search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bision"

    • நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் தங்கியிருந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
    • காட்டெருமை வருவதை பார்த்ததும் ரமேஷ் பகதூர் அதிர்ச்சியடைந்தார்.

    ஊட்டி  

    நேபாளத்தை சேர்ந்தவர் ரமேஷ் பகதூர். (வயது 42)/இவர் தற்போது நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் தங்கியிருந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை அவர் வேலைக்கு செல்வதற்காக கிளிப் ஹவுஸ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காட்டெருமை அவரை தாக்க முயன்றது. காட்டெருமை வருவதை பார்த்ததும் ரமேஷ் பகதூர் அதிர்ச்சியடைந்தார்.பின்னர் சுதாரித்து கொண்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனாலும் காட்டெருமை அவரை விடாமல் துரத்திச் சென்று முட்டி வீசியது.

    இதில் அவர் மார்பு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து கேத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே உயா்அதிகாரிகளுடன் ஊட்டி வந்து கொண்டிருந்த சிறப்பு ரெயில் அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.
    • பா்லியாறு பகுதியின் மலைப் பாதையில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் காட்டெருமை விழுந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ெரயில் பாதையில் யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

    இந்நிலையில், பா்லியாறு பகுதியின் மலைப் பாதையில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் காட்டெருமை விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக ெரயில்வே துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு சென்ற வனத்துறை மற்றும் ெரயில்வே துறையினா், அந்த காட்டெருமையை மீட்டனா். பின்னர் காட்டெருமைக்கு கால்நடை டாக்டர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர்.

    ஆனால் சிறிது நேரத்தில் காட்டெருமை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. இதையடுத்து காட்டெருமையை வனத் துறையினா் அங்கேயே குழி தோண்டி புதைத்தனா்.

    இந்தச் சம்பவத்தால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ெரயில்வே உயா்அதிகாரிகளுடன் ஊட்டி வந்து கொண்டிருந்த சிறப்பு ெரயில் அரை மணி நேரம் தாமதமாக ஊட்டிக்கு வந்து சேர்ந்தது.

    • சாலையோர புதரில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென வழிமறித்து தாக்கியது.
    • இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி(31). இவர் சம்பவத்தன்று கோவில்மட்டம் பகுதிக்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கு உறவினை சந்தித்து பேசி விட்டு மீண்டும், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    ஒன்னட்டி-கோவில்மட்டம் செல்லும் சாலையில் வந்த போது, அங்கு சாலையோர புதரில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென வழிமறித்து தாக்கியது.

    இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    ×