என் மலர்
நீங்கள் தேடியது "bengaluru"
- ஏசி விரைவு ரெயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
- யாருக்கும் உயிர்ச்சேதம் மற்றும் காயங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் இருந்து ஒடிசா செல்லும் ஏசி விரைவு ரெயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அசாம் மாநிலம் காமாக்யா செல்லும் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 11:45 மணியளவில் ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வாரில் நெர்குந்தி ரெயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது.
அப்போது ஏசி பெட்டிகளை மட்டுமே கொண்ட இந்த ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ஒடிசா தீயணைப்புப் படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒடிசா தீயணைப்பு துறை இயக்குநர் சுதன்சு சாரங்கி தெரிவித்தார்.
- தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.
பெங்களூரு:
மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவாகியுள்ள மிதமான சூறாவளி புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கர்நாடகவில் நேற்று மாலை பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பெங்களூரு, குருமதகல், சாபெட்லா, குஞ்சனூர், கண்டகூர், கொங்கல், மற்றும் எம்.டி.பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை பெய்தது.
பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. மழை பெய்யத் தொடங்கியபோது, துளிகளும் பெரிதாக இருந்தன. குறிப்பாக பெங்களூருவில் பல இடங்களில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து சாலைகளில் ஓடியது.
இதனால் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் தூங்க முடியவில்லை.
ஜீவனஹள்ளியில் உள்ள கிழக்கு பூங்கா அருகே மாலையில் பெய்த மழையின் போது, மோட்டார்சைக்கிள் மீது மரம் விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. விபத்து நடந்தபோது இறந்த குழந்தை ரஷா தனது தந்தையுடன் மோட்டா ர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குழந்தை பலத்த காயமடைந்தது. உடனடியாக பெற்றோர் குழந்தையை பவுரிங் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனளிக்காததால் குழந்தை இறந்தது.
புலிகேசி நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியு ள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
யெலகங்காவின் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வடிகால்களில் தண்ணீர் செல்லாமல், சாலையில் தேங்கி நிற்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கன மழை காரணமாக பெங்களூவில் இருந்து 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. கன மழை காரணமாக பெங்களூரு உட்பட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக தலைநகரில் பெய்து வரும் கனமழை காரணமாக பெங்களூருவுக்குச் செல்லும் சுமார் 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இண்டிகோ நிறுவனம் கூறுகையில், பெங்களூருவில் நிலவும் மோசமான வானிலை விமானப் பயணங்களைப் பாதித்து வருகிறது. பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
வானிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நிலைமைகள் மேம்பட்டவுடன் சீரான மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
- ரன்யா ராவ் பரப்பனஅக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
- ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
பிரபல நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர்.
தற்போது ரன்யா ராவ் பரப்பனஅக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரன்யா ராவ் குறித்து பாஜக எம்.எல்.ஏ. பசங்கவுடா பாட்டீல் கொச்சையாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரன்யா ராவ் குறித்து பேசிய பசங்கவுடா பாட்டீல், "தங்க கடத்தலில் சுங்க அதிகாரிகளின் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரன்யா ராவ் உடல் முழுவதும் தங்கத்தை வைத்திருந்தாள். அவள் உடலில் துளைகள் இருந்த இடங்களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தினாள். வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து அமைச்சர்களின் பெயரையும் வெளியிடுவேன்
தங்கம் கடத்தலில் ரன்யா ராவுக்கு யார் எல்லாம் உதவி செய்தார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல்களை நான் சேகரித்துள்ளேன்அவள் தங்கத்தை எந்த துளையில் மறைத்து கொண்டு வந்தாள் என்பது உட்பட அனைத்தையும் நான் அம்பலப்படுத்துவேன்" என்று தெரிவித்தார்.
- மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவுக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
- வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.75 கோடி மதிப்பிலான 37 கிலோ 870 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூருவில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மங்களூருவில் சமீபத்தில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த போதைப்பொருள் விற்பனையாளர்களான வெளிநாட்டு பெண்கள் 2 பேரை மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மங்களூரு குற்றப்பிரிவு போலீசாருக்கு பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி நீலாத்ரி நகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவுக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 வெளிநாட்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த அபிகைல் அடோனிஷ் (வயது 30), பாம்பா பேன்டா (31) என்பதும், அவர்கள் டெல்லியில் இருந்து எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.
அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.75 கோடி மதிப்பிலான 37 கிலோ 870 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைதான 2 பேரையும் போலீசார் மங்களூருவுக்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'இது மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு' என்றார்.
- காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில், நான் தூங்கவோ சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை.
- வெற்றுப் பக்கங்களிலும் கையெழுத்திட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன்.
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ரன்யா ராவ், டிஆர்ஐயின் கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு (ஏடிஜிக்கு) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த வழக்கில் நான் நிரபராதி என்று சொல்ல உங்கள் அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை. காவலில் எடுக்கப்பட்டதிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை 10 முதல் 15 முறை தன்னை அதிகாரிகள் அறைந்ததார்கள்.
ஏற்கனவே எழுதப்பட்ட எழுதப்பட்ட 50 முதல் 60 பக்கங்களிலும், சுமார் 40 வெற்றுப் பக்கங்களிலும் கையெழுத்திட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன். திரும்பத் திரும்ப அடித்து, அறைந்த போதிலும், அவர்கள் (டிஆர்ஐ அதிகாரிகள்) தயாரித்த அறிக்கையில் கையெழுத்திட நான் மறுத்துவிட்டேன். காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில், நான் தூங்கவோ சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை.
இது தவிர, எனது தந்தையின் அடையாளத்தை வெளியிடுவதாகவும் ஒரு அதிகாரி என்னை மிரட்டினார். இந்த வழக்குக்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னிடமிருந்து எந்த தங்கமும் மீட்கப்படவில்லை.

டெல்லியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு என்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளனர். உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்படுகின்றனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ரன்யா ராவ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
ஆனால், கடந்த மார்ச் 3 ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ரன்யா ராவிடம் இருந்து ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஆர்ஐ அறிக்கை குறிப்பிடுகிறது.
- பெண் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இளைஞர் கொலை என தகவல்.
- சிசிடிவி காட்சி அடிப்படையில் கொலை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு:
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரா பகுதியில் தெரு ஒன்றில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றியதுடன், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரத்தில் வீடு ஒன்றில் அமர்ந்திருக்கும் இளைஞரை சுற்று வளைக்கும் கும்பல் ஒன்று, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறது.
அந்த கும்பலில் மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர். பின்னர் அந்த இளைஞரை தெருவில் இழுத்து வந்து அடித்து துவைப்பதுடன், அவரது தலையில் கல்லைப் போட்டு அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்யும் காட்சி காண்போரை பதற செய்கிறது.
முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் பதாமி பகுதியை சேர்ந்த மல்லப்பா என்பது தெரிய வந்துள்ளது. பெண் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள போலீசார், இந்த கொடூர கொலையை செய்தவர்களை தேடி வருகின்றனர்.
- உலகில் அதிக வாகன நெரிசல் உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடம் பிடித்துள்ளது.
- கடந்த ஆண்டின் அக்டோபர் 15-ம் தேதி மிக அதிக வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, வாகன நெரிசல் மிகுந்த நகரமாக திகழ்கிறது. இந்தியாவில் அதிக வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. தற்போது சர்வதேச அளவில் அதிக வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடம் பிடித்துள்ளது.
டாம் டாம் என்ற தனியார் நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு வாகன நெரில் குறித்து ஆய்வு நடத்தி, உலகில் வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தான் பெங்களூரு 2-வது இடம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.
பெங்களூருவின் மத்திய பகுதியில் 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 29 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆகிறது. வாகன நெரிசல் பட்டியலில் இங்கிலாந்தின் லண்டன் நகரம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 36 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகிறது. டெல்லி நகரம் 34-வது இடத்திலும், மும்பை 47-வது இடத்திலும் உள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு வாகன நெரிசல் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்த பெங்களுரு தற்போது 2-வது இடத்திற்கு முன்னேறியது. கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 15-ம் தேதி மிக அதிக வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 260 மணி நேரம் (10 நாட்கள்) வாகனத்தை ஓட்டுவதிலும், 134 மணி நேரம் வாகன நெரிசலிலும் நேரத்தை கழிக்கிறார்கள் என்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
- இரு பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வாக்குவாதம் குடுமிபிடி சண்டையில் முடிந்தது.
- அங்கு வந்தவர்கள், சண்டையை பொருட்படுத்தாமல், புடவை வாங்குவதில் கவனம் செலுத்தினர்.
பெங்களூரூவின் மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்த துணிக்கடை ஒன்றில் வருடாந்திர விற்பனையை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதை அடுத்து புடவை வாங்க வந்த இரு பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வாக்குவாதம் குடுமிபிடி சண்டையில் முடிந்தது. இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இரு பெண்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்த போதிலும், அங்கு வந்தவர்கள், அதனை பொருட்படுத்தாமல், புடவை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தினர். கடையில் காவலராக பணியாற்றி வருபவர் மட்டும் பெண்களிடையே ஏற்பட்ட சண்டையை தடுக்க முயன்றார். எனினும், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவம் அடங்கிய வீடியோ, 'மல்லேஸ்வரம் மைசூர் பட்டு புடவை வருடாந்திர விற்பனை.. இரு வாடிக்கையாளர்கள் ஒரு புடவைக்காக சண்டையிடுகின்றனர்,' எனும் தலைப்பில் டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பதிவான குறுகிய நேரத்திற்குள் வீடியோவினை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
- பெங்களூரு நகரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- போக்குவரத்து நெரிசலின் போது பசியை போக்க நபர் ஒருவர் டோமினோஸ்-ஐ அழைத்தார்.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் சாதாரண விஷயமாகவே மாறி விட்டது. மக்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் செலவிட வேண்டியிருப்பதால், அதற்கு ஏற்றார் போல் தங்களது அலுவல்களை திட்டமிட வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த வகையில், பெங்களூரு, போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நகரமாக இருக்கிறது.
அப்படியாக பெங்களூரு நகரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மற்றவர்களை போன்றே போக்குவரத்து நெரிசலில் என்ன செய்வது என்று தெரியாமல், நபர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்தார். 30 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ, ஒட்டுமொத்த இணையவாசிகளிடையே வேகமாக பரவி, உடனே வைரல் ஆனது.
வைரல் வீடியோவில் என்னதான் இருந்தது? என்ற எண்ணத்தில் அதனை பார்த்த அனைவரும், அட இப்படியும் செய்யலாமா? என்றும், பெங்களூருவில் இதெல்லாம் சகஜம் தானப்பா? என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படியாக வீடியோவை வெளியிட்ட நபர், போக்குவரத்து நெரிசலின் போது, தனக்கு ஏற்பட்ட பசியை போக்க, டோமினோஸ்-ஐ அழைத்தார்.
வாடிக்கையாளரை காக்க வைப்போமா? என்ற நினைப்பில் டோமினோஸ்-ம் தனது வாடிக்கையாளருக்கு சுடச்சுட பீட்சாவை பேக் செய்து, தனது டெலிவரி ஊழியர்களை களத்தில் இறக்கியது. டெலிவரி ஊழியர்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலிலும், ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் லைவ் லொகேஷனை பார்த்து, அவரின் காரில் வைத்து சூடான பீட்சாவை டெலிவரி செய்தனர்.
போக்குவரத்து நெரிசலில் பீட்சா பெறும் வீடியோவைத் தான் அந்த நபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் டெலிவரி செய்த ஊழியர்களை பாராட்டியும், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் எப்போ தான் சரியாகுமோ? என்றும் கமெண்ட் செய்தனர்.
- 2023 மே மாதம் இந்திய தேசிய காங்கிரஸ், ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது
- சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக குமாரசாமி அறிவித்தார்
2007ல் ஜனதா தள் மற்றும் பா.ஜ.க. கூட்டணியின் சார்பாக கர்நாடகா முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி இருந்த போது ராமநகரா மாவட்டம் உருவாக்கப்பட்டது. பெங்களூரூவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் ராமநகரா உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் மே மாதம் முதல் கர்நாடகாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி, ராமநகராவை பெங்களூரூவுடன் இணைத்து "பெங்களூரூ தெற்கு" (Bangaluru South) என புது மாவட்டத்தை உருவாக்க முயன்று வருகிறது.
உருவாக்கப்பட உள்ள இந்த தெற்கு பெங்களூரூ மாவட்டம், ராமநகரா, சென்னபட்டனா, மாகடி, கனகபுரா மற்றும் ஹரோஹல்லி ஆகிய 5 தாலுக்காக்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் என்றும் கனகபுரா, எதிர்காலத்தில் பெங்களூரூவின் ஒரு பகுதியாகும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருந்தார்.
இது குறித்து சிவகுமார் பொதுமக்களிடம் தெரிவித்ததாவது:
நீங்கள் பெங்களூரூ மாவட்டத்தை சேர்ந்தவர்கள்; ராமநகரா அல்ல. அதை முதலில் மனதில் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தேவையின்றி நம்மை ராமநகரா மாவட்டத்தில் இணைத்தனர். நீங்கள் பிறர் சொல்வதை கேட்காதீர்கள். மீண்டும் பெங்களூரூவை பழையபடி மாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
குமாரசாமி இது குறித்து தெரிவித்ததாவது:
ராமநகராவுடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிற்கு சொந்தமான சொத்துக்களை காக்கும் முயற்சிதான் காங்கிரஸின் இந்த நடவடிக்கை. நான் சிவகுமாருக்கு சவால் விடுகிறேன். ராமநகராவின் பெயர் மாற்றப்பட்டாலோ, அல்லது அதனை பெங்களூரூவுடன் இணைக்க முயன்றாலோ, நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ராமநகராவின் மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
- பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.
போர் விமான பயணித்திற்கு பிறகு பிரதமர் மோடி தனது அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தேஜஸ் போர் விமானத்தில் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது. நமது நாட்டின் உள்நாட்டுத் திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும், நமது தேசிய திறன் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- ஏராளமான கமென்ட்கள் விளம்பரத்திற்கு எதிராக இருந்தது.
பெங்களூரு பேருந்தின் பின்புறம் ஒட்டப்பட்ட உடனடி ரசம் தயாரிக்கும் பேஸ்ட்-க்கான விளம்பரம் இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்த விளம்பர படத்தில், மனைவி வட இந்தியரா? என்ற வாசகமும், அருகில் ஒருவர் கையை நீட்டிய படி நிற்கும் படமும் இடம்பெற்று இருக்கிறது.
விளம்பர படத்தை பார்க்கும் போது, வட இந்திய பெண்களுக்கு ரசம் வைக்க தெரியாதபடியும், குறிப்பிட்ட நிறுவனத்தின் உடனடி ரசம் பேஸ்ட் கொண்டு யாரும் எளிதில் ரசம் வைக்க முடியும் என்றும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இந்த விளம்பரத்தின் புகைப்படத்தை ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விளமபர படம் தொடர்பாக பலர் பதில் அளித்துள்ளனர். இதில் ஏராளமான கமென்ட்கள் விளம்பரத்திற்கு எதிராகவும், இந்த விளம்பரம் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா இடையிலான திருமண உறவை ஊக்குவிக்கும் வகையில் இருந்தன. சிலர் இந்த விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், சிலர் இந்த விளிம்பரம் திருமண உறவை மாநிலங்கள் கடந்து எடுத்து செல்ல உதவும் என்றும் தெரிவித்துள்ளனர்.