என் மலர்
நீங்கள் தேடியது "BMW G 310 R"
- பி.எம்.டபிள்யூ. நிறுவனம் மேம்பட்ட G 310 R மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட ரூ. 5 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 2022 G 310 R மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 R மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 5 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
2022 பி.எம்.டபிள்யூ. G 310 R மாடல் மூன்று புதிய நிறங்கள் மற்றும் மேம்பட்ட டீகல்களுடன் கிடைக்கிறது. 2022 பி.எம்.டபிள்யூ. G 310 R மாடல் வைட் மற்றும் ரேசிங் புளூ, ரேசிங் ரெட் மற்றும் காஸ்மிக் பிளாக் 2 ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை தவிர புது மாடலில் வேறு எந்த மாற்றுமும் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய பி.எம்.டபிள்யூ. G 310 R மாடலில் 313சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33,5 ஹெச்.பி. பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க் பின்புறம் மோனோஷாக் யூனிட் உள்ளது. இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. G 310 R மாடல் கே.டி.எம். 390 டியூக் மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடல் மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. நிறுவனம் மற்றொரு மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்கிறது. இது டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.