search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blockage of the cooling paint path"

    • தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்கள் இந்த பாதையில் நின்றால் அவர்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்காது என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • ஒரே நாளில் இந்த பாதையில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், சிறுவர்கள் வழுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து பாத யாத்திரையாக பழனி க்கு வந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். மேலும் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தினந்தோறும் வெள்ளி க்காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தந்த சப்பரம், தங்கமயில், வெள்ளி யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி சன்னதி வீதி, கிரி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    பக்தர்களின் வசதிக்காக கடந்த வாரம் கூலிங் பெயிண்ட் பாதை அமைக்க ப்பட்டது. தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்கள் இந்த பாதையில் நின்றால் அவர்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்காது என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தம் எடுத்து வரும் பக்தர்கள் இந்த பாதையில் அதிக அளவில் நடந்து வருவதால் ஈரமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பின்னால் வரும் பக்தர்கள் வழுக்கி கீழே விழுந்து விடுகின்றனர். நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த பாதையில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், சிறுவர்கள் வழுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இந்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டது.

    எனவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், பக்தர்கள் சிரமம் இன்றி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று திரு க்கல்யாணம் நடைபெறு கிறது. நாளை கிரி வீதி தேரடியில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

    ×