என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Borne Fevers"
- கொசு உற்பத்தியாகும் படி வைத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- கடைகளுக்கு முன்னெச்சரிக்கை நோட்டீசும் கொடுத்து வருகின்றார்கள்.
அந்தியூர்:
அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு, மலேரியா, கொசுக்களால் ஏற்படக்கூடிய காய்ச்சல் வராமல் இருக்க வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் சுகாதாரத் துறையினர் வீடு, வீடாக சென்று மழை நீர் தேங்காமல் இருக்க வீடுகளில் சைக்கிள், பைக், கார், உள்ளிட்ட டயர்களை மேல் மாடியில் போட்டு வைத்திருந்தால் அவற்றை அகற்றியும், கொசு மருந்து தெளித்தும் வருகின்றார்கள்.
இந்த நிலையில் பழைய பொருட்களை வாங்கும் குடோன்கள், குடியிருப்பு பகுதியில் மத்தியில் இரு ந்தால் அவர்கள் டயர்களை யோ மற்ற பொருட்களையோ மழையில் நனைந்து அதன் மூலம் கொசு உற்பத்தியாகும் படி வைத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு இருக்கும் கடைகளை முன்னெச்சரிக்கை நோட்டீசும் கொடுத்து வருகின்றார்கள்.
பழைய இரும்பு கடைகள் ஊருக்கு வெளிப்புறத்தில் குடோன்களை வைத்துக் ெகாள்ள வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிகளுக்குள் வைத்திருந்தால் அவர்கள் மேல்கூரை அமைத்து மழை நீரில் பழைய பொருட்கள் நனையாமலும் இருக்கும்படி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றார்கள்.