என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boat capsized"

    • கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களது விசைப்படகு, திடீரென பழுதாகி கடலில் மூழ்கத் தொடங்கியது.
    • சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்பிடி விசைப்படகு மற்றும் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது.

    காரைக்கால்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்கு சொந்த மான மீன்பிடி விசைப்படகில், கடந்த 27-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேலு, அறிவரசன், சுரேஷ், விஜய் உள்ளிட்ட 7 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களது விசைப்படகு, திடீரென பழுதாகி கடலில் மூழ்கத் தொடங்கியது. இதனால் பதற்றம் அடைந்த மீனவர்கள் அருகில் இருந்த காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வரும் வரை படகில் இருந்த கேன்களை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் 7 மீனவர்களும் தத்தளித்தனர்.

    பின்னர் படகுகளில் விரைந்து வந்த, காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், கேன்கள் உதவியோடு நடுக்கடலில் தத்தரித்த 7 மீனவர்களையும் 2 மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர் அவர்களை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்பிடி விசைப்படகு மற்றும் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது.

    காரைக்கால் அழைத்து வரப்பட்ட கீச்சாங்குப்பம் மீனவர்களை நாகை மீன்வளத்துறை அதிகாரிகள், கீச்சாங்குப்பம் மீனவ பஞ்சாயத்தார்கள், த.மு.க. மாநில மீனவர் அணி துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் வரவேற்று நாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக 7 மீனவர்களையும் மீட்ட காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவர்களை அவர்கள் பாராட்டினர்.

    • நதியில் தத்தளித்த படகில் இருந்து பலர் மீட்கப்பட்டனர்.
    • மேலும் சிலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம்.

    கின்ஷாசா:

    ஆப்பிரிக்க நாடான காங்கோவின் மாய்-நிடோம்பே மாகாணத்தில் காங்கோ ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான குவா ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் இரவு மிகப்பெரிய படகு ஒன்று கவிழ்ந்து மூழ்கியது.

    முஷீ நகரில் இருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கி வந்த படகு, லெடிபா கிராமத்தின் அருகே வந்தபோது விபத்தில் சிக்கியது. படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் கரையை நோக்கி நீந்தினர். மற்றவர்கள் மூழ்கினர்.

    விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழு அங்கு விரைந்து சென்றது. ஆற்றில் தத்தளித்தவர்களை மீட்டனர். இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இன்று மாலை நிலவரப்படி 21 குழந்தைகள் உள்பட 80க்கும் அதிகமானோரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    பலர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • புஷ்கர் காட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்தது.
    • உயிரிழந்தவர்கள் ராஜு மற்றும் அன்னவரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் 12 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    ஆற்றின் மறுகரையில் இருந்து புஷ்கர் காட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மீட்புக் குழுவினர் 10 பேரை காப்பாற்றினர். 2 பேர் காணாமல் போயினர்.

    தேடுதலுக்கு பிறகு ஆற்றில் இருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். உயிரிழந்தவர்கள் ராஜு மற்றும் அன்னவரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. 

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது. இனான்கோவில் சாலை வசதிகள் சரிவர இல்லாததால் பெரும்பாலான மக்கள் படகு போக்குவரத்தையே பிரதானமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இந்த ஏரியில் 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 183 பேர் மட்டுமே அமர்ந்துசெல்ல அனுமதி உள்ள நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளோடு, சரக்குகளையும் ஏற்றி சென்றுள்ளனர்.

    இதனால் பாரம் தாங்காமல் படகு திடீரென ஏரியில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த கோர விபத்தில் 12 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இது குறித்து இனான்கோ நகர மேயர் சைமன் எம்பிவோ வெம்பா கூறுகையில், “படகு விபத்தில் பலியானதாக கூறப்படும் எண்ணிக்கை தற்காலிகமானதுதான். இது மேலும் அதிகரிக்கக்கூடும். பயணிகளின் சரியான எண்ணிக்கையையும் தெரிந்துகொள்வது தற்போது கடினமாக உள்ளது. எனினும் மாயமானவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது” என கூறினார்.
    ×