என் மலர்
நீங்கள் தேடியது "Border Gavaskar Cup"
- இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
- ஆஸ்திரேலிய அணி 2014-15-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் நவம்பர்22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணி 2014-15-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதில்லை. தொடர்ந்து 4 தொடர்களை அந்த அணி பறிகொடுத்துள்ளது. இதில் உள்நாட்டில் இரு டெஸ்ட் தொடரில் தோற்றதும் அடங்கும். இதற்கிடையே ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்சுக்கு 8 வாரம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து ஏறக்குறைய 18 மாதங்களாக நான் தொடர்ச்சியாக பந்து வீசி வருகிறேன். இந்த ஓய்வு நான் இன்னும் புத்துணர்ச்சியுடன் திரும்புவதற்கு உதவும். பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இதுவரை நான் வென்றதில்லை. அதை வெல்வதற்குரிய நல்ல நிலையில் நாங்கள் இருக்கிறோம்' என்று கம்மின்ஸ் குறிப்பிட்டார்.
- ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கொண்ட பார்டர்- கவாஸ்கர் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
- இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கொண்ட ஆலன் பார்டர்- கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ந் சிட்னியில் தொடங்கும் டெஸ்ட் உடன் தொடர் முடிகிறது.
இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த இரண்டு தொடர்களையும் இந்தியா தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி விவரம்:
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஹேஸ்ல்வுட், ஜோஸ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லியோன், மிட்சல் மார்ஷ் , நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித் , மிட்சல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட்,
இந்த தொடருக்கான இந்திய அணி விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. பும்ரா (துணைக்கேப்டன்), 3. ஜெய்ஸ்வல், 4. அபிமன்யூ ஈஸ்வரன், 5. சுப்மன் கில், 6. விராட் கோலி, 7. கே.எல். ராகுல், 8. ரிஷப் பண்ட் (வி.கீப்பர்), 9. சர்பராஸ் கான், 10. துருவ் ஜூரெல் (வி.கீப்பர்), 11. அஸ்வின், 12. ஜடேஜா, 13. முகமது சிராஜ், 14. ஆகாஷ் தீப், 15. பிரசித் கிருஷ்ணா, 16. ஹர்ஷித் ராணா, 17. நிதிஷ் குமார் ரெட்டி, 18. வாஷிங்டன் சுந்தர்.
- ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியாவின் பும்ரா மீண்டும் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மெல்போர்ன்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.
பாக்சிங் டே என பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் அடித்தார்.
இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிதிஷ் ரெட்டி 114 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நான்காம் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 70 ரன்னும், பாட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 41 ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சில நிமிடங்களில் நாதன் லயன் 41 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட், சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து, 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.