என் மலர்
நீங்கள் தேடியது "Bike rally"
- பிரதமர் மோடி, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கை தேவியின் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
- உத்தரகாண்ட் மாநிலத்தின் பொருளாதாரம் பெருமளவில் சுற்றுலாவை சார்ந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை புரிதிந்த்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கை தேவியின் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
பின்னர் உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சிலில் ஜீப் டிரெக்கிங் மற்றும் பைக் பேரணியை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் கலந்து கொண்டார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக இந்த பேரணி நடத்தப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பொருளாதாரம் பெருமளவில் சுற்றுலாவை சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Prime Minister Narendra Modi flags off a trek and bike rally in Harsil, Uttarakhand. CM Pushkar Singh Dhami is also present. (Video: ANI/DD) pic.twitter.com/y8QYTQxqBP
— ANI (@ANI) March 6, 2025
- செய்யாறை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி நடந்தது
- சப்-கலெக்டரிடம் 2,300 மனுக்கள் வழங்கினர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரி பைக் பேரணி திருவத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் அருகில் தொடங்கியது.
பேரணி காந்தி சாலை, மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், ஆற்காடு சாலை வழியாக சப் கலெக்டர் அலுவலகத்திடம் நிறைவடைந்தது.
தொடர்ந்து சப் கலெக்டர் அலுவலகம் எதிரில் வேண்டும் வேண்டும் செய்யாறு மாவட்டம் அறிவிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
பைக் பேரணியில் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து வியாபாரிகள் அனைத்து கட்சியினர், பல்வேறு சமூக அமைப்புகள் மூலமும், செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மூலமும் 2300 மனுக்கள் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் கோரி சப் கலெக்டர் அனாமிகாவிடம் மனுக்கள் வழங்கப்பட்டது. செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியதாவது:-
01.04.1959ம் ஆண்டி ல் செய்யாறு, திருவ ண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. செய்யாறு கோட்டம் தவிர அனைத்தும் வருவாய் கோட்டங்களும் மாவட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் 64 வருடங்களாக செய்யாறில் செயல்பட்டு வரும் வருவாய் கோட்டத்தினை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும்.
செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி தாலுக்காகளில் உள்ள கிராமங்கள் சுமார் 150 கிலோமீட்டர் தூரம் பயணித்து தலைமை இடமான திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் கால விரயமும் பண விரயமும் ஆகிறது. செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பெற்றால் கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனுக்குடன் அருகில் உள்ள செய்யாறு பகுதிக்கு எளிதாக வந்து செல்லவும் அரசு அலுவலர்களை தொடர்பு கொள்ளவும் வசதியாக இருக்கும்.
மேலும் வளர்ச்சி திட்டங்கள், அரசு நலத்திட்டங்கள் பேரிடர் காலத்திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்திட முடியும். மேலும் சட்டம் ஒழுங்கு ஏற்படும் அவசர காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக காவல்துறையினரால் எடுக்க பேரூதவியாக இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2016-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்த வாக்குறுதியினை குறிப்பிட்டிருந்தனர்.
தமிழக முதல்வர் கூறிய வாக்குறுதிணை நிறைவேற்றிடும் வகையில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பைக் பேரணியாக சென்று மனுவினை வழங்கினர்.