஸ்வரி இல்லை.

    இதையடுத்து ஜெயராமன் தனது மகள் மாயமானது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×