என் மலர்
நீங்கள் தேடியது "beard"
- தாடி என்பது சீக்கியர்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
- மூன்றாவது முறையாக சாதனைப் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
சுவீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்திருந்தார். இதுதான் ஏற்கனவே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கடந்த 2008-ல் ஆண்டு கனடாவில் வசிக்கும் சீக்கியர் சர்வன் சிங் முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.
அப்போது சர்வன் சிங் தாடியின் நீளம் 7 அடி 8 அங்குலமாக இருந்தது. அதன் பிறகு கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலியில் நடந்த சாதனை நிகழ்ச்சியில் அவரது தாடியை அளந்து பார்த்தனர். அப்போது அது 8 அடி 2.5 அங்குலமாக வளர்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் சர்வன் சிங் மீண்டும் தனது கின்னஸ் சாதனையை தானே முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது தாடியை அளந்த போது அது 8 அடி 3 அங்குலமாக வளர்ந்து காணப்பட்டது. இதன் மூலம் தனது சாதனையை தானே மீண்டும் முறியடித்துள்ளார். மூன்றாவது முறையாக சாதனைப் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது என்று கின்னஸ் உலக சாதனை புதன்கிழமை மார்ச் 22, 2023 தெரிவித்துள்ளது.
அவரது தாடி இதற்கு முன்பு கருப்பாக காணப்பட்டது. ஆனால் தற்போது நரைத்த நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து சர்வன் சிங் கூறியதாவது:-
நான் 17 வயது முதல் தாடியை வளர்த்து வருகிறேன். இதுவரை ஒரு தடவை கூட தாடியை வெட்டியதில்லை. தாடி என்பது சீக்கியர்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். எனவே இந்த தாடியை கடவுளின் பரிசாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லிக்காய் மற்றும் மோர் ஆகியவற்றால் மாதத்திற்கு ஒரு முறை தாடியை கழுவுவேன்.
- பீகானேரில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று மிக நீளமான தாடி வளர்த்தவர் என்ற விருதை பெற்றுள்ளேன்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்திரபிரகாஷ் என்பவர் மாநிலத்திலேயே நீளமான தாடி வைத்துள்ள நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 3 அடி நீளம் கொண்ட தாடியை வளர்த்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் என்னுடைய தாடியை பராமரிக்க தினமும் ஒரு மணி நேரம் எடுத்து கொள்கிறேன். கடந்த 7 வருடங்களாக ஷேவ் செய்யாமல் தாடியை வளர்த்து வருகிறேன். நெல்லிக்காய் மற்றும் மோர் ஆகியவற்றால் மாதத்திற்கு ஒரு முறை தாடியை கழுவுவேன். குளிக்கும் போது கண்டிஷனரையும் தடவுவேன். இந்த பொருட்களை தவிர தாடியை நல்ல நிலையில் வைத்திருக்க தேங்காய் மற்றும் எள் எண்ணையையும் தடவுவேன்.
பீகானேரில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று மிக நீளமான தாடி வளர்த்தவர் என்ற விருதை பெற்றுள்ளேன். இந்த போட்டிகள் நீண்ட தாடியை பராமரிக்கும் எனது ஆர்வத்திற்கு ஊக்கத்தை அளித்தது. நான் வேலை செய்யும் இடத்திற்கு செல்ல பஸ் மூலம் தினமும் 50 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். எனது பணி இடத்திற்கு செல்லும் போது தாடியை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனித்து கொள்கிறேன் என்றார்.
- உடலின் ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணம் சிறந்த தூக்கம்.
- டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டினாலும் முடிவளர்ச்சி குறையும்.
ஆண்கள் பலருக்கும் அதிக மீசை, தாடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதுள்ள காலக்கட்டத்தில் ஏணைய ஆண்களுக்கு மீசை, தாடி அடர்த்தியாக வளருவதில்லை. இதற்கு மோசமான உணவுப் பழக்கம், தவறான உணவு முறை உள்ளிட்ட பல காரணங்களால் மீசை, தாடி வளர்ச்சியில் தாமதம் ஏற்படுகிறது.
அதேபோல் குறிப்பாக சோப்பு, முகத்தில் தடவும், கிரீம், வேலை பார்க்கும் இடத்தின் சுற்றுச்சூழல் நிலை போன்ற காரணங்களாலும் மீசை தாடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரிசெய்ய என்ன செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

புரோட்டீன் நிறைந்த உணவுகள்
மீசை தாடி வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருந்தாலும் மீசை, தாடி வளர்ச்சியில் பிரச்சனை இருக்காது. இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பீன்ஸ், மீன், முட்டை, பால் உள்ளிட்ட உணவுகளை உங்கள் உணவு முறையில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

விளக்கெண்ணெய்
மீசை மற்றும் தாடி அடர்த்தியாக வளருவதற்கு மற்றொரு மிக எளிதான வழி விளக்கெண்ணெய் கொண்டு தினமும் 15 நிடமிடம் நன்கு மசாஜ் செய்வது நல்லது.
தூக்கம்
தூக்கம் உடலுக்கு மிக முக்கியம். உடலின் பல ஆரோக்கிய நன்மைகள் தூக்கத்தை பொறுத்தே இருக்கிறது. அதேபோல் மீசை, தாடி வளர்ச்சிக்கும் தூக்கம் மிக முக்கியம்.
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்
டெஸ்டோஸ்டிரோன் என்ற ஆண்களுக்கான ஹார்மோன் குறைவாக இருந்தாலும் முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். காரணம் இந்த ஹார்மோன் தான் முடி வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
இந்த ஹார்மோனை அதிகரிக்க மீன், முட்டை, வேர்க்கடலை, எள் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்

ஹேர் க்ரீம்
ரோஸ்மேரி ஆயில், ஆப்பிள் சிடர் வினிகர், கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து 10 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பின்பு கழுவினால். மீசை, தாடி வளர்ச்சிக்கு நன்கு உதவும்.
தண்ணீர்
உடலில் டாக்ஸின் அல்லது வறட்சி இருந்தாலோ முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். இதன்காரணமாக தினசரி குறைந்தது 8 கிளாஸ் அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம்.
மன அழுத்தம்
மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் மீசை, தாடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் தலைமுடி நரைப்பதற்கும் இது முக்கிய காரணமாகும்.
- இந்தூரில் 'காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்' என பதாகைகள் ஏந்தி இளம்பெண்கள் பேரணி
- தாடி வைத்த ஆண்கள் அழகா? அல்லது தாடி வைக்காத ஆண்கள் அழகா? என இணையத்தில் விவாதம்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் 'காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்' என பதாகைகள் ஏந்தி இளம்பெண்கள் பேரணியாக சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் பல்வேறு பதாகைகளை பெண்கள் ஏந்தி சென்றுள்ளனர். குறிப்பாக 'தாடியை நீக்கி காதலை காப்பாற்று' (Remove beard, save love) என்ற பதாகையையும் கிளீன் சேவ் செய்யவில்லையெனில் காதலிக்கமாட்டோம் (No Clean Shave, No Love) என்ற பதாகையையும் , தாடி வேண்டுமா காதலி வேண்டுமா முடிவு உங்கள் கையில் (Keep a beard or keep a girlfriend, the choice is yours) என்ற பதாகையையும் பெண்கள் ஏந்தி சென்றனர்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, தாடி வைத்த ஆண்கள் அழகா? அல்லது தாடி வைக்காத ஆண்கள் அழகா? என இணையத்தில் நெட்டிசன்கள் காரசாரமாக விவாதம் நடத்தினர்.
இந்த பேரணி உண்மையான பேரணியா? இல்லை ரீல்ஸ்காக எடுக்கப்பட்ட வீடியோவா? என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை.
- தாடியை ஷேவ் செய்யாத மாணவர்களுக்கு அப்சென்ட் போடுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
- இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் தங்கள் தாடியை ஷேவ் செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வற்புத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
நர்சிங் கல்லூரியில் படிக்கும் காஷ்மீரி மாணவர்கள் வகுப்புகள் மற்றும் மருத்துவ பணிகளில் பங்கேற்ப தங்களது தாடியை ஷேவ் செய்ய வேண்டும் அல்லது மிக குறைவான அளவு தாடி இருக்குமாறு ட்ரிம் செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தாடியை ஷேவ் செய்யாத மாணவர்களுக்கு மருத்துவ அமர்வுகளின் போது அப்சென்ட் போடுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், "கல்லூரியின் வழிகாட்டுதல்கள் மாணவர்களின் கலாச்சார மற்றும் மத உரிமைகளை மீறுவதாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் காஷ்மீரி மாணவர்களுடன் கலந்து பேசி அவர்கள் தாடி வைத்துக்கொள்ள எந்த தடையும் இல்லை என்று தெரிவித்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது.
