search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bogline buried the cow with the machine"

    • புதைத்த 2 பேர் கைது
    • வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கல்வாசல் கிராமம், கொல்லைமேடு பகுதியை ேசர்ந்தவர் சம்பத். தனது விவசாய நிலத்தை சுற்றி கம்பி அமைத்து திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்தார்.

    இதில் அங்கு மேய்ச்சலுக்கு வந்த காட்டு மாடு ஒன்று சிக்கி மின்வேலியில் சிக்கி இறந்தது.இதை மறைத்து கேளூர் கிராமத்தைச் சார்ந்த ராஜ்கமல் என்பவர் மூலம் பொக்லைன் எந்திரம் கொண்டு மாட்டை புதைத்து விட்டார்.

    இதுபற்றி தகவறிந்த வனத்துறையினர் புதைக்கப்பட்டிருந்த காட்டு மாடு உடலை தோண்டி எடுக்கப்பட்டு அரசு கால்நடை உதவி மருத்துவர், மூலம் உடற்கூறாய்வு நடத்தப்பட்டது.

    மின்சாரம் தாக்கி இறந்த காட்டு மாட்டை புதைத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து் சம்பத், ராஜ்கமல் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் குற்றத்துக்காக பயன்படுத்திய பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×