search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beheading"

    • நேற்று காலையில் கோர்ட்டுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
    • உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை திருவான்மியூர் அவ்வை நகரில் வசித்து வந்தவர் கவுதம். 29 வயதான இவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.

    இவர் நேற்று காலையில் கோர்ட்டுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றார். திருவான்மியூர் ஜெயந்தி சிக்னல் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வக்கீல் கவுதம் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேர் அவரை சுற்றி வளைத்தனர். தாங்கள் மறைத்து வைத்தி ருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து அவர்கள் கவுதமை வெட்டினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிர் பிழைப்பதற்காக ஓட்டம் பிடித்தார். இருப்பினும் 3 பேரும் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினார்கள்.

    இதில் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் கவுதம் கீழே சாய்ந்தார். உயிருக்கு போரா டிய அவரை மீட்டு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை வெட்டிக் கொன்ற கும்பல் தப்பி ஓடி தலை மறைவானது.

    இந்த பயங்கர கொலை சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் கிடைத்த தும் திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக் கொலையாளிகளை உடன டியாக பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இதைத் தொடர்ந்து வக்கீல் கவுதம் கொலை தொடர்பாக கமலேஷ், கார்த்தி, நித்யா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கண்ணகி நகர் மற்றும் கொட்டிவாக்கம் பகுதிகளை சேர்ந்த இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வந்துள்ளது.

    கொலையுண்ட வக்கீல் கவுதம் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிலரை ஜாமீனில் எடுத்துள்ளார். இது தொடர்பாக கமலேஷ், கார்த்தி, நித்யா ஆகிய 3 பேருக்கும், வக்கீல் கவுதமுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் கவுதமை கொலை செய்வதற்கு நேரம் பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில்தான் நேற்று அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர்.

    இதையடுத்து அவரை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்தான் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு திருவான்மியூர் சிக்னல் பகுதிக்கு சென்ற கவுதமை பின்தொடர்ந்து சென்று 3 பேரும் சரமாரி யாக டெ்டிக் கொன்றுள்ள னர். இரவு 8.30 மணி அளவில் சரமாரியாக வெட்டுபட்டதும் கவுதமை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இரவு 10 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.

    அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிரிழந்த கவுதமின் உடலை ஒப்படைப்பதற்கு முன்னர் ஆஸ்பத்திரி நிர்வாகம் ரூ. 50 ஆயிரம் பணம் கேட்டுள்ளது. இதனால் கவுதமின் நண்பர்களான சக வக்கீல்களும், உறவினர்களும் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டினார்கள். உறவினர்கள் கதறி அழுது கண்ணீர் வடித்தனர்.

    இதையடுத்து போலீசார் சென்று சமரச பேச்சு நடத்தியதையடுத்து ரூ.30 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு ஆஸ்பத்திரி நிர்வாகம் உடலை ஒப்படைத்தது. இதன் பின்னர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கவுதமின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    • யுவராஜ் (வயது29). இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.
    • 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் யுவராஜ் (வயது29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காராக பணிபுரிந்து வந்த இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதை தட்டிக் கேட்ட கல்கியின் அண்ணன் யுவராஜ் சர்மா, அதே பகுதியை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் யுவராஜ் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரோடுமாமாந்தூரில் பேருந்து ஏற முயன்ற யுவராஜை போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த 27ந் தேதியன்று வெளியே சென்ற நிலையில் அந்த பெண் வீடு திரும்பவில்லை.
    • வயல் வெளியில் இருந்து அவரது சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்.

    சிந்து:

    பாகிஸ்தானின் இந்து பெண் தயா பீல் என்பவர் (வயது 44) தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சிந்து மாகாண சிறுபான்மை பிரிவு நிர்வாகி கிருஷ்ணகுமாரி தமது டுவிட்டர் பதிவில், சின்ஜிரோ பகுதி வயல்வெளியில் இருந்து அவரது சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

    நான்கு குழந்தைகளுக்கு தாயான தயா பீல், கடந்த 27ந் தேதியன்று வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. தாய் வராததால் அவரை தேடி சென்றதாகவும் பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு வயலில் அவரது சிதைந்த உடலை கண்டதாக, தயா பீல் மகன் சூமர் தெரிவித்துள்ளார்.

    தனது தாய் கொல்லப்பட்ட விதம் எங்களுக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கொடூர தாக்குதல் அந்த பகுதியில் உள்ள இந்து சமூகத்தினரிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் இந்து பெண் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, பாகிஸ்தான் தனது சிறுபான்மையின மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்களது நலன்கள், பாதுகாப்பில் உள்ள பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் கடந்த காலங்களில், இந்தியா தெரிவித்துள்ளதாகவும், தற்போது அதையே மீண்டும் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

    • முன் விரோத தகராறில் வெறிச்செயல்

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் பள்ளி குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் மாதனூர் ஒடுகத்தூர் சாலையில் சிமெண்டு கடை நடத்தி வருகிறார். மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( 28). தொழிலாளி. இவருக்கும் முருகனுக்கும் முன்விரோத தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கார்த்திக் சிமெண்டு கடைக்கு சென்றுள்ளார்.

    அப்போது கார்த்திக்குக்கும் முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகன் கழுத்தை அறுத்துள்ளார்.

    இதில் படுகாயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மாதனூர் கிராம சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×