என் மலர்
நீங்கள் தேடியது "Bogey"
- 25-வது வார்டுயில் உள்ள பெண்களுக்கு பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சி மற்றும் புகையில்லா போகி என்ற தலைப்பில் கோலப்போட்டி நடத்தது.
- கோலத்திற்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட தத்தோஜியப்பா சந்தில் பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சி மற்றும் புகையில்லா போகி என்ற தலைப்பின் கீழ் கோலப்போட்டி நடத்தப்பட்டது.
இதற்கு 25-வது வார்டு கவுன்சிலர் ஆர்.தெட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பெண்கள் விழிப்புணர்வு கோலங்கள் இட்டனர்.
சிறந்த கோலத்திற்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
மேலும் புகையில்லா போகி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன.