search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bowling coach"

    • அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
    • ஐ.பி.எல். ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.

    புதுடெல்லி:

    ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த ஐ.பி.எல். தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.

    ஐ.பி.எல். ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை ஆகிய அணிகள் அடுத்த சீசனுக்கு முன் தங்களது அணிகளைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர்களை நியமித்து உள்ளனர்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது பந்து வீச்சு பயிற்சியாளரை அறிவித்துள்ளது. அதன்படி மும்பை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் நவம்பர் 2021 முதல் ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் வரை இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டவர். மாம்ப்ரே, தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்காவுடன் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்த்தனேவின் கீழ் பயிற்சியாளர் குழுவின் ஒரு பகுதியாக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லக்னோ அணிக்கு புதிய ஆலோசகராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர்ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர் பொறுப்பேற்றார். இப்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் உயர்ந்துள்ளா

    கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்த நிலையில் ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.


    இந்நிலையில் லக்னோ அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் லக்னோ அணிக்கு அடுத்த பந்து வீச்சு பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கு லக்னோ அணியின் புதிய ஆலோசகரான நியமிக்கப்பட்ட ஜாகீர் கான் பதில் அளித்துள்ளார். நான் இருக்கும் போது உங்களுக்கு ஒரு பந்து வீச்சு பயிற்சியாளர் தேவையா? அணிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வேன் என அவர் கூறினார்.

    • ஓரம் நியூசிலாந்து அணிக்காக 33 டெஸ்ட், 160 ஒருநாள் மற்றும் 36 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.
    • டி20 உலகக் கோப்பை போட்டியின்போது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக ஓரம் செயல்பட்டார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஜேக்கப் ஓரம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு ஷேன் ஜூர்கன்சன் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றார்.

    இதனால் காலியான அந்த வெற்றிடத்தை ஜேக்கப் ஓரம் நிரப்புகிறார். ஏற்கனவே அவர் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட், சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின்போது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    46 வயதான ஓரம் நியூசிலாந்து அணிக்காக 33 டெஸ்ட், 160 ஒருநாள் மற்றும் 36 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

    • மோர்னே மோர்கல் பவுலிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • லக்னோ அணி வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

    கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் போன்றவர்களையும் தேர்வு செய்யாமல் இருந்தது.

    இதற்கிடையே, பவுலிங் பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கலை நியமிக்குமாறு கம்பீர் கேட்டிருந்தார். அதற்கு பி.சி.சி.ஐ. எந்த பதிலும் கூறாமல் இருந்தது.

    இந்நிலையில், இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

    கவுதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல உறவில் இருந்து வருகின்றனர். கம்பீர் ஒரு வீரராக கொல்கத்தா அணிக்கு விளையாடிய போது மோர்கல் விளையாடியுள்ளார்.

    லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நேற்று நியமிக்கப்பட்டார்.
    • பீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்வார்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அடுத்த பயிற்சியாளர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் உலா வந்தன.

    அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    அதனை தொடர்ந்து கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று தெரிவித்தார்.

    பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. பீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்வார். மேலும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் பந்து வீச்சு பயிற்சியாளராக எல் பாலாஜி, ஜாகீர் கான், வினய் குமார் ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான் அல்லது லட்சுமிபதி பாலாஜியை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஆனால் வினய் குமாரை பவிலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

    • இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
    • இந்த தொடரின் முதல் டி20 போட்டி வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

    இந்திய அணியினர் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு புதிய பந்து வீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சார்ல் லாங்கேவெல்டை பந்து வீச்சு பயிற்சியாளராக ஜிம்பாப்வே நியமித்துள்ளது. முன்னதாக ஜிம்பாப்வே தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் சம்மன்ஸ் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக டியான் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளனர் .

    இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பஞ்சாப் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் அணி 4 வெற்றியுடன் 5-வது இடத்தை பிடித்தது.
    • இந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் அணியில் ஆறு மாத ஒப்பந்தத்தில் பயிற்சியாளராக மோர்கல் இணைந்தார்.

    இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான் லீக் போட்டியுடனே வெளியேறியது. இங்கிலாந்து அணி 9 போட்டிகள் முடிவில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்றது. பாகிஸ்தான் அணி 4 வெற்றியுடன் 5-வது இடத்தை பிடித்தது.

    இந்நிலையில் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறாத நிலையில் அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகியுள்ளார்.

    தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்கல், இந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் அணியில் ஆறு மாத ஒப்பந்தத்தில் பயிற்சியாளராக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×