என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "B.Ed."

    • 2022-2023-ம் கல்வி ஆண்டில் பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கு 4-வது பருவத்துக்கான வகுப்புகள் கடந்த வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தன.
    • இதையடுத்து வெள்ளிக்கி ழமை முதல் பருவ விடு முறை விடப்படுகிறது.

    சேலம்:

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க ழகத்தின் இணைப்பு அங்கீ காரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கு 4-வது பருவத்துக்கான வகுப்புகள் கடந்த வியா ழக்கிழமையுடன் நிறைவடைந்தன.

    இதையடுத்து வெள்ளிக்கி ழமை முதல் பருவ விடு முறை விடப்படுகிறது. தொடர்ந்து 4-வது பரு வத்துக்கான (இறுதிப் பருவம்) எழுத்துத்தேர்வு களை ஜூன் 2-வது வாரத்தில் நடத்த திட்ட மிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடை பெற்று வருகின்றன.

    இறுதி பருவத் தேர்வுக்கான விரிவான கால அட்டவணை பல்க லைக்கழக தேர்வுத் துறை யால் விரைவில் வெளி யிடப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

    12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு முதல் நேரடியாக பி.எட் பட்டப்படிப்பில் சேரும் வகையில் தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. #MonsoonSession
    புதுடெல்லி:

    தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 5 ஆண்டு பி.எட் பட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 12-ம் வகுப்பு முடித்த உடன் பிஏ.பி.எட்., பிஎஸ்சி.பி.எட் மற்றும் பிகாம்.பி.எட் ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்.

    பாராளுமன்றத்தில் இதன் மீதான இன்றைய விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12 முடித்தவுடன் நேரடியாக பி.எட் சேர முடியும் என தெரிவித்தார். 

    ஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இது போன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 
    ×