search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bidya Devi Bhandari"

    • நேபாள அதிபர் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளார்.
    • இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்.

    காட்மாண்டு:

    நேபாள நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி (61) திடீர் உடல் நலக் குறைவால் 2 நாட்களுக்கு முன்பு காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்த நிலையில் மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் பித்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அவர் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளதால் கவலையளிக்கும் வகையிலான பிரச்சினைகள் ஏற்படாது என மருத்துவர்கள் நம்பிக்கையும் தெரிவித்து உள்ளனர். எனினும் இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவர் காஃப்லே கூறியுள்ளார்.

    • நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
    • இதையடுத்து காத்மண்டுவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    காத்மண்டு:

    நேபாள நாட்டின் அதிபராக இருப்பவர் பித்யா தேவி பண்டாரி (61). இவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக, அதிபரின் செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை காணப்படுகின்றன. இதனால், அவர் காத்மண்டுவில் உள்ள மகாராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

    ×