என் மலர்
நீங்கள் தேடியது "Birthday party of M.K.Stal"
- அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேச்சு
- வேலூரில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
வேலூர்:
வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி மகளிர் 7 ஆயிரத்து 70 பேருக்கு சேலை, 70 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, 570 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, 27 நபர்களுக்கு தையல் எந்திரம்- மற்றும் சலவை பெட்டி வழங்கும் பொதுக்கூட்டம் வேலுார் கோட்டை மைதானத்தில் நடந்தது.
மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர், நந்தகுமார் எம்.எல்.ஏ., அவை தலைவர் முகமது சகி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் கதிர்ஆனந்த் எம்.பி., குடியாத்தம் எம்எல்ஏ அமலு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அவர் பேசியதாவது:
திராவிட இயக்கத்தின் பங்கு என்று பார்க்கும்போது, தி.மு.க 1949-ம் ஆண்டு தொடங்கி இருந்தாலும் கூட, முதன் முதலாக 1957-ம் ஆண்டு தேர்தலில் நின்றது. அப்போது தமிழ்நாட்டில் 15 தொகுதிகளில் தான் தி.மு.க வென்றது.
அதில் காவேரிக்கு அந்த பகுதியில் ஒரே எம்.எல்.ஏ வெற்றி பெற்றார். குளித்தலையில் கருணாநிதி வெற்றி பெற்றார். காவேரிக்கு இந்த பகுதியான வட மாவட்டங்கள் என்று சொல்லபட்ட இங்கு மட்டும் 4 எம்.எல்.ஏ.க்கள் உருவாக்கிய பெருமை உண்டு.
தி.மு.க இயக்கத்தை இன்னும் 50 ஆண்டு காலத்துக்கு அழைத்து செல்ல இளைஞர் பட்டாளம் தேவை. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னால் இளைஞர்கள் கூட்டம் திரள வேண்டும். தமிழகத்தை காப்பற்ற வேண்டிய பொறுப்பு திராவிட இயக்கத்துக்கு உண்டு.
கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆட்சிக்காலத்தில் சட்டசபையில் ஜெயலலிதாவும், பழனிசாமியும் திராவிடம் என்ற வார்த்தையை உச்சரித்ததில்லை. திராவிடம் என்று சொன்னால் நாம் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.
திராவிடம் என்றால் தமிழனின் அடையாளம் என்று நினைக்கிறோம். ஆனால், அவர்களுக்கும் திராவிடத்துக்கும் சம்பந்தம் கிடையாது. அதனால் தான் தமிழ்நாட்டின் முதல்வர் முதன் முதலில் உரையாற்றும்போது 'திராவிட மாடல் ஆட்சி' என்று சொன்னார்.
வேலுார் மையப்பகுதியில் பழமையான பென்ட்லேண்ட் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவனை புனரமைப்பு செய்யப்பட்டால் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்று சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்தார்கள். கடந்த 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் சட்டசபையில் சொன்னபோது, அந்த அரசு செவிடாக இருந்தது.
தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு வேலுார் தலைநகரில் ரூ.150 கோடியில் பென்ட்லேண்ட் மருத்துவனை புனரமைக்க முதல் - அமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.
திருமண உதவி திட்டம் தி.மு.க கொண்டு வந்த திட்டம். அதனுடன் தாலிக்கு தங்கம் என சேர்த்து ஒரு திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். ஆனால் பழனிசாமி ஆட்சிக்காலத்தில் 4 ஆண்டு காலம் என்ன நிலைமை? அந்த திட்டத்துக்கு தங்கமும் தரவில்லை. தாலியும் தரவில்லை. 3 லட்சத்து 49 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தது.
ஏற்கனவே, தங்கத்தை வாங்கி கொடுத்தவர்கள் சரியாக வாங்கி கொடுக்கவில்லை. தகரத்தை வாங்கி கொடுத்ததாக 42 அதிகாரிகள் மீது நடவடிக்கை இருக்கிறது. இதனால் ஸ்டாலின் இந்த திட்டத்தை மாற்றி யோசித்தார்.
பெண்கள் படிக்க வேண்டும். அதற்காகத்தான் கல்லுாரிகளில் படிக்கும் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் உதவித்தொகை என்ற புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி காலை உணவு திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்து முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.விஜய், முன்னாள் எம்.எல்.ஏ.நீலகண்டன், மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநலகாப்பகங்களில் உள்ளவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவு வழங்க வேண்டும்.
- மார்ச் மாதம் முழுவதும் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி என விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.
திருப்பூர்:
தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் நம்பர்-1 முதல்-அமைச்சரும், திராவிட மாடல் ஆட்சியின் நாயகருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா வருகிற 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், வார்டு என மாவட்டம் முழுவதும் தி.மு.க. கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பல்வேறு முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநலகாப்பகங்களில் உள்ளவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவு வழங்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இலவச கண் மருத்துவ முகாம், ரத்த தான முகாம் நடத்த வேண்டும். மார்ச் மாதம் முழுவதும் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி என விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.