என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bright time"
- நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் திருப்பணிபுரம் கிராமம் அமைந்துள்ளது.
- கிராமத்துக்கு தேவையான மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் திருப்பணிபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் மின்சாரம், குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் இருந்து வந்தது.
மின்சாரம் வழங்க உத்தரவு
இதுகுறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில், அக்கிராமத்துக்கு தேவையான மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி மேற்கு தொடர்ச்சி மலை கிராமமான பாபநாசம் கீழ் முகாம் பிரிவிற்குட்பட்ட திருப்பணிபுரம் கிராமத்திற்கு புதிதாக மின் கம்பங்கள் நட்டு மின்சாரம் வழங்க மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது.
அவ்விடங்களுக்கு மின் கம்பங்களும், மின்பாதைகளும் அமைக்கவேண்டிய இடம் வனத்துறையின் வசம் இருப்பதால் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க தற்பொழுது மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமையில் நடந்து வருகிறது. மேலும் அங்குள்ள வீடுகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக வழங்கப்பட்ட பேட்டரிகளுடன் கூடிய சூரிய ஒளி மின்விளக்குகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு தாமிரபரணி ஆறு 3 இடங்களில் கிளை ஆறுகளாக பிரிவதால் மொத்தம் 6 இரட்டை மின்கம்பங்களுடன் சுமார் 52 மின்கம்பங்கள் மூலம் உயர் அழுத்த மின் பாதைகள் கொண்டு சென்று 63 கிலோவாட் மின்மாற்றி அமைத்து அங்கு இருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மதிப்பீடு தயார்செய்ய கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தலைமையிலான குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் ராமகிளி, உதவி மின் பொறியாளர் விஜயராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.