என் மலர்
நீங்கள் தேடியது "bonded labourers"
- அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் ரயிலில் ஏறி சிவகங்கை சென்றுள்ளார்
- பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே 20 ஆண்டுகளுக்கும் மேல் கொத்தடிமையாக ஆடு மேய்த்த முதியவர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளி அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு ரெயிலில் செல்கையில் டீ குடிக்க இறங்கியவர் தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறி, விபரம் அறியாமல் சிவகங்கை சென்றுள்ளார்
கடம்பங்குளம் பகுதியைச் சேர்ந்த மலைக்கண்ணு, அவரை கூட்டிச் சென்று ஆடு மேய்க்க வைத்துள்ளார். மலைக்கண்ணு இறந்துவிட, அதே ஊரைச் சேர்ந்த மற்றொருவரும் ஊதியம் இல்லாமல் உணவு மட்டும் கொடுத்து ஆடுமேய்க்க வைத்துள்ளார்.
சொந்த ஊருக்கும் செல்ல அனுமதிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்து விசாரணை நடத்தி குடும்பத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.
அப்பாராவின் மனைவி சீத்தாம்மா இறந்து விட்டதாகவும் மகளுக்கு திருமணமான தகவலும் தெரியவந்துள்ளது. மகள் மற்றும் மருமகனை அதிகாரிகள் வரவழைத்து அப்பாராவை ஒப்படைத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4252 650 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கொத்தடிமை தொழிலாளர்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம்.
- தற்போது கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்றகட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் புகார்கள் தெரிவிக்கலாம்.
சேலம்:
சேலம் தொழிலாளர் துறை உதவி ஆணையர்(அமலாக்கம்) பி.கிருஷ்ணவேணி வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் குறித்து கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976-ன் கீழ் சென்னை தேனாம்பேட்டை தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4252 650 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கொத்தடிமை தொழிலாளர்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம்.
தற்போது கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்றகட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்களது கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை பதிவு செய்யலாம்.
மேலும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் குழந்தை தொழி லாளர்கள் தொடர்பான சட்ட உதவிகள், மற்றும் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர் களுக்கு உதவிகள் ஏதும் தேவைப்படின் மேற்படி கட்டணமில்லா தொலை பேசி எண்களை தொடர்பு கொண்டு நிவாரணம் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்ப டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.