என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bracelet"
- பெண்கள் அணியும் ஆபரபணங்களில் வளையல்களுக்கு முக்கியபங்கு உண்டு.
- வளையல்கள் கைகளில் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்திய கலாசாரத்தில், பெண்கள் அணியும் ஆபரபணங்களில் வளையல்களுக்கு முக்கியபங்கு உண்டு. கண்ணாடி, செம்பு, வெள்ளி, தங்கம். வைரம் என்று பல்வேறு உலோகங்களால் தயாரிக்கப்ட்ட வளையல்கள் பண்டைய காலம் முதல் பழக்கத்தில் இருந்து வருகின்றன.
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பதில் இருக்கும் சிரமம் காரணமாக, கண்ணாடி வளையல்களின் உபயோகம் குறைந்து வருகிறது. நவீன காலத்திற்கு ஏற்றவாறு ஸ்டெர்லிங் சில்வர், ரோஸ் கோல்ட் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் வளையல்களை தற்போது பலரும் அணிகிறார்கள். இத்தகைய உலோகங்களால் ஆன வளையல்களை பொலிவு மங்காமல் பராமரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
அனைத்து உலோக வளையல்களையும் மொத்தமாக ஒரே பெட்டியில் பாதுகாத்து வைப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு தனிப்பட்ட பண்பு உண்டு. அவை ஒன்றோடொன்று சேரும்போது ரசாயன மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் வளையல்களின் பொலிவு குறையும்.
எனவே எப்போதும் வளையல்களை அவற்றின் வகைக்கேற்ப பிரித்து பாதுகாத்து வைப்பது நல்லது. உலோகங்களால் ஆன ஆபரணங்கள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனுடன் சேர்ந்து ரசாயன மாற்றத்துக்கு (ஆக்சிடைஸ்டு) உள்ளாகும்.
இவ்வாறு எளிதாக ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகும் நகைகள் மலிவான விலைக்கு கிடைக்கும். அவற்றை தவிர்த்து தரமான உலோகங்களால் தயாரிக்கப்பட்ட வளையல்களை வாங்குவது நல்லது.
பல்வேறு உலோகத்தால் ஆன வளையல்களை அவற்றுக்காக கொடுக்கப்பட்ட பிரத்தியேக பெட்டிகளில் வைப்பது நல்லது. காற்று புகாதவாறு இறுக்கமான பெட்டி அல்லது அறையில் அவற்றை பத்திரப்படுத்தி வைத்தால் ஆக்சிடைஸ்டு ஆவதை தவிர்க்கலாம்.
செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்ட வளையல்களை அவ்வப்போது பருத்தி துணியைக் கொண்டு துடைத்து பாலிஷ் செய்யலாம். செம்பு வளையல்களை எப்போதும் கைகளில் அணிந்து இருந்தால் சருமத்துடன் ஏற்படும் உராய்வு காரணமாக பொலிவு குறையாமல் இருக்கும். வியர்வைபடும்போது செம்பு நிறம் மாறும் தன்மை கொண்டது. எனவே செம்பு வளையல்கள் கைகளில் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டெர்லிங் சில்வர் வளையல்கள் நேரடியாக சூரிய வெளிச்சத்தில் படும்போது அவற்றின் பொலிவு குறையும். எனவே, இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு இவ்வகை வளையல்களை அணிந்து செல்லலாம்.
குளிப்பது, பாத்திரம் துலக்குவது. வீட்டை சுத்தம் செய்வது ஆகிய வேலைகளை செய்யும்போது வளையல்களை கழற்றி வைக்க வேண்டும். தண்ணீர் அடிக்கடி படும்போது வளையல்கள் அதன் பொலிவை இழக்கக்கூடும்.
வளையல்களை பாதுகாத்து வைக்கும் இடத்தில் ஈரப்பதம் அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட சாக்பீஸ், சிலிகா ஜெல் ஆகியவற்றை வளையல் பெட்டிகளில் வைக்கலாம். வளையலில் கிளியர் நெயில் பாலிஷ் கோட்டிங் போட்டும் வைக்கலாம்.
- பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து எல்லையம்மனுக்கு 50,001 வளையல்களினால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது .
பரமத்தி வேலூர்:
பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு எல்லையம்மனுக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
வளையல் அலங்காரம்
அதனைத் தொடர்ந்து எல்லையம்மனுக்கு 50,001 வளையல்களினால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எல்லை யம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு எல்லையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதமும்,11 வகையான அன்னதானம், வழங்கப்பட்டது.
இதே போல் கோப்பணம்பாளையம் அங்காளம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், அழகு நாச்சி யம்மன், வேலூர் மகா மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், பகவதி யம்மன், பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி யம்மன், கொந்தளம் மாரி யம்மன், சேளூர் மாரி யம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பா ளையம் பகவதி அம்மன், ஆனங்கூர்
மாரியம்மன், செல்லாண்டி யம்மன் , பகவதி அம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன்.
பகவதி அம்மன் மற்றும்
பரமத்தி அங்காளம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்க ளில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு வளையல் அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகு திகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்