என் மலர்
நீங்கள் தேடியது "Bitcoin"
- 88,817 டாலர்களை எட்டி கிரிப்டோ சந்தையில் முதல் இடத்தில் உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தல் பிட்காயின் மதிப்பை எகிறச்செய்துள்ளது. டிரம்பின் வெற்றி கிரிப்டோகரன்சியில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கிரிப்டோவின் முன்னணி காயினான பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பில் 88,817 டாலர்களை எட்டி கிரிப்டோ சந்தையில் முதல் இடத்தில் உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75.62 லட்சம் ஆகும். 1,00,000 டாலரை நெருங்கிக்கொண்டிருக்கும் பிட்காயின் மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

கிரிப்டோகரன்சியை ஆதரிக்கப்போவதாகத் தனது பிரசாரத்தில் டிரம்ப் சொன்னதே பிட்காயின் வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி பிட்காயின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.75 டிரில்லியன் ஆக உள்ளது. எனவே வெள்ளியின் சந்தை மதிப்பான 1.729 டிரில்லியன் டாலரை தற்போது பிட்காயின் சந்தை மதிப்பு ஓவர்டேக் செய்துள்ளது.
- ஹார்ட் டிரைவ் நியூபோர்ட் குப்பைக்கிடங்கில் ஒரு லட்சம் டன் கழிவுகளுக்கு கீழ் புதைந்துள்ளது.
- பிட்காயின் விலை லட்சக்கணக்கில் அதிகரித்து வருவதையடுத்து, ஹோவல்ஸுக்கு தான் பிட்காயின் வாங்கியது குறித்து ஞாபகம் வந்தது.
இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தை சேரந்தவர் ஹல்பினா எட்டி-இவான்ஸ். இவரது முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹோவல்ஸ் கடந்த 2009-ம் ஆண்டு 8,000 பிட்காயின்களை வாங்கினார். அதன் தற்போதைய மதிப்பு 569 மில்லியன் பவுண்ட்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,900 கோடி) ஆகும்.
ஆனால், ஹோவல்ஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் பிட்காயின் வாங்கியதை மறந்துவிட்டார். இதற்கிடையே வீடுகளை சுத்தப்படுத்தும்போது, அந்த பிட்காயின் மற்றும் அதன் டிஜிட்டர் கீ விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிரைவ்வை அவரது முன்னாள் காதலி ஹல்பினா தவறுதலாக குப்பைத் தொட்டியில் வீசிவிட்டார்.
தற்போது பிட்காயின் விலை லட்சக்கணக்கில் அதிகரித்து வருவதையடுத்து, ஹோவல்ஸுக்கு தான் பிட்காயின் வாங்கியது குறித்து ஞாபகம் வந்தது. தற்போது அவர் வாங்கிய பிட்காயின் தகவல் தொகுப்பு அடங்கிய ஹார்ட் டிரைவ் நியூபோர்ட் குப்பைக்கிடங்கில் ஒரு லட்சம் டன் கழிவுகளுக்கு கீழ் புதைந்துள்ளது.
இதுகுறித்து ஹோவல்ஸ் கூறும்போது, குப்பைக் கிடங்கில் எனது ஹார்ட் டிரைவ்வை தேட அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். ஹார்ட் டிரைவ் திரும்ப கிடைக்கும்பட்சத்தில் நியூபோர்ட் நகர மேம்பாட்டுக்கு 10 சதவீத தொகையை தானமாக அளிப்பேன் என்றார்.
- பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டது.
- கிரிப்டோ கரன்சி சந்தையில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 20-ந் தேதி 47-வது அதிபராக பதவி ஏற்கிறார். அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க இருப்பது இது 2-வது முறையாகும்.
இந்த நிலையில் டிரம்ப் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்ந்ததால் தங்கம், வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டது. அத்தனையையும் விட கவனம் பெற்றது கிரிப்டோகரன்சியின் விலை உயர்வு.
அந்தவகையில், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் 97,594.85 அமெரிக்க டாலர் (ரூ. 83 லட்சம் ) என்று இருந்தது. விரைவில் 1 லட்சம் டாலரை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டாலரை இன்று தொட்டது. இந்திய ரூபாயின் மதிப்புபடி 85 லட்சத்தை தொட்டது. இன்று எட்டியுள்ள புதிய உச்சம் கிரிப்டோ கரன்சி சந்தையில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முதல் முறையாக 1 லட்சம் அமெரிக்க டாலரை தொட்டது. பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவராக பால் அட்கின்சை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்த நியமனத்துக்கு பிறகு தான் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற 4 வாரத்தில் கிரிப்டோ கரன்சி 45 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தல் நாளில் கிரிப்டோ கரன்சி 69,374 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது 1,01,512 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
- கிரிப்டோகரன்சி பிட்காயின் துறையில் பிரதானமாக விளங்குவது ஜப்பானில் இயங்கும் பைனான்ஸ் [Binance] நிறுவனம்
- பிளாக்செயின் துறையில் இயங்கும் 5ireChain என்ற நிறுவனத்தின் நிறுவனர் பிரதிக் கௌரி
கிரிப்டோகரன்சி பிட்காயின் துறையில் பிரதானமாக விளங்குவது ஜப்பானில் இயங்கும் பைனான்ஸ் [Binance] நிறுவனம். இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் சீனாவை சேர்ந்த சாங்பெங் சாவோ [Changpeng Zhao].
பிளாக்செயின் துறையில் இயங்கும் 5ireChain என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி [CEO] ஆக இருப்பவர் இந்தியாவை சேர்ந்த . இவர்கள் இருவரும் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியின்போது செல்பி எடுத்துள்ளனர்.
அதை பிரதிக் கௌரியின் 5ireChain நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இதை பார்த்த சாங்பெங் சாவோ, அனுமதி இல்லாமல் தனது புகைடபத்தை பகிர்ந்துகொண்டதற்காகப் பிரதிக் கௌரியை கடிந்துகொண்டார்.
என்னுடன் எடுத்த செல்பியை எப்படி உபயோகப்படுத்தக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம், நாங்கள் பேசிக்கொள்ளக் கூட இல்லை, நிகழ்ச்சியில் வெறும் செல்பி மட்டும்தான் எடுத்துக்கொண்டோம் என்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறினார்.
இதனையடுத்து அந்த இடுக்கையை 5ireChain நிறுவனம் நீக்கி, எங்கள் நிறுவனர் & CEO பிரதிக் கௌரி மற்றும் Changpeng Zhao ஆகியோருக்கு இடையே எந்த ஒத்துழைப்பு அல்லது வணிக கூட்டணியையும் குறிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
- பைபிட் (Bybit) நிறுவனம் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது.
- திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து வெவ்வேறு வாலட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைபிட் (Bybit) மிகப்பெரிய கிரிப்டோ ஹேக்கிங் திருட்டுக்கு இரையாகி உள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) பைபிட் நிறுவனம், அதன் ஆஃப்லைன் ஹாட் வாலட்களில் ஒன்றிலிருந்து Ethereum (ETH) திருடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் அறிக்கைப்படி, 401,346 ETH டோக்கன் (1.13 பில்லியன் டாலர் மதிப்பு) பைபிட்டின் ஹாட் வாலட்டில் இருந்து அடையாளம் தெரியாத வாலட் முகவரிக்கு மாற்றப்பட்டது.
பரிமாற்றத்தைத் தொடர்ந்து, திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து வெவ்வேறு வாலட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் விசாரித்து வருகிறோம். இதனால் மற்ற பரிமாற்றங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பைபிட் தலைமை நிர்வாக அதிகாரி பென் சோவ் தெரிவித்துள்ளார்.
இணையம் மற்றும் வணிக செய்திகளில் பிட்காயின் (Bitcoin) எனும் கள்ளப்பணம் ஸ்பாட் லைட் பெற்றிருக்கிறது. பொதுவாக பிட்காயின் என்பது இணையத்தில் (கள்ளப்பரிமாற்றம் செய்ய மட்டும்) பயன்படுத்தக்கூடிய பணம் எனலாம். ஆனால் இதனை கொண்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருட்களை வாங்கவோ, இதர சேவைகளை பெறவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.
பிட்காயின் என்பது கள்ளச் சந்தையில் பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட பணம் ஆகும். இதனை கண்டறிந்தவர் மற்றும் அவரது பின்புலம் இதுவரை யாரும் அறியாத ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 16,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,31,728 வரை உயர்ந்ததே, பிட்காயின் திடீர் டிரென்ட் ஆக காரணமாக அமைந்துள்ளது.
இணையத்தில் மொத்தம் 2.1 கோடி பிட்காயின்கள் மட்டும் புழக்கத்திற்கு விநியோகம் செய்யப்பட இருக்கின்றது. எனினும் இத்தகைய பிடிகாயின்களை விநியோகம் செய்ய 2140-ம் ஆண்டு வரை ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை மட்டும் இணையத்தில் மொத்தம் 1.67 கோடி பிட்காயின்கள் புழக்கத்திற்காக விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
கள்ளச்சந்தையில் இணைய பரிமாற்றங்களின் போது இதுவரை 9,80,000 பிட்காயின்கள் ஹேக்கர்கள் மற்றும் பல்வேறு திருடர்களால் திருடப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 1500 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடிகளை (967245000000) தொடுகிறது.
ஒரே ஆண்டில் 1700 சதவீதம் உயர்ந்த பிட்காயின் விலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி நிலவரப்படி 17 ஆயிரத்து 752 டாலர்களாக அதிகரித்தது. அந்த மாதத்தில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 77 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் துமக்கூரு நகரை சேர்ந்த பட்டதாரியான ஹரிஷ் என்பவர் ‘அன்காயின் டெக்னாலஜிஸ்’ என்னும் நிறுவனத்தை தொடங்கி, இணையத்தின் மூலமாக பிட்காயின் பரிவர்த்தனைகளை செய்து வந்தார்.
மேலும், ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளை மீறிய வகையில் பெங்களூரு நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில் அனுமதியின்றி பிட்காயின் ஏ.டி.எம். ஒன்றையும் கடந்த வாரம் ஹரிஷ் திறந்துள்ளார்.
இதை தொடர்ந்து பெங்களூரு போலீசார் நேற்று ஹரிஷை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரித்து வருகின்றனர். #Bizmanheld #BitcoinATM #BengaluruBitcoinATM
