என் மலர்
நீங்கள் தேடியது "bounce"
- நாமக்கல் பரமத்தி சாலை பிரசன்னா நகரை சேர்ந்தவர் காசிராஜன், பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு, சாவியை கேட்டிலுள்ள கம்பியின் உள்பக்கமாக மாட்டிவிட்டு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டார்.
- சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய போது, வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
நாமக்கல்:
நாமக்கல் பரமத்தி சாலை பிரசன்னா நகரை சேர்ந்தவர் காசிராஜன், பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் வியாபார விசயமாக வெளியே சென்றுவிட்டார். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு, சாவியை கேட்டிலுள்ள கம்பியின் உள்பக்கமாக மாட்டிவிட்டு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய போது, வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இது குறித்து காசிராஜன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகி றார்கள்.
மேலும் அந்த பகுதியில் உள்ள காமிரா பதிவையும் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நபர் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
