என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJD"

    • பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
    • முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் அம்மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. 24 வருடமாக ஒடிசாவில் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 147 இடங்களில் 78 இடங்களை பாஜகவும் 51 இடங்களை பிஜு ஜனதா தளமும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 14 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர்த்து 3 சுயேட்ச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

    ஒடிசாவின் புதிய முதல்வராக பாஜகவின் மோகன் சரண் மாஜி நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த முறை பதிவியேற்பவர்களில் 82 பேர் முதல் முறையாக எம்.எல்.ஏக்களாக பதியேற்பவர்கள் ஆவர்.

    சட்டமன்றத் தேர்தலில் கன்டாபாஞ்சி மற்றும் கின்ஜிலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கின்ஜிலியில் வெற்றி பெற்ற நிலையில் கன்டாபாஞ்சில் பாஜக வேட்பாளர் லக்ஷ்மன் பக் என்பவரிடம் 16,334 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

    அதாவது, நவீன் பட்நாயக் கின்ஜிலியின் எம்.எல்.ஏ வாக மேடையில் பதிவேற்றபின் இறங்கி நடந்து வரும்போது கன்டாபாஞ்சில் அவரை தோற்கடித்து முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    உடனே பட்நாயக் ' ஓ நீங்கள் தான் என்னை தோற்கடித்தீர்கள்' என்று கூறியபடி அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து அகன்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஆயுத எழுத்து' படத்தில் பழம்பெரும் அரசியல்வாதியாக இருக்கும் பாரதிராஜாவும் முதல்முறையாக சட்டமன்றத்துக்கு வரும் சூர்யாவும் கிளைமாக்சில் சந்தித்து பேசும் காட்சியை தற்போது ஒடிசா சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் பிரதி செய்வதாக அமைத்துள்ளது என நெட்டிசன்கள் அபிப்பிராயப்படுகின்றனர். முன்னதாக நவீன் பட்நாயக் பதியேற்க சட்டமன்றத்துக்குள் வரும்போது பாஜகவினர் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 

     

    • இந்த முறை பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் பிரச்சனையை மட்டுமே பேசப்போவதில்லை.
    • பாஜக தலைமையிலான அரசு ஒடிசா மாநில நலத்தை புறக்கணித்தால், போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

    மக்களவை தேர்தலில் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. சட்டசபை தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது. அந்த கட்சிக்கு 9 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனர்.

    இந்திய நாடாளுமன்றம் மக்களவை இன்று கூடியது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்று வருகின்றனர். ஜூன் 27-ந்தேதி மாநிலங்களவை கூட இருக்கிறது. இந்த நிலையில் நவீன் பட்நாயக் தனது கட்சி மாநிலங்களவை எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மாநில நலன் குறித்து மாநிலங்களவையில் கடுமையான வகையில் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அக்கட்சிக்கான மாநிலங்களவை எம்.பி. தலைவர் சஸ்மித் பத்ரா கூறியதாவது:-

    இந்த முறை பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் பிரச்சனையை மட்டுமே பேசப்போவதில்லை. பாஜக தலைமையிலான அரசு ஒடிசா மாநில நலத்தை புறக்கணித்தால், போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

    கடந்த 10 ஆண்டுகளாக நிலக்கடி சுரங்க ராயல்டி ஒடிசாவுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அந்த ராயல்டி கிடைக்கும் வகையில் கோரிக்கை வைப்போம். இதன் காரணமாக எங்கள் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமையான பங்கு குறைக்கப்பட்டு மக்கள் இழப்பை சந்தித்து உள்ளனர்.

    பாஜகவுக்கு ஆதரவு கிடையாது. நாங்கள் எதிர்க்கட்சிகள் மட்டுமே ஒடிசா மாநிலத்திற்கான நலனை காப்பாற்றுவதற்கான எந்த எல்லை வரையும் செல்வோம். பாஜகவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. ஒடிசாவின் நலம் புறக்கணிக்கப்பட்டால் கடுமையான வகையில் எதிர்க்க வேண்டும் என நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பாஜகவும் பிஜு ஜனதா தளமும் தனித்தனியாக போட்டியிட்டு வந்தாலும் பாஜகவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தது. தற்போது பாஜக கடுமையாக விமர்சனம் செய்து ஒடிசாவில் ஆட்சியை பிடித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளது.

    • பிஜு ஜனதா தளத்தின் மாநிலங்களவை எம்.பி. சுஜித் குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
    • கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சி மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்தவர் சுஜித் குமார். இவரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார்.

    கட்சி விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுஜித்குமார், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரிடம் கொடுத்தார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்த சுஜித்குமார் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

    • பச்சை நிறத்தில் இருந்த பள்ளி சீருடைகள் ஏற்கனவே கலர் மாற்றப்பட்டுள்ளது.
    • தற்போது பள்ளி கட்டிடங்களின் நிறங்களை மாற்ற பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

    ஒடிசாவில் இரண்டு தசாப்தங்களாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வந்தது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 2000 முதல் 2024 வரை முதல்வராக இருந்தார். பிஜு ஜனதா தளம் கட்சியின் கொடி பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் பச்சை நிறத்தில் காட்சியளித்தன.

    ஒடிசா மாநிலத்தில் அரசின் அதிகாரப்பூர்வ கட்டிங்கள் உள்பட அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பச்சை நிறத்தில்தான் காட்சியளித்தன.

    கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    அதில் இருந்து பச்சை நிறம் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. முதலில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளின் சீருடை நிறம் பச்சையில் இருந்து லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிறங்களுக்கு மாறியது.

    இந்த நிலையில் அரசு பள்ளிக்கூடங்களில் அடர்ந்த ஆரஞ்ச் நிறம் (orange-tan) பார்டர் உடன் லைட் ஆரஞ்ச் நிறமாக மாற்ற வேண்டும் என ஒடிசா பள்ளி கல்வி திட்ட ஆணையம் (OSEPA) அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    இதனால் பச்சை நிறமாக காட்சியளித்து வந்த அரசு பள்ளிக்கூடங்கள் இனிமேல் காவி நிறமாக காட்சியளிக்க இருக்கிறது.

    பாஜக அரசின் இந்த முடிவு, கல்வியை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதி என எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.

    ஒடிசா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடந்து வருகிறது.

    147 இடங்களை கொண்ட ஒடிசா சட்டசபைக்கு நான்கு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்தது. பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவை தனித்தே போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 139 தொகுதிகளில் போட்டியிட்டது.

    பகுஜன் சமாஜ் வாடி (107 இடங்கள்), ஆம் ஆத்மி (15) ஆகியவையும் களத்தில் நின்றன. ஒடிசாவில் அசைக்க முடியாத சக்தியாக நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

    கருத்துகணிப்புகள் தெரிவித்தபடி ஓட்டு எண்ணிக்கையில் நவீன்பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சி முன்னிலை பெற்றது. பல தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலையில் இருந்தனர். இதனால் பிஜுஜனதாதளம் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    89 தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளியான போது பிஜு ஜனதாதளம் 63 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பா.ஜனதா 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. ஒடிசாவில் மெஜாரிட்டிக்கு 74 இடங்கள் தேவை.

    பிஜு ஜனதா தளம் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் ஆட்சியை தக்க வைக்கிறது.

    நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக முதல்-மந்திரி ஆக உள்ளார். அவர் 2000, 2004, 2009, 2014-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று இருந்தார். மீண்டும் ஒருமுறை தனது பலத்தை நிரூபித்து ஒடிசா மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் 117 தொகுதிகளை வென்று இருந்தது.
    ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.



    முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் நேற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து தேர்தல் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர். நவீன் பட்நாயக்கிடம் இருந்த கைப்பைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
    பிஜு ஜனதா தளம் கட்சியில் மும்பை முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் அரூப் பட்நாயக் புவனேஷ்வர் எம்.பி. தொகுதியில் போட்டியிடுகிறார்.
    ஒடிசா:

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அங்கு 21 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலுக்கு 147 தொகுதிக்கான சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

    ஒடிசாவில் 4 கட்டங்களாக ஏப்ரல் 11, 18, 23 மற்றும் 29-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. ஆளும் பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது.

    இந்த நிலையில் 9 பாராளுமன்ற தொகுதி மற்றும் 36 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்து உள்ளது. மும்பை முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் அரூப் பட்நாயக் புவனேஷ்வர் எம்.பி. தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே எம்.பி.க்களாக உள்ள 7 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    எம்.பி. வேட்பாளர் பட்டியலில் 3 பெண்கள் இடம் பெற்று உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி நவீன்பட்நாயக் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
    ஒடிசாவில் 21 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் நிச்சயம் வெற்றி பெறும் என ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கூறியுள்ளார். #NaveenPatnaik #BJD
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலையையும் வீழ்த்தி பிஜூ ஜனதா தளம் கட்சி மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த முறையும் அந்த கட்சி தனித்து களம் இறங்குகிறது. தேர்தல் பிரசாரத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா மாநில முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் பேசுகையில், ஒடிசாவில் உள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் நிச்சயம் வெற்றி பெற்று, மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றார்.

    மேலும், ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்குறுதி அளித்த பா.ஜனதா, அதிகாரத்துக்கு வந்ததும் அதை புறக்கணித்து விட்டதாக நவீன் பட்நாயக் குற்றம் சாட்டினார். 
    ஒடிசாவில் அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்படும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #NaveenPatnaik #LokSabha
    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜூ ஜனதாதளம் கட்சி 118 தொகுதிகளில் வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக உள்ளார். அதேபோல 21 பாராளுமன்ற தொகுதிகளில் 20 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.

    நடைபெற உள்ள தேர்தலிலும் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளிலும், 21 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்தும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் எங்கள் கட்சி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார். #NaveenPatnaik #LokSabha 
    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகின்றது. மாலை 6 மணியளவில் இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீர்மானம் மீதான விவாதம் முடிந்ததும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அப்படி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஒட்டெடுப்பு நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் புறக்கணித்துள்ளதால், மெஜாரிட்டி எண் குறைந்துள்ளது. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கிடையே, தீர்மானம் மீதான விவாதத்தை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சி புறக்கணித்துள்ளது.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 
    பிஜு தனதா தளம் கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் பைஜயந்த் பாண்டா தனது பதவியை ராஜினாமா செய்வதாக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    புபனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பைஜயந்த் பாண்டா. பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பாண்டா சமீபத்தில் கட்சிக்கு விரோதமாக கருத்து கூறியதால், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளானார். இதன் பின்னர், கட்சியை விட்டு பாண்டா விலகினார்.

    அவர் பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக மக்களவை சபாநாயகருக்கு பாண்டா இன்று கடிதம் எழுதியுள்ளார். எனினும், அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வது குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. 
    ×