என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BlackBerry"
- கடந்த மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பட்டியை சிலர் தங்களது வீடுகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.
- இருப்பு கருப்பட்டிக்கு விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்தோம் என்று உற்பத்தியாளர் ஒருவர் கூறினார்.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும் என விளம்பர போர்டு வைத்து விற்பனை செய்வார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது உடன்குடி கருப்பட்டி.
தற்போது கருப்பட்டி உற்பத்தி சீசன் இல்லை. கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பட்டியை சிலர் தங்களது வீடுகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள். தற்போது உட ன்குடி வட்டார பகுதியில் மழை குறைந்து, இரவு-பகலாக பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் இருப்பு வைத்த கருப்பட்டியில் பூஞ்சை என்ற வெள்ளை நிறத்தில் நூல் போன்றபாசி படிகிறது. இதை தடுக்க கருபட்டிக்கு புகைமூட்டம் போடுகிறார்கள், அப்படி இருந்தும் சில இடங்களில் கருப்பட்டி கசிந்து தண்ணீராக வெளி வருகிறது. இது பற்றி கருப்பட்டி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-
கடந்த காலங்களில் உற்பத்தி செய்த கருப்பட்டியை வீடுகளில் பரன்களில் போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளோம். இருப்பு கருப்பட்டிக்கு விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்தோம். ஆனால் தற்போது மழைக்காலத்தில் மழை பெய்யாமல் இரவு-பகலாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
மழை பெய்தால் கூட கருப்பட்டிக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் பனிப்பொழிவு கருப்பட்டியை பதம் பார்த்துவிடும். இந்த பனிப்பொழிவால் எல்லா கருப்பட்டியிலும் பூஞ்சை பிடிக்கிறது. புகை போட்டாலும் அதை மீறி பூஞ்சை பிடிக்கிறது. கூடுதல் விலைக்கு ஆசைப்பட்டு இருப்பு வைத்தோம்.ஆனால் பனிப்பொழிவில் எல்லாம் கசிந்து விடும் போல தெரிகிறது என்று கவலையுடன் கூறினார்.
கீ2 ஸ்மார்ட்போனின் பாதுகாப்பான மென்பொருள், மற்றும் கீபோர்டு ஸ்மார்ட்போனினை பயன்படுத்த சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. எனினும் இது போட்டி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் பிளாக்பெரி கீ2 எல்.இ. என்ற பெயரில் FCC தளத்தில்: BBE100-1 (சிங்கிள் சிம்) மற்றும் சர்வதேச சந்தைகளில் BBE100-4 (டூயல் சிம்), BBE100-2 (சிங்கிள் சிம்) மற்றும் அமெரிக்க சந்தைகளில் BBE100-5 (டூயல் சிம்) மற்றும் BBE100-3 பெயர்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் லூனா என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன் 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே, 4 அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிளாக்பெரி கீ2 எல்.இ. மாடலில் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் 13 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய விலை குறைந்த ஸ்மார்ட்போன் ரெட், புளூ மற்றும் காப்பர் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் புதிய ஸ்மார்ட்போன் புளூ அல்லது பிளாக் நிற ஃபினிஷ் செய்யப்பட்டு பக்கவாட்டுகளில் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. #blackberrykey2
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்