search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுதந்திர தினம்: தேசியக்கொடி பேரணி நடத்த பாஜகவுக்கு அனுமதி
    X

    சுதந்திர தினம்: தேசியக்கொடி பேரணி நடத்த பாஜகவுக்கு அனுமதி

    • தேசியக்கொடியுடன் பேரணி செல்ல அனுமதி மறுத்தது துரதிருஷ்டவசமானது.
    • தேசியக்கொடியை மரியாதையுடன் கண்ணியமாக எடுத்து செல்ல வேண்டும்.

    சென்னை:

    இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் பைக் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதிகளிலும் இந்த பைக் பேரணியை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

    எனவே, இந்த பைக் பேரணிக்கு அனுமதி கேட்டு அந்தந்த மாவட்ட போலீசில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பைக் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    மாவட்ட தலைநகரங்களில் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கோவை மாவட்ட பாஜக செயலாளர் கிருஷ்ண பிரசாத் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில் பைக் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாஜக தாக்கல் செய்திருந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    தேசியக்கொடியுடன் பேரணி செல்ல அனுமதி மறுத்தது துரதிருஷ்டவசமானது. சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏந்தி பேரணி செல்வதை தடை செய்யக்கூடாது என்று தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.

    தேசியக்கொடியை மரியாதையுடன் கண்ணியமாக எடுத்து செல்ல வேண்டும்.

    பேரணியில் பங்கேற்பவர்கள் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்யும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. பேரணி ஏற்பாட்டாளர்கள், வழித்தடம் குறித்த தகவல்களை காவல் துறையினருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏந்தி சென்னையில் பாஜகவினர் பைக் பேரணி செல்ல நிபந்தனையுடன் அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×