என் மலர்
நீங்கள் தேடியது "bjp member killed"
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி பெரிய கடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர், பாரதீய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவராக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை திருப்பூண்டி அருகே உள்ள கீரைநேரி ஏரி கரையில் செந்தில்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமார் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் திருப்பூண்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இதயத்துல்லா(41) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்தில்குமார் மனைவியிடம் இதயத்துல்லா தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனை அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், இதயத்துல்லாவிடம் தகராறு செய்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் இதயத்துல்லா தனது நண்பரான கீழ்வேளூர் தாலுகா பொரவச்சேரி கீழத்தெரு சேர்ந்த பரமேஸ்வரன்(41) என்பவரை அழைத்து வந்து செந்தில்குமாருடன் காரில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி மதுகுடித்து உள்ளனர். இந்த சந்தர்ப்பந்தை பயன்படுத்தி 2 பேரும் சேர்ந்து செந்தில்குமாரை கீரைநேரி ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கீழையூர் போலீசார் இதயத்துல்லா, பரமேஸ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கும்பகோணம்:
மதம் மாற்றம் செய்வது குறித்து எதிர்த்து பேசியதால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து திருபுவனம் பகுதியில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை திருபுவனம் வந்தார். பின்னர் ராமலிங்கம் வீட்டுக்கு சென்று அவரது மகன்கள், மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.
இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத மாற்றம் குறித்து கேள்வி கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. அவர் பேசியது நியாயமாக தான் பேசி உள்ளார். கொலை குற்றவாளிகளை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும்.
நான் ராமலிங்கம் வீட்டுக்கு செல்லும் வழியை போலீசார் தடை செய்தனர். மாற்று வழியில் செல்லும் நிலைமை ஏற்பட்டது. கொலை குற்றவாளிகளை போலீசார் பதுக்கி வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளது.
தமிழகத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை அரசு தடை செய்ய வேண்டும். இந்துக்கள் பாதிக்கப்பட்டால் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோர் குரல்கொடுக்க மாட்டார்கள். ராமலிங்கம் கொலையை கண்டித்து இவர்கள் ஏதும் கூறவில்லை. திராவிட கட்சிகள், இந்து மதத்தை அழிக்கும் செயலை செய்து வருகின்றன.
கேரளாவில் நடந்த தேர்வில் இஸ்லாமிய மதம் குறித்த கேள்வியை தயாரித்த ஜோசப் என்பவரின் கை வெட்டப்பட்ட சம்பவம் நடந்தது. இதேபோல் தான் ராமலிங்கத்தின் கொலையும் நடந்துள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ராமலிங்கம் படுகொலையை கண்டித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள், சமுதாய அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.