search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Besant Nagar beach"

    • போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர்.
    • மிதவை படகு எங்கிருந்து வந்தது என்ற தெரியவில்லை.

    சோழிங்கநல்லூர்:

    பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று காலை சோலார் தகடு பொருத்திய சிறிய மிதவை படகு கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் திருவான்மியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். அந்த சுமார் 30 அடி நீள முள்ள அந்த மதவையில் 3 சோலார் தகடுகள் இருந்தன. இந்த மிதவை படகு எங்கிருந்து வந்தது என்ற தெரியவில்லை.

    அதனை கடலோர காவல் படையினர் மீன்வளத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஒரு மாதமாக கடற்கரையை சுத்தப்படுத்தவில்லை என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகிறார்கள்.
    • இதற்கு முக்கிய காரணம் கடற்கரை மணலில் உள்ள கடைகள் தான் என்கிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் மெரினா கடற்கரைக்கு அடுத்ததாக பெசன்ட் நகர் கடற்கரையிலும் பொழுது போக்க ஏராளமானவர்கள் கூடுவது வழக்கம்.

    அதேபோல் இங்கு சாலையில் பலர் நடை பயிற்சி மேற்கொள்வார்கள். கடந்த ஒரு மாதமாக கடற்கரையை சுத்தப்படுத்தவில்லை என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகிறார்கள்.

    கடற்கரையில் சிதறி கிடக்கும் குப்பைகளால் கடற்கரையின் அழகே பாழ்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கடற்கரை மணலில் உள்ள கடைகள் தான் என்கிறார்கள்.

    குப்பை தொட்டிகளும் தேைவயான இடங்களில் வைக்கப்படாததால் வாங்கி சாப்பிடும் உணவு பொருட்களான மிச்ச மீதிகள், காகிதங்களை கடற்கரை மணலிலும், ரோட்டிலும் போட்டு செல்வதால் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த பகுதிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகையை யொட்டி சுத்தம் செய்யப்பட்டதாகவும் அதன்பிறகு யாரும் தூய்மை பணியை மேற்கொள்ளவில்லை.

    மெரினா கடற்கரையில் கடைகள் வைப்பது முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெசன்ட் நகரில் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    தூய்மை பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமும் முறையாக செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். ஆனால் மாநகராட்சி தரப்பில் கூறும்போது, பீச் தினமும் சுத்தம் செய்யப்படுகிறது.இயந்திரம் மூலம் கடல் மணல் சுத்தப்படுத்தப்படும். அந்த இயந்திரம் வேறு இடத்தில் இருந்து வரவேண்டியிருப்பதால் சற்று காலதாமதமாகி விட்டது என்றனர்.

    பெசன்ட்நகரில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வந்த சிறுவன் உள்பட 2 பேர் கடலில் மூழ்கி நேற்று பலியாகினர்.
    அடையாறு:

    சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங் கண்ணி ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கலந்து கொள்ள சென்னை மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தனர்.

    இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சதீஷ் (வயது 17), விக்னேஷ் (20) ஆகியோர் தங்கள் நண்பர்கள் 6 பேருடன் நேற்று மாலை பெசன்ட் நகர் வந்தனர்.

    நண்பர்களுடன் அவர்கள் அங்குள்ள கடலில் குளித்தனர். அப்போது, சதீஷ், விக்னேஷ் ஆகியோர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது நண்பர்கள் கூச்சலிட்டனர்.

    உடனே அங்கு இருந்த சிலர் கடலில் குதித்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் இருவரும் இறந்து விட்டனர்.

    தகவல் அறிந்த சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் தற்போது திருவிழா நடந்து வருவதால், வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே கடலில் குளிப்பவர்களை கட்டுப்படுத்துவதுடன், கண்காணிப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ×