என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bit notice"
- கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரத்தை வினியோகம் செய்தனர்.
- பொள்ளாச்சி ரோடு, பூ கடைக்கார்னர்,தினசரி மார்க்கெட், தாலுகா ஆபீஸ்ரோடு மற்றும் உடுமலை ரவுண்டானா பகுதிகளில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.
தாராபுரம்:
தாராபுரம் தீயணைப்பு துறை நிலை அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்புத்துறை ஊழியர்கள் தீபாவளி பண்டிகை குறித்து விபத்தில்லா பட்டாசை பயன்படுத்த வேண்டி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தாராபுரம் கடைவீதி பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கி கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரத்தை வினியோகம் செய்தனர்.
அப்போது பொள்ளாச்சி ரோடு, பூ கடைக்கார்னர், தினசரி மார்க்கெட், தாலுகா ஆபீஸ் ரோடு மற்றும் உடுமலை ரவுண்டானா பகுதிகளில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. துண்டு பிரசுரத்தில் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் தன் குழந்தைகளை தங்கள் கண்முன்னே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். வாளிகளில் நிறைய தண்ணீர் மற்றும் மணல் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட ஊதுபத்தி உபயோகத்தில் பக்கவாட்டில் பட்டாசு கொளுத்துவது நல்லது. அவ்வாறு கொழுத்தும்போது முகத்தை திருப்பியவாறு கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு நெறிமுறைகள் அந்த துண்டு பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது.