என் மலர்
நீங்கள் தேடியது "bowlers"
- பீல்டிங் செய்கிறேன் என்ற பெயரில் பவுலர்கள் பவுண்டரி எல்லை சென்று தண்ணீர் குடித்து வருகின்றனர்.
- அப்படி பவுண்டரி எல்லைக்கு சென்று அடிக்கடி குடித்தால் பின்னர் தண்ணீர் இடைவெளி எதற்கு?
புதுடெல்லி:
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அடிக்கடி பவுலர்கள் ஓவர்களுக்கு இடையேயும், பவுண்டரி எல்லைக்கும் சென்று தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
குறிப்பாக, பீல்டிங் செய்கிறேன் என்ற பெயரில் அடிக்கடி பவுலர்கள் பவுண்டரி எல்லைக்குச் சென்று தண்ணீர் குடித்து வருகின்றனர். அப்படி பவுண்டரி எல்லைக்கு சென்று அடிக்கடி குடித்தால் பின்னர் தண்ணீர் இடைவெளி எதற்கு? தண்ணீர் இடைவெளி வரை காத்திருக்கும் பேட்ஸ்மேன்கள் மனிதர்கள் இல்லையா? என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, சுனில் கவாஸ்கர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
6 பந்துகள் வீசி முடித்தபின் ஒரு பந்துவீச்சாளர் டிரிங்ஸ் பிரேக் எடுக்கிறார் என்றால், பிறகு எதற்கு கூடுதலாக டிரிங்ஸ் பிரேக் என ஒன்றை வழங்க வேண்டும்.
6 பந்து வீசிய பவுலருக்கே டிரிங்ஸ் பிரேக் என்றால், ஒரு ஓவரில் 8 ரன் அல்லது அதற்கு மேல் அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு எந்த டிரிங்ஸ் பிரேக்கும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனவே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, எதிர் கேப்டனின் அனுமதி பெற்ற பிறகு பானங்கள் மைதானத்திற்குள் எடுத்து வரவேண்டும் என்ற முறையை திரும்ப கொண்டுவர வேண்டும்.
ரிசர்வ் வீரர்கள் ஓவர்களுக்கு இடையே மைதானத்துக்குள் சென்று தங்களுடைய வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்காதவாறு நடுவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அவரது சக வீரருக்கு குளிர்பானம் தர வேண்டுமானால் அது பவுண்டரி லைனில் இருந்தே கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம்:
ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்னே எடுக்க முடிந்தது.
ரிஷப் பந்த் அதிகப்பட்சமாக 25 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), காலின் முன்ரோ 24 பந்தில் 27 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், ஜடேஜா, பிராவோ தலா 2 விக்கெட்டும், இம்ரான்தாகீர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
148 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சென்னை அணி விளையாடியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் வெற்றி கிடைத்தது.
வாட்சன் 32 பந்தில் 50 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), டுபெலிசிஸ் 39 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். போல்ட், இஷாந்த்சர்மா, அக்ஷர் படேல், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பந்து வீச்சாளர்களின் சிறப்பாக செயல்பட்டதாலும், தொடக்க வீரர்களின் அபாரமான ஆட்டத்தாலும் சூப்பர் கிங்ஸ் 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம், அவர்களால்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம் என்று கேப்டன் டோனி பவுலர்களை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விக்கெட்டுகளை கைப்பற்றுவது முக்கியமானது. பந்து வீச்சாளர்களுக்கே அனைத்து பாராட்டும் சேரும். இந்த சீசனில் பந்து வீச்சு துறையால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினோம். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பவுலர்கள் மிகவும் அபாரமாக செயல்பட்டு டெல்லி அணியை மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க அனுமதிக்க வில்லை.
டெல்லி அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்டது. ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எங்களது சுழற்பந்து வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி அவர்களுக்கு நெருக்கடியை கொடுத்து விட்டனர்.
தொடக்க வீரர்கள் (வாட்சன், டுபெலிசிஸ்) சிறப்பாக ஆடினார்கள். அவர்களே ஆட்டத்தை முடித்து இருக்க வேண்டும். எந்த வகையிலும் இந்த வெற்றியை பெற்று இருந்தாலும் மகிழ்ச்சிதான். எங்கள் அணி வீரர்கள் பொறுப்பை உணர்ந்து அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
‘குவாலிபையர்2’ போட்டி மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதுதான் எங்களது வழக்கமான வழியாகும். கடந்த முறை மட்டும் விதி விலக்கு.
இவ்வாறு டோனி கூறி உள்ளார்.
முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை டெல்லி அணி இழந்தது. தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஷிரேயாஸ் அய்யர் கூறியதாவது:-
பவர்பிளேயில் 2 விக்கெட்டை இழந்தது ஏமாற்றம். அதில் இருந்து மீள்வதே கடினமாகி விட்டது. சென்னை அணி சுழற் பந்து வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர். சிறந்த பார்ட்னர்ஷிப் அமைய வில்லை.
ஒட்டு மொத்தத்தில் இந்த சீசனில் சிறப்பாக ஆடினோம். கேப்டன் பதவி வகித்தது பெருமை அளித்தது. சீனியர் வீரர்களான டோனி, வீராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொல்கத்தா:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்தான் எடுக்க முடிந்தது.
ஆலன் அதிகபட்சமாக 27 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், கலீல் அகமது, பும்ரா, குருணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தினேஷ் கார்த்திக் 34 பந்தில் 31 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்), குருணால் பாண்டியா 9 பந்தில் 21 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர். ஒஷானே தாமஸ், பிராத் வெயிட் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
பந்துவீச்சுக்கு நேர்த்தியான இந்த ஆடுகளத்தில் பவுலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த பிட்சில் ரன் சேஸ் செய்வது சவாலனதே. ஆனாலும் பேட்ஸ்மேன்கள் சில பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் புதுமுக வீரர் தாமஸ் அபாரமாக பந்து வீசினார். அவரது திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
குருணால் பாண்டியா மிகவும் அற்புதமான திறமை வாய்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இக்கட்டான நேரத்தில் அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதை செயல்படுத்தக்கூடியவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி லக்னோவில் நாளை நடக்கிறது. இதில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. #indvwi #rohitsharma
முதலில் விளையாடிய கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 25 ரன்னில் வென்று ‘குவாலிபையர்2’ ஆட்டத்துக்கு முன்னேறியது.
ராஜஸ்தான் ஒரு கட்டத்தில் 14 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 109 ரன் என்ற நிலையில் இருந்தது. இதனால் வெற்றி பெறும் என்று கருதப்பட்டது. ஆனால் கொல்கத்தா வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் ரன் எடுக்க இயலாமல் திணறினார்கள். ரகானே, சாம்சன் ஆட்டம் இழந்த பிறகு ராஜஸ்தான் வீரர்கள் அதிரடியாகவே ஆடவில்லை.

நாங்கள் தொடக்கத்தில் திணறினோம். பின்னர் அதில் இருந்து மீண்டோம். நெருக்கடியான கட்டத்தில் ஷுப்மான் கில் பொறுப்பாக ஆடினார். அவருக்கு எனது பாராட்டுக்கள் அவரது சில ஷாட்டுகள் பார்க்க நன்றாக இருந்தது. இதனால் எனக்கு நெருக்கடி குறைந்தது. ஆந்ரே ரஸ்சல் ஆட்டம் சிறப்பு வாய்ந்தது.
170 ரன் என்பது எடுக்க கூடிய இலக்காக இருந்தாலும் நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் நேர்த்தியுடன் பந்து வீசினார்கள்.
ஒவ்வொரு ஆட்டமும் இந்த நேரத்தில் முக்கியத்துவம் பெற்றது. அடுத்த ஆட்டங்களில் இரண்டு சிறந்த அணிகளுடன் மோத வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #IPL2018 #KKRvRR