என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhopal"

    • மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
    • அரசின் உத்தரவை மீறி பிச்சை எடுத்தால் 1 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    மத்திய பிரதேச மாநிலத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

    பிச்சை எடுப்பதற்கான தடையை மீறுவோர் மீது பாரதிய நியாய் சன்ஹிதா சட்டத்தின் 223-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும், 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் சாலை சிக்னலில் பிச்சை எடுத்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    பிச்சை எடுத்தவரிடம் மாற்று வேலை தருவதாகவும் பிச்சை எடுப்பதை கைவிடுமாறும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதனை அவர் ஏற்காததால் பிச்சைக்காரர்கள் தடுப்பு சட்டத்தில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • லவ் ஜிகாத் என்ற கூறி முஸ்லிம் இளைஞரை வலதுசாரி அமைப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
    • இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தில், இந்து பெண்ணை திருமணம் செய்யவிருந்த முஸ்லிம் இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர் பிபாரியாவைச் சேர்ந்த இந்து பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக போபாலில் உள்ள நீதிமன்றத்துக்கு வந்துள்ளார்.

    அப்போது லவ் ஜிகாத் என்ற கூறி முஸ்லிம் இளைஞரை வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • திட்டமிட்டதை விட சற்று கால தாமதம் ஆனது.
    • தாமதமாக வந்ததற்கான காரணத்தை கூறினார்.

    மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அம்மாநிலத்தின் போபாலில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இன்று காலை தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள ஏற்கனவே திட்டமிட்டதை விட சற்று கால தாமதம் ஆனது.

    இதையடுத்து, மாநாட்டில் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி முதலில் தாமதமாக வந்ததற்கு தன்னை மன்னிக்குமாறு கேட்டார். தொடர்ந்து பேசிய அவர், தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தை விளக்கி கூறினார்.

    அப்போது பேசிய அவர், "இங்கு வந்ததும் மாநிலத்தில் தேர்வுகள் நடைபெற இருப்பதும், மாணவர்கள் அதில் பங்கேற்க செல்லும் நேரமும், நான் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வரும் நேரமும் ஒன்றாக இருந்தது. ஒரே நேரமாக இருப்பதால், நாம் வெளியே வந்தால், போக்குவரத்து மாற்றங்களால் மாணவரகள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படலாம்.

    இதன் காரணமாக ஆளுநர் மாளிகையில் இருந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்படுவது என முடிவு செய்தேன். இதனால் தான் நான் இங்கு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. தாமதமானதால் ஏற்பட்ட இடையூறுக்கு மீண்டும் உங்கள் அனைவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.

    திக்விஜய் சிங்கை எதிர்த்து தங்கள் கட்சியின் சார்பில் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா வை களம் இறக்க பா.ஜ.க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #BJP #SadhviPragya #DigvijayaSingh
    புதுடெல்லி:

    மத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய் சிங்கை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. இந்த நிலையில், திக்விஜய் சிங்கை எதிர்த்து தங்கள் கட்சியின் சார்பில் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா வை களம் இறக்க பா.ஜ.க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



    இவர் மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்படத்தக்கது. போபால் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க.வின் கோட்டையாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. 1989-ம் ஆண்டு பிறகு 8 முறை அக்கட்சி இந்த தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.  #BJP #SadhviPragya #DigvijayaSingh 
    மத்தியபிரதேச மாநிலம் போபாலில் சில மாதங்களாக பூட்டிக்கிடந்த வீட்டிற்குள், ‘மம்மி’ போன்று சடலம் மீட்கப்பட்டுள்ளது. #BhopalMummifiedBody
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள வித்யா நகர் பகுதியில் நேற்று அப்பார்ட்மெண்டில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் துணியால் இறுக்கமாக கட்டி ஒரு மரப்பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்ததால், அழுகி  ‘மம்மி’ போன்று மாறிவிட்டது. இந்த வீடு பல மாதங்களாக பூட்டிக் கிடந்ததாக அருகில் வசிப்பவர்கள் விசாரணையின்போது தெரிவித்தனர்.

    பூட்டப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் விமலா ஸ்ரீவஸ்தவா(60) போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்தார். இவர் தனது மகன் அமித்(30) உடன் வசித்து வந்துள்ளார்.

    இதையடுத்து வீட்டை  8 மாதங்களுக்கு முன்பு ஒருவரிடம் விற்றார். ஆனால் வீடு தொடர்ந்து பூட்டிக்கிடந்ததால், கடந்த 6 மாதமாக அவரால் குடியேற முடியவில்லை. இது குறித்து தாய்-மகனை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இந்நிலையில் நேற்று வீட்டை சுத்தம் செய்வதற்காக உரிமையாளர் வந்தபோது, சடலம் கிடைத்துள்ளது.

    சடலத்தினை ஆய்வு செய்தபோது அது ஆறு மாதங்களாக பெட்டியில் அடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு, காயங்கள் மற்றும் அடையாளங்களை கொண்டு இறந்தது யார் என்பது உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். #BhopalMummifiedBody 
    மத்திய மந்திரி உமாபாரதியின் பாதுகாப்பு அதிகாரி தனேரிவா தனது பணித்துப்பாக்கியை எடுத்த தனது தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். #UmaBharti #PersonalSecurity
    போபால்:

    மத்திய குடிநீர் வழங்கல்துறை மந்திரி உமாபாரதியின் பாதுகாவலர் குழுவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ராம் மோகன் தனேரிவா. மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்த இவருக்கும், மனைவிக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் தகராறு ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த அவர், மனைவியை அடித்து உதைத்ததாக தெரிகிறது.



    இது தொடர்பாக அவரது மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தம்பதியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் தனேரிவா மீது வழக்கு தொடர வேண்டும் என அவரது மனைவி உறுதியாக இருந்தார்.

    எனவே கணவன்-மனைவி இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தனது பணித்துப்பாக்கியை எடுத்த தனேரிவா தனது தலையில் சுட்டுக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் போலீஸ் வாகனத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மத்திய மந்திரியின் பாதுகாப்பு அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக மற்றொரு மந்திரியான நரேந்திர சிங் தோமரின் உதவியாளர் கடந்த 20-ந்தேதி தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  #UmaBharti #PersonalSecurity #tamilnews
    போபாலில் குழந்தையை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு 22 நாளில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த ஏப்ரல் 20-ந்தேதி தனது உறவினரின் 4 மாத பெண் கைக்குழந்தையை தூக்கி சென்று கற்பழித்து கொலை செய்தார்.

    அவர் குழந்தையை தோளில் தூக்கி சென்று வீட்டு அருகே உள்ள வணிக கட்டிடத்துக்குள் செல்வதும், அதன்பிறகு வெளியே வரும் போது அவரிடம் குழந்தை இல்லாததும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அவர் குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்றார்.

    அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக வழக்கு உடனடியாக இந்தூர் கோர்ட்டில் தொடரப்பட்டது.

    பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற நவீன் மீதான வழக்கை கோர்ட்டு விரைவாக விசாரித்தது. இதில் போலீசார் குற்றப் பத்திரிகையை ஒரு வாரத்தில தாக்கல் செய்தனர்.

    29 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து இந்தூர் கோர்ட்டு நீதிபதி வர்ஷா சர்மா நேற்று தீர்ப்பு அளித்தார். 4 மாத குழந்தையை கற்பழித்து கொன்ற நவீனுக்கு தூக்கு தண்டனை விதித்தார்.

    இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், அழுவதை தவிர எதுவும் தெரியாத 4 மாத குழந்தையை மனித தன்மையன்றி கற்பழித்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.

    கொடிய குற்றம் செய்த நவீன் தூக்கு தண்டனைக்கு தகுதியானவன் என்று கூறினார். இந்த வழக்கில் 22 நாளில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நவீனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    ராஜஸ்தானில் வெளி நாட்டு பெண் கற்பழிப்பு வழக்கில் ஜோத்பூர் கோர்ட்டு 18 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. #tamilnews

    ×