என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "blood sugar"
- சிறைக்கு சென்ற பின்னர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறைக்கு சென்ற பின்னர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் கெஜ்ரிவால், நீரிழிவு நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மேலும் கெஜ்ரிவாலின் கடுமையான நீரிழிவு மற்றும் ரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கம் குறித்து தினமும் 15 நிமிடங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கோர்ட்டு நிராகரித்தது.
அதேநேரம் கெஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இன்சுலின் ஊசி அவசியமா? என்பதை ஆய்வு செய்யவும், அவரது பிற உடல்நல பிரச்சினைகளை பரிசோதிக்கவும் மருத்துவக்குழு ஒன்றை அமைக்குமாறு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை அளவு 320-ஐ தாண்டியதால் நேற்று இரவு அவருக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி 2 யூனிட் இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
சிறைக்கு சென்ற பின்னர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இன்சுலின் செலுத்தப்பட்டதை திகார் சிறை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.
இது குறித்து ஆம்ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியிருப்பதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கலில் தள்ளுவதற்காக, சிறையில் திட்டமிட்ட சதி மூலம் அவருக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோர்ட்டு உத்தரவுக்குப் பிறகு, எய்ம்ஸ் நிபுணர் கெஜ்ரிவாலை பரிசோதித்ததும் அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டது. இதன்மூலம் பா.ஜ.க. மற்றும் மத்திய அரசின் எண்ணம் அம்பலமாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
- தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும்.
நம் முன்னோர்கள் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை தேர்வு செய்து அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்ளவும் செய்தார்கள். அதிலும் குறிப்பாக இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிடுமாறு அறிவுறுத்தினார்கள். இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் அது சாத்தியமில்லாததாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கையாண்ட உணவுப்பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் ஆயுளை நீட்டிக்க செய்தன. இரவு 7 மணிக்குள் ஏன் சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறி சென்றதன் பின்னணியில் இருக்கும் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள் உங்கள் கவனத்திற்கு....
செரிமானம் மேம்படும்:
இரவு 7 மணிக்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டால் அதனை ஜீரணமாக்குவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். அதைவிடுத்து இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அவற்றின் செயல்பாடு தாமதமாகும். இரவு 7 மணிக்குள் சாப்பிடுவது செரிமான அமைப்பு சுமூகமாக செயல்பட வழிவகை செய்யும்.
ஊட்டச்சத்து உறிஞ்சப்படும்:
உணவில் இருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்க வேண்டும். இரவு உணவை முன்கூட்டியே உண்ணும்போது உடல் சுறுசுறுப்பாக இயக்கி ஊட்டச்சத்து உறிஞ்சுதல் செயல்முறையை துரிதப்படுத்தும். இரவு தாமதமாக உட்கொள்ளும்போது அந்த செயல்முறையும் தாமதமாகும்.
தூக்கத்தை வரவழைக்கும்:
இரவில் தாமதமாக சாப்பிடும்போது உணவு ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுவதன் மூலம் உடல் தூக்கத்திற்கு சீக்கிரமாகவே இசைந்து கொடுக்கும். ஆழ்ந்த தூக்கத்தையும் பெற முடியும்.
ஆற்றல் மேம்படும்:
தூக்கத்தின்போது உடல் இயற்கையாகவே புத்துணர்ச்சி பெறுவதற்கான செயல்முறை நடைபெறும். ஆனால் இரவில் தாமதமாக சாப்பிடும்போது செரிமானம் ஆவதற்கே உடலின் ஆற்றல் முழுவதும் செலவிடப்படும். அதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்காது. இரவில் தூங்கினாலும் கூட காலையில் மந்தமான உணர்வு எட்டிப்பார்க்கும். இரவு உணவை முன்கூட்டியே சாப்பிட்டுவிட்டு தூங்கினால் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும். உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைத்து, அடுத்த நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்பட முடியும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்:
தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிக அளவு உணவு உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இரவு 7 மணிக்கு முன்பு சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும். வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
குடும்ப நேரம்:
இரவு உணவை குடும்பத்தினருடன் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு குறிப்பிட்ட நேரத்தை நிர்வகிக்க வேண்டும். அந்த நேரத்தில் அனைவரும் ஒன்று கூடி உணவருந்தும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அப்படி செய்வது இரவு உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கத்தை தடுத்துவிடும்.
உடல் எடை நிர்வகிக்கப்படும்:
மாலை, இரவு நேரங்களில் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடு குறைந்துவிடும். அதனால் உடலில் சேரும் கலோரிகளை எரிப்பது சவாலானது. தாமதமாக சாப்பிடும்போது உடலில் சேரும் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக மாறக்கூடும். அதனால் உடல் எடை அதிகரிக்க தொடங்கும். உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் உடல் எடையை நிர்வகிப்பதற்கு இரவு உணவை சீக்கிரமாக உட்கொள்வது நல்லது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்