என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "begging"
- சொத்தை எழுதி வைக்கக்கோரி தந்தை தாயை பிள்ளைகள் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.
- சாப்பாடு கேட்டால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் பிச்சையெடுக்க சொல்கினறனர்
பெற்ற பிள்ளைகள் சோறு போடாமல் அடித்து துன்புறுத்தியதால் வயதான தாய்-தந்தை ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் ஹாசாரிராம் பிஸ்னாய் [70 வயது] மற்றும் அவரது, மனைவி சாவ்லி தேவி [68 வயது]. இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
தங்கள் பெயரில் சொத்தை எழுதி வைக்கக்கோரி தந்தை தாயை பிள்ளைகள் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருவரும் குதித்து தற்கொலை செய்துள்ளனர். அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேப்பரில் எழுதி வீட்டின் சுவரில் ஒட்டிவைத்துள்ளனர்.
அதில், 'மகன்கள், மகள்கள் என நால்வரும் சேர்ந்து சொத்துக்காக எங்களைத் துன்புறுத்துகின்றனர். எங்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எங்களுக்கு போதுமான உணவு அளிப்பதில்லை. இதுகுறித்து கேட்டதற்கு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் பிச்சையெடுக்க சொல்கினறனர்' என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும் மகன்கள், தாய் தந்தையை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதை யாரிடமாவது சொன்னால் தூக்கத்திலேயே கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியதாக அந்த தற்கொலை கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. வீட்டின் தண்ணீர் தொட்டியிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
#WATCH | Rajasthan: Elderly couple found dead at their house in Nagaur.(Visuals from the spot) pic.twitter.com/yfq0JvYZn8
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 11, 2024
இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை அன்று உயிரிழந்தவர்களின் மகன்களில் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் 'தற்கொலை செய்துகொண்டு பழியை எங்கள் மீது போட்டுவிடுவோம்' என்று தங்களை மிரட்டுவதாகத் தாய் தந்தை மீது புகார் கொடுத்திருக்கிறார்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்
- நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்
அரசு வழங்கும் நிவாரணத் தொகையை 'பிச்சை' எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
"வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, ₹1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை" என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பட்டினியை அனுபவித்தவனுக்குதான் பசியின் கொடுமை புரியும். வெயிலின் கொடுமையைப் பார்த்தவனுக்குதான் கூரையின் அருமை தெரியும். மானம் மறைக்க கந்தல் ஆடை இல்லாதவனை இழிவாக பார்ப்பவர்களுக்கு ஏழையின் வறுமை புரியாது. நிர்மலா சீதாராமனின் ஆணவம் ஏழைகளை முன்னேற்றாது. வயிறார உணவு, ஒழுகாத கூரை வீடு, அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை அடிப்படை உரிமைகள் என்பதை தத்துவமாக கொண்ட சமதர்ம கொள்கையே திமுகவின் கொள்கை என்று பதிவிட்டுள்ளார்.
- மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது.
- 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.
தாராபுரம்,செப்.25-
திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர். அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் அதற்கு உரிய வட்டியை சேர்த்து அவர்களுக்கு வழங்க வேண்டும் என 2019-ம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஜப்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நூதன போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்று 47-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில் மண்டியிட்டுபிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விரைவில் சென்னை தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈசன் முருகசாமி ,பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன் ,திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ,திருப்பூர் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பாலு ,திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வடிவேல் மற்றும் விவசாயிகள் 75க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியைச் சேர்ந்த காமராஜ் மகன் சங்கர் (வயது 32). பட்டதாரி வாலிபரான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களது குடும்பத்தில் நேர்ந்த அடுத்தடுத்த துயர சம்பவங்களால் பெற்றோர் உயிரிழந்தனர்.
இதனால் சங்கர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார். உறவினர் யாரும் கண்டு கொள்ளாததால் தெருக்களில் பிச்சை எடுத்து பொதுமக்கள் தரும் காசுகளை வைத்து டீ மட்டும் குடித்து வருவார்.
மேல் சட்டை அணியாத நிலையில் கைலி மட்டும் அணிந்து தெருக்களில் சுற்றி வரும் இவரை காண்பதற்கு பரிதாபமாக இருக்கும். அரசு சார்பில் சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் தெருக்களில் இதுபோல சுற்றித்திரியும் வறியவர்களை மீட்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளித்து வருகின்றனர்.
ஆனால் பல வருடங்களாக இதே பகுதியில் சுற்றி வரும் இந்த வாலிபரை யாரும் கண்டு கொள்ள வில்லை. தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இது போல கேட்பாரற்ற வறியவர்கள் சுற்றித் திரிகின்றனர்.
ஆண்களை விட பெண்கள் மற்றும் முதியவர்களின் நிலைமை மிகவும் கவலை தரும் நிலையாக உள்ளது. எனவே அதிகாரிகள் இது போன்றவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மறு வாழ்வு அளிக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி பிச்சைக்காரர்கள் மற்றும் வறியவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர் ராஜு. விவசாயியான இவருக்கு கிழக்கு கோதாவரி மாவட்டம் மாதவரம் கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை அவரது உறவினர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து உள்ளதாக கூறி வருவாய்த்துறையில் புகார் செய்தார். நிலத்தை மீட்டு கொடுக்க அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
தங்களது கழுத்தில் “அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. எனவே எங்களுக்கு பிச்சை போடுங்கள்” என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை மாட்டியபடி பிச்சை எடுத்தனர்.
இதுகுறித்து அவர் கூறும் போது, “எனது 25 ஏக்கர் நிலத்தை உறவினர்கள் பறித்து விட்டனர். அதை மீட்க 2 ஆண்டுகளாக போராடி வருகிறேன். லஞ்சப் பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அதிகாரி கூறுகிறார். பணம் இல்லாத எனக்கு பிச்சை எடுப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.
தயவு செய்து எனக்கு பிச்சை போடுங்கள். அப்போதுதான் நான் லஞ்சப் பணத்தை கொடுக்க முடியும். லஞ்சம் கொடுத்தால் எந்த பணியும் நடக்கும். நான் லஞ்சம் கொடுக்காததால் எனது நிலத்தை இழந்து விட்டேன்.
இதனால் பிச்சை எடுத்து லஞ்சப்பணத்தை கொடுக்க முடிவு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கர்னூல் மாவட்ட கலெக்டர் கூறும் போது, “ராஜுவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. இதனால் அவர் மீது வருவாய்த்துறை மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அவரது நிலத்தை உறவினர்கள் அபகரித்து இருந்தால் அவர் கோர்ட்டை அணுகி இருக்க வேண்டும்” என்றார். #AndhraFarmer
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்