என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "birth control methods"
- மாதவிலக்கு முடியும் நாளில் காப்பர் டி பொருத்தி கொள்ள வேண்டும்.
- 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.
கருத்தடை சாதனங்களில் பல வகைகள் இருந்தாலும் பெண்களுக்கு காப்பர்-டி பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த காப்பர்-டி கருப்பையில் வைக்கும் போது இதில் இருக்கும் தாமிர அயனியானது கர்ப்பப்பை வாய் மற்றும் உட்புறம் இருக்கும் திரவத்துடன் கலந்துவிடுகிறது.
இந்த திரவம் தான் விந்தணுக்களை கருமுட்டையுடன் சேராமல் தடுக்கிறது. இந்த காப்பர் டி சாதனத்தில் இருக்கும் செம்பு விந்தணுக்களை அழிக்கும் திறனை கொண்டிருப்பதால் இவை கருத்தரித்தலை தடுத்துவிடுகிறது.
மேலும் காப்பர் டி பொருத்திய பிறகு குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்தவுடன் காப்பர் டி பயன்படுத்தினால் பிரசவத்துக்கு பிறகு சுமார் 8 வாரங்கள் காத்திருக்கவும். மாதவிலக்கு முடியும் நாளில் காப்பர் டி பொருத்தி கொள்ள வேண்டும்.
காப்பர் – டி நன்மைகள்
காப்பர் – டி காப்பரால் செய்யப்பட்டது. இது நீண்ட காலம் நீடிக்கும். காப்பர் டி ஹார்மோன் அல்லாத பிறப்புக்கட்டுப்பாடு என்பதால் இது உடலில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
காப்பர் – டி பயன்படுத்துவதால் உடலில் உள்ள எந்த ஹார்மோன்களையும் பாதிக்காது. கருத்தடை மாத்திரைகளால் உடலில் ஹார்மோன் பிரச்சனை வரும் என்று நினைப்பவர்கள் காப்பர்– டி பயன்படுத்தலாம்.
விந்து வருவதற்குள் விந்து வரும் இடத்துக்கு வெள்ளை அணுக்கள் முந்திவந்து விந்தணுக்களை செயலிழக்க செய்கிறது.
இந்த காப்பர் – டி பயன்பாடு உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
கருத்தடைக்காக உடலுறவில் குறுக்கிடாது. மேலும் இது 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். பலனளிக்கும் என்பதால் நிம்மதியாக பாதுகாப்பாக உணரலாம்.
பெண்கள் பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போது இதை பயன்படுத்தலாம். ஹார்மோன் பிறப்பு கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பான ரத்த உறைவு போன்ற பக்கவிளைவுகளின் அபாயத்தை கொண்டிருக்கவில்லை.
தீமைகள்
காப்பர் – டியின் பொதுவான பக்க விளைவுகள் என்றால் ஒழுங்கற்ற மற்றும் அதிக ரத்தப்போக்கு.
மற்றொரு பக்க விளைவு மாதவிடாய் வலி அதிகரிக்கலாம்.
குறிப்பாக பிரசவிக்காத பெண்களை விட பிரசவித்த பெண்கள் குறைவான பக்கவிளைவுகளை கொண்டிருக்கிறார்கள்.
காப்பர் – டி பொருத்தும் போது வலி, செருகிய சில நாட்களுக்கு தசைப்பிடிப்பு மற்றும் முதுகுவலி பெரும்பாலான மக்களுக்கு இந்த பக்கவிளைவுகள் பொதுவாக 3-6 மாதங்களுக்குள் மறைந்துவிடும்.
- மாதவிடாய் சுழற்சி இயல்பான மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும்.
- பெண்ணின் மாதவிடாய் ஓட்டத்தை சீர்குலைக்கும்.
மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு பெண் பருவமடைதலுக்கு பிறகு ஒவ்வொரு 28 நாட்களிலும் வரக்கூடிய நிகழ்வு. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் 28 முதல் 35 நாட்களுக்கு இடையில் வரலாம்.
சிலருக்கு இந்த நாட்களை தாண்டியும் மாதவிடாய் சுழற்சி வரலாம். எல்லா மாதமும் இதேபோல் ஒரே சீராக வரும் என்று சொல்ல முடியாது.
உடலில் ஹார்மோன்களின் சுழற்சிக்கு இடையில் வரக்கூடிய இந்த மாதவிடாய் சுழற்சி இயல்பான மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும். ஆனால் பலரும் இந்த மாதவிடாய் சுழற்சி அவர்கள் விரும்பும் நேரத்தில் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் சுழற்சியை தள்ளி வைக்க நினைக்க கூடாது. ஏனெனில் உடல் இயற்கையாக நடக்கும் இந்த மாற்றத்தை நாம் விரும்பியபடி மாற்றி அமைத்தால் அவை பிரச்சனையை உண்டு செய்யலாம்.
தவிர்க்க முடியாத சூழலில் அதாவது ஒரு பெண் அதிக கனமான மாதவிடாய் காலங்களை வலியோடு எதிர்கொள்ளும் போது அவர்கள் பெரிய விழாக்களில் கலந்து கொள்ளும் போது அல்லது அவர்களே விழா நாயகியாக திருமணப்பெண்ணாக இருக்கும் போது இதை தவிர்க்க நினைக்கலாம். அதோடு இவை அடிக்கடி செய்ய வேண்டியிராது என்பதால் இதை செய்வதில் பிரச்சனையில்லை.
மாதவிடாய் வருவதை தடுத்து நிறுத்தும் வகையில் மருந்துகளை சுயமாக எடுக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகே எடுக்க வேண்டும். சரியான முறைகளை பயன்படுத்தி மாதவிடாய் தாமதப்படுத்துவது உண்மையில் பாதுகாப்பான விஷயம் தான்.
ஆனால் இவை எல்லாமே தற்காலிகமானவையாக இருக்க வேண்டும். அடிக்கடி விரும்பும் வகையில் மாதவிடாய் காலங்களை மாற்றிக்கொள்வதற்கல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மாதவிடாய் தள்ளிப்போட எடுக்கும் மருந்துகளில் செயற்கை புரோஜெஸ்ட்ரான் அல்லது ஈஸ்ட்ரோஜன் உள்ளது. அதிகமாக இதை பயன்படுத்தும் போது வருங்காலத்தில் அந்த பெண்ணின் மாதவிடாய் ஓட்டத்தை சீர்குலைக்கும்.
உங்கள் உடலில் நீங்கள் செய்யும் மாற்றங்களில் விழிப்புணர்வு கொண்டிருப்பது அவசியம். அதோடு சுயமாக மருந்துகள் எடுப்பதும் உங்கள் பிரச்சனையை அதிகரிக்க செய்யலாம்.
- இதுவரை பெண்கள் மட்டுமே கருத்தடை சிகிச்சையை செய்து வருகின்றனர்.
- பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையில் ஈடுபடுவதை விட ஆண்கள் மேற்கொள்வதே மிகச்சிறந்தது
அளவான குடும்பம் என்பது ஆரோக்கியமான வாழ்வை தருவது போல, மகத்துவமான சமூகம் உருவாக மக்கள் தொகை கட்டுப்பாடு அவசியமாகும். தற்போது 794 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் நாளுக்கு நாள் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வாறு அதிகரித்து வரும் மக்கள் தொகையினால், மக்கள் அடர்த்தி அதிகரிப்பதோடு அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் பின்னடைவு ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை தடுக்கும் வகையில் உலகில் குடும்ப கட்டுப்பாடு (கருத்தடை) என்ற வழக்கம் தொடங்கியது. பெண்களுக்கு டியூபக்டொமி எனப்படும் சிகிச்சை மூலம் பெண்களின் கருப்பையில் உள்ள பெல்லோபியன் என்ற விந்தணு குழாயில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இதன் மூலம் விந்தணுக்கள் அவர்களின் கருப்பையினுள் செல்வது தடுக்கப்படுகிறது. இதுவரை பெண்கள் மட்டுமே கருத்தடை சிகிச்சையை செய்து வருகின்றனர்.
இதேபோல், ஆண்களுக்கும் வாசக்டாமி எனப்படும் சிகிச்சை முறை உள்ளது. ஆனால் இதை மேற்கொள்பவர்களுக்கு பாதிப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படும் என்ற வதந்தி பரவியது. இதனால், இந்த சிகிச்சையை எடுத்துகொள்ள அனைவரும் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையை ஊக்குவிக்கவும், அனைவரிடத்திலும் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதியை சர்வதேச ஆண்கள் கருத்தடை தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.
இன்றைய சூழலில் ஆண்கள் கருத்தடை சிகிச்சை மேற்கொள்வதினால் ஆண்மை குறைவு, தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை 20 நிமிடங்களில் முடிந்து விடக்கூடிய மிகச்சிறிய அறுவை சிகிச்சையே. இதனால் உடலில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. சிகிச்சைக்கு பின்னரும் அவர்கள் தாம்பத்திய வாழ்வில் முன்பு போலவே ஈடுபடலாம்.
ஒருவேளை நாம் திரும்ப குழந்தைபேறு வேண்டும் என்று விரும்பினால் தலைகீழ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் குழந்தைபேறு பெறும் வசதியும் இதில் உள்ளது. ஆனால் பெண்களில் இது சாத்தியமற்றது. எனவே பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையில் ஈடுபடுவதை விட ஆண்கள் மேற்கொள்வதே மிகச்சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிகிச்சை மேற்கொண்டவர்கள் 3 மாதத்திற்குள் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஏற்கனவே விந்துக்குழாயில் இருக்கும் விந்தணுக்களின் மூலம் குழந்தைப்பேறு உருவாகக்கூடும். எனவே இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டவர்கள் மருத்துவர்களிடம் சோதனை மேற்கொண்ட பின்னரே தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும்.
சர்வதேச ஆண்கள் கருத்தடை தினத்தில் இந்த சிகிச்சை குறித்து அறித்து கொண்டு, பாதுகாப்பான முறையில் கருத்தடை மேற்கொள்ளலாம்.
- காப்பர் டி(Copper T) ஒரு நீண்டகால கருத்தடை சாதனம்.
- இது சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
நம் நாட்டில் கருத்தடை சாதனங்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு மட்டும் இல்லை, அது குறித்து எண்ணற்ற தவறான நம்பிக்கைகளும், கருத்துகளும் உள்ளன. சிலர் அதைப் பாவம் என நினைக்கிறார்கள். சிலர் அதை இன்பத்துக்கு இடைஞ்சல் என நினைக்கிறார்கள்.
பொதுவாக, கருத்தடை வழிமுறைகள், தற்காலிக முறைகள், நீண்டகால முறைகள், நிரந்தர முறைகள் என மூன்றுவகைப்படும். தற்காலிக முறைகளில் காண்டம் எனப்படும் உறை, கருத்தடை மாத்திரை, அவசரநிலை மாத்திரை, கருத்தடை பேட்ச், கருத்தடை வளைவுகள், ஸ்பெர்மசைட், டயாப்ரம், கேப், கருத்தடை ஊசி ஆகியவை அடங்கும். நீண்டகால முறைகளில் காப்பர் டி, கான்ட்ராசெப்டிவ் இம்பிளான்ட் ஆகியவையும் நிரந்தர முறையில் டியூப்பக்டமி, வாசக்டமி ஆகியவையும் அடங்கும். இதில் ஆணுறையும், வாசக்டமியும் ஆண்களுக்கானவை மற்றவை பெண்களுக்கானவை
காப்பர் டி(Copper T) ஒரு நீண்டகால கருத்தடை சாதனம். மாதவிலக்கின் இறுதி நாளில், பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக மருத்துவரால் உள்ளே பொருத்தப்
படும் கருத்தடை சாதனம் இது. இது பல்வேறு அளவுகளில் வருகிறது. அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை ஆயுள்கொண்டது.
ஹார்மோன்கள் கொண்ட காப்பர் டி, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி, விந்துக்கள் எண்டோமெட்ரியத்தை அடைவதைத் தவிர்க்கும், ஹார்மோன்கள் இல்லாத காப்பர் டி, காப்பர் அணுக்களைச் செலுத்தி விந்துக்களின் இயக்கத்தைத் தடுக்கும். மேலும், இதை, விரும்பும்போது அகற்றி, கருத்தரிக்கலாம். காப்பர் டி தோல்வி அடைய 1 சதவிகித வாய்ப்பு மட்டுமே உண்டு. ஆனால், இது சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட்கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட் எனப்படும் சிறிய குச்சி போன்ற கருத்தடை சாதனம், மருத்துவரால் பெண்களின் கைப்பகுதியில் செலுத்தப்படும். இது சினைமுட்டை வெளியேற்றத்தைத் தடுக்கும். மேலும், பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பின் அடர்த்தியை அதிகரித்து, விந்து உட்செல்வதையும் தடுக்கும் என்பதால் மிகவும் பாதுகாப்பான கருத்தடை சாதனம் இது.
ஒருமுறை உட்செலுத்திக்கொண்டால், மூன்று வருடங்கள் முதல் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் வரை கருத்தடை செய்யும். விரும்பினால் இதை அகற்றிக்கொண்டு கருத்தரிக்கலாம். ஒரு சதவிகிதம் மட்டுமே தோல்வி அடைய வாய்ப்பு உள்ள இம்ப்ளான்ட் சாதனம் இது. சிலருக்கு ஒவ்வாமையை
ஏற்படுத்தக்கூடும்.
மாதவிலக்கு முடிந்ததும் முதல் ஐந்து நாட்கள், மாதவிலக்கு நாளுக்கு முன் ஐந்து நாட்களிலும் உடலுறவு கொள்வதால் குழந்தை உருவாக வாய்ப்பில்லை. மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பான நாட்கள் எவை என்பதை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தெரிந்து கொள்ளலாம். இந்த நாட்களில் எந்தத் தயக்கமும் இன்றி தாம்பத்தியம் வைத்துக் கொள்ளலாம்.
உடலுறவின்போது குழந்தை உருவாவதைத் தடுக்க காண்டம் பயன்படுத்துவதே பெரும்பாலானவர்களின் தேர்வாக உள்ளது. இது பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததும் ஆகும். உடலுறவின்போது காண்டம் கிழிந்து விடாமல் இருக்க ஆணுறுப்பில் சரியாகப் பொருத்த வேண்டும். காண்டம் போட்ட பிறகு காற்றுப் புகுவதற்கான வாய்ப்பிருந்தால்தான் உடலுறவின்போது கிழியும் வாய்ப்பு ஏற்படும். எனவே, ஆணுறையை சரியாக, இறுக்கமாகப் போட்டுக் கொண்டால் பயமின்றி உறவை அனுபவிக்கலாம்.
உடலுறவின்போது பாதுகாப்பு இன்றி இருந்தாலோ, காண்டம் கிழிந்து விட்டாலோ கூடக் கவலைப்படத் தேவையில்லை. இந்த நேரங்களில் மருத்துவரின் ஆலோசனையுடன் எமர்ஜென்சி கான்ட்ராசெப்ஷன் மாத்திரை எடுத்து கருஉருவாகாமல் தடுத்திட முடியும். உடலுறவுக்குப் பின் 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.
கரு உருவாவதைத் தடுக்க பெண்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். உடலுறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பில் மாத்திரை வைத்தும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். ஆனால், கரு உருவாவதைத் தடுக்க ஹார்மோன் மாத்திரைகள் பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் இதுபோன்ற மாத்திரைகளைத் தொடர்ந்து பெண்கள் பயன்படுத்தக் கூடாது.
பெண்ணுக்கான கருத்தடை சாதனமாக டயாப்ரம்(Diaphragm) பயன்படுத்தலாம். இந்த சாதனம் 2 முதல் 4 இன்ச் வரை வட்ட வடிவில் ரிங் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருத்தடை சாதனத்தை துவக்கத்தில் மருத்துவரின் ஆலோசனையுடன் பொருத்திக் கொள்ளலாம். பின்னர் பெண் சுயமாக தனது பிறப்புறுப்பில் பொருத்திக் கொள்ளலாம். இதை அணிந்து கொள்வதால் விந்தணு கரு முட்டையுடன் இணைவதைத் தடுக்கலாம்.
IUD என்கிற Intrauterine device என்ற சிறிய பிளாஸ்டிக் சாதன வடிவிலான கருத்தடை சாதனமும் உண்டு. இதனைப் பொருத்திக் கொள்வதன் மூலமும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். காப்பர் டி கருத்தடை சாதனமும் கருத்தடைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதனைப் பொருத்திக் கொள்வதால் வலி, அதிக ரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இதேபோல கரு உருவாவதைத் தடுக்க எடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளின் பக்க விளைவுகளும் மோசமானவை.
திருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம். ஆண்டுக்கணக்கில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுவது நல்லதல்ல. இதனால் பின்னாளில் குழந்தைப் பேற்றில் பிரச்னை வரலாம். எனவே, தாம்பத்யம் இனிக்க பாதுகாப்பான உடலுறவில் கவனம் செலுத்துவதைப் போலவே நீண்ட நாட்கள் தள்ளிப் போடாமலும் இருங்கள்.
தாம்பத்யம் இனிப்பதோடு இணையின் உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஒவ்வாத கருத்தடை முறைகளாக இருந்தால் அவற்றால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகி கண்டிப்பாக தாம்பத்ய இன்பத்தைக் குறைத்திடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்