என் மலர்
நீங்கள் தேடியது "bhumadevi temple"
- காலை 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் சோடனை தீபாராதனை நடைபெற்றது.
- பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்திருந்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் ஆடி 18-ம் பெருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்திருந்தனர். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, முத்துலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகுருபாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டிருந்தது.
- கோவில்பட்டி அருகே மந்திதோப்பு துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் நவராத்திரி உற்சவம் நிறைவாக ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்திதோப்பு துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் நவராத்திரி உற்சவம் நிறைவாக ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 7 மணிக்கு அம்பாள் குரு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை பூமாதேவி அம்பாளுக்கும், ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், மாரியப்பன் பூஜைகள் செய்தார்கள்.
இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரிஸ் வரன், கதிர்காம சுப்பிரமணியன், ஆறுமுகம், மந்திர மூர்த்தி மற்றும் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி, மாரியம்மாள், சந்திரா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தார்கள்.
- கோவில்பட்டி அருகே மந்திதோப்பு துளசிங்க நகரில் உள்ள அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் நவராத்திரி உற்சவம் நடைபெற்றது.
- மாலை 6 மணிக்கு கொலு மண்டபத்தில் அம்பாள் ராஜராஜேஸ்வரி மாரி அன்னபூரணி லட்சுமி ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தரும் பூமாதேவி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்திதோப்பு துளசிங்க நகரில் உள்ள அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் நவராத்திரி உற்சவம் நடைபெற்றது.
முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி யெழுச்சி பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு அம்பாள் குரு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
மாலை 6 மணிக்கு கொலு மண்டபத்தில் அம்பாள் ராஜராஜேஸ்வரி மாரி அன்னபூரணி லட்சுமி ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தரும் பூமாதேவி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் பூஜைகள் செய்தார்கள் இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம் மற்றும் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தார்கள்.