என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bhavanisagar"
- இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட எதிர்ப்பு.
- அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பவானிசாகர் பேரூராட்சி பகுதியில் ஏற்கனவே 420 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.
இதற்கிடையே மேலும் 120 வீடுகள் கட்டுவதற்காக பவானிசாகர் பேரூராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பவானிசாகர் பகுதியில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பவானி சாகர் மார்க்கெட் சதுக்கத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், 15 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பவானிசாகர் அண்ணா நகர் கடை வியாபாரிகள் சங்கம் அனைத்து வணிகர் சங்கம் மூத்த குடிமக்கள் சங்கம் கட்டிட பொறியாளர்கள் சங்கம் பொதுப்ப ணித்துறை ஊழியர்கள் சங்கம் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பெரும்பா லும் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் 100 குடும்பங்கள் முதல் 300 குடும்பங்கள் வரை மட்டுமே உள்ளனர்.
ஆனால் பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ஆயிரம் குடும்பங்கள் உள்ளதால் இங்கு பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுகிறது.
எனவே இப்போது உள்ள இலங்கை தமிழர் முகாமில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்களை வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.
ஏற்கனவே இங்கு வகிக்கும் 420 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு கோழிப்பண்ணை பகுதியில் புதிதாக வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 120 வீடுகள் கட்ட அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இங்கு இலங்கை தமிழர் முகாமில் மக்கள் தொகை அதிகரித்துள்ள சூழ்நிலையில் இங்கு உள்ள முகாம் குடும்பங்களை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் பவானி சாகர் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 120 வீடுகள் கட்டுவதை தவிர்த்து திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
மேலும் தமிழகத்தின் மற்ற பகுதியில் உள்ளது போல் பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமில் உள்ள ஆயிரம் குடும்பங்களை 300 குடும்பங்களாக குறைக்க வேண்டும் என்பது எங்களின் முக்கிய கோரிக்கை ஆகும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதோடு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 236 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
- 1005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு,
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 80.36 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 236 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வாய்க்காலுக்கு 5 கனஅடியும், அரக்கன்கோட்டை தடப்பள்ளிக்கு 800 கனஅடியும், குடிநீருக்காக 200 கனஅடியும் என மொத்தம் 1005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணை பகுதியில் நேற்று 5.2 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
- பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- 288 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாத தாலும், தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணைக்கு வரும் நீரும் குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.51 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 288 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
- காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.18 அடியாக உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு, மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே அனைத்து வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து 2-ம் போக புஞ்சை பாசனத்தி ற்காக கீழ்ப்பவானி வாய்க்கா லுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்காலுக்கு 1800 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1000 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் 2950 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.
- விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
- இதேபோல பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது கொடிவேரி அணை.இதே போல் சிறந்த பரிகார தலமாக உள்ளது பவானி கூடுதுறை.
கொடிவேரி அணையில் இருந்து விழும் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து, அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களை சுடச்சுட வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இதேபோல் பவானிசாகர் அணை பூங்காவுக்கும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பவானிசாகர் அணையின் அழகை கண்டு ரசித்தனர்.
இதேபோல் பண்ணாரியம்மன் கோவிலுக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்திருந்தனர்.மேலும் திம்பம், தாளவாடி, பர்கூர் மலைபகுதிகளிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள்கண்டு ரசித்தனர்.
இதேபோல பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிப்பட்டு சென்றனர்.
இதேபோல் வெளியூர்களில் இருந்தும்ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும்,தர்ப்பணம் செய்தும் சங்கமேஸ்வரரை வழிப்பட்டு சென்றனர்.
- பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
- தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,654 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் இன்று 200 கன அடி குறைத்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 805 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 82.69 அடியாக இருந்தது.
- பவானிசாகர் அணையில் இருந்து மொத்தம் 1005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 82.69 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1967 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 900 கன அடியும், குடிநீருக்காக 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடியும் என மொத்தம் 1005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்