என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BJP rally"
- தேசியக்கொடியுடன் பேரணி செல்ல அனுமதி மறுத்தது துரதிருஷ்டவசமானது.
- தேசியக்கொடியை மரியாதையுடன் கண்ணியமாக எடுத்து செல்ல வேண்டும்.
சென்னை:
இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் பைக் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதிகளிலும் இந்த பைக் பேரணியை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
எனவே, இந்த பைக் பேரணிக்கு அனுமதி கேட்டு அந்தந்த மாவட்ட போலீசில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பைக் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
மாவட்ட தலைநகரங்களில் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கோவை மாவட்ட பாஜக செயலாளர் கிருஷ்ண பிரசாத் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் பைக் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாஜக தாக்கல் செய்திருந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
தேசியக்கொடியுடன் பேரணி செல்ல அனுமதி மறுத்தது துரதிருஷ்டவசமானது. சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏந்தி பேரணி செல்வதை தடை செய்யக்கூடாது என்று தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.
தேசியக்கொடியை மரியாதையுடன் கண்ணியமாக எடுத்து செல்ல வேண்டும்.
பேரணியில் பங்கேற்பவர்கள் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்யும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. பேரணி ஏற்பாட்டாளர்கள், வழித்தடம் குறித்த தகவல்களை காவல் துறையினருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏந்தி சென்னையில் பாஜகவினர் பைக் பேரணி செல்ல நிபந்தனையுடன் அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவினர் மீதான தாக்குதலை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா ரத யாத்திரை நடத்த திட்டமிட்டது. இதை பா.ஜனதா தலைவர் அமித்ஷா தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
பா.ஜனதா யாத்திரை நடத்தினால் மத ரீதியான சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அதற்கு மாநில அரசு தடை விதித்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களும் அனுமதி மறுத்து விட்டனர்.
இதை எதிர்த்து பா.ஜனதா சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பா.ஜனதா யாத்திரைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இது முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
இந்த நிலையில் ஒரு நீதிபதி உத்தரவை எதிர்த்து மாநில அரசு சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி தபசிங் கர்குப்தா, நீதிபதி அரிந்தம் முகர்ஜி அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தனர். அவர்கள் பா.ஜனதா ரத யாத்திரைக்கு அனுமதி அளித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர்.
இது தொடர்பாக போலீஸ் மற்றும் உளவுத்துறை அளித்த அறிக்கைகளை நீதிபதி ஆய்வு செய்ய தவறி விட்டார். எனவே இதுபற்றி மீண்டும் ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கை அதே நீதிபதிக்கே திருப்பி அனுப்புவதாக தெரிவித்தனர்.
31 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் 5 கமிஷனர்களின் அறிக்கைகளை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
பா.ஜனதா இந்த மாதம் இறுதியில் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டது. இன்று முதல் ஜனவரி 1-ந்தேதி வரை கோர்ட்டுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் ஜனவரி மாதத்தில்தான் ரத யாத்திரை தொடர்பான தீர்ப்பு வரும். இதனால் திட்டமிட்டப்படி ரத யாத்திரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கொல்கத்தா ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் விடுமுறை கால பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்போவதாக பா.ஜனதா தெரிவித்து உள்ளது. #BJPRally
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியின் கீழ் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் நடக்க உள்ள மெகா பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
அந்த பேரணியில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து உத்தரவிட்டது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து உரையாற்ற உள்ளார் என பா.க.ஜ.வினர் தெரிவித்துள்ளனர். #BJP #PMModi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்