search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Broadcast"

    • இந்தியா முழுவதும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது.
    • தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பட்டியலில் மதுரை நகரமும் இணைக்கப்பட்டது.

    மதுரை:

    இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது.

    ஐ.பி.எல். கோப்பையை இதுவரை சென்னை, மும்பை இந்தியன்ஸ் அணிகளும் தலா 5 முறை வென்றுள்ளன. கடந்தாண்டு நடந்த இறுதிப் போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான டோனி தலைமையில் இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்று தமிழக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தியா முழுவதும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது.

    இதையொட்டி நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். ரசிகர் பூங்கா என்ற பெயரில் பெரிய திரைகளை அமைத்து ஐ.பி.எல். போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.

    தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பட்டியலில் மதுரை நகரமும் இணைக்கப்பட்டது.

    அதன்படி வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டிகளை மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பெரிய திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது.

    நவீன ஒலி, ஒளி அமைப்பில் ராட்சத திரையின் மூலம் போட்டிகளை ரசிகர்கள் காணலாம். இங்கு ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டிகளை அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வருகிற 22-ந் தேதி மாலை தொடக்க விழா நிகழ்ச்சிகளுடன் போட்டி நேரடியாக இந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்படும்.

    இந்த ஆண்டு 27 நகரங்களில் இது போன்ற பெரிய திரை அமைத்து பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம். போட்டி நடைபெறும் அன்று பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ரசிகர்கள் போட்டியை கண்டுகளிக்கலாம்.

    இரவு 10 மணிக்கு மேல் கிரிக்கெட் போட்டியின் சத்தம் நிறுத்தப்பட்டு ஒளிபரப்பப்படும். மேலும் ரசிகர்களின் வசதிக்காக அருகிலேயே உணவு மற்றும் பானங்கள் ஸ்டால்கள் அமைக்கப் படும். இந்தாண்டு மார்ச் 22-ந் தேதி முதல் இறுதிப் போட்டி வரை அனைத்து போட்டிகளையும் ரேஸே் கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம் என கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை நேரலையில் ஒளிபரப்பப்ப டுகிறது.
    • மாநில நிர்வாகிகள் அவரவர் கிளைகளில் பார்த்தனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை நேரலையில் ஒளிபரப்பப்ப டுகிறது.

    பிரதமரின் 103- வது மனதின் குரல் நிகழ்ச்சியை  புதுவை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதியிலும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாநில நிர்வாகிகள் அவரவர் கிளைகளில் பார்த்தனர்.

    பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் லாஸ்பேட்டையில் 3 கிளைகள் இணைந்து பாரதப்பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அமர்ந்து பார்த்தனர்.

    • பிரதமர் மோடி என்னுடைய கிளை வலிமையான கிளை என்ற நிகழ்ச்சியை காணொளி மூலம் உரையாற்றி வருகிறார்
    • ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜனதாவினர் ஒலிபரப்பி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி என்னுடைய கிளை வலிமையான கிளை என்ற நிகழ்ச்சியை காணொளி மூலம் உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜனதாவினர் ஒலிபரப்பி வருகிறார்கள்.

    அதுபோல் உப்பளம் தொகுதி பா.ஜனதா சார்பிலும் பிரதமர் மோடியின் காணொளி நிகழ்ச்சி தொகுதி தலைவர் சக்திவேல் தலைமையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு உப்பளம் தொகுதி பொருப்பாளரும், மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளருமான வெற்றிச்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் தொகுதி

    பொதுச்செய லாளர் கவிராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தெய்வநாயகம், தொகுதி துணைத்தலைவர் போஸ், மாவட்ட செயலாளர் அற்புதழகன், நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, ராஜவேலு, ரகு, விக்னேஷ், மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் சிறப்புகள் பற்றி ஒளிபரப்பாகிறது.
    • 31ந் தேதி காலை 7 மணிக்கு சன் டி.வி.யில் தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு.

    திருப்பூர் :

    ஆதிமூல சற்குரு ஸ்ரீ வீரபோக வசந்தராயர் மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் நாளை 31ந் தேதி காலை 7 மணிக்கு சன் டி.வி.யில் தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் சிறப்புகள் பற்றி சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அனைவரும் இதனை பார்த்து சுவாமிகளின் திருவருளையும் அம்பாளின் பேரருளையும் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

    மத்திய அரசின் புதிய கேபிள் கட்டண முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) கேபிள் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறது என்று கேபிள் டி.வி. பொதுநல சங்கம் அறிவித்துள்ளது. #CableTv #TRAI
    சென்னை :

    இதுகுறித்து தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (டி.சி.ஓ.ஏ.) நிறுவன தலைவர் பி.சகிலன் கூறியதாவது:-

    கேபிள் டி.வி.யில் அனலாக் முறை ஒழிக்கப்பட்டு டிஜிட்டல் ஒளிபரப்பு நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தனது 8-வது புதிய கட்டண கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் விரும்பும் சானல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்கிற அடிப்படையில் கட்டண சானல்கள் தங்கள் கட்டண விகிதத்தை தனித்தனியாக அறிவித்துள்ளன. அதற்கு 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியையும் வசூலிக்கப்பட உள்ளது.

    இந்த திட்டம் முழுமையாக கட்டண சானல் ஒளிபரப்பாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போதைய நிலையில் கட்டண சானல் நிறுவனங்களும், கட்டுப்பாட்டறை நிறுவனங்களும் பேசி இசைந்து ஒரு கட்டணத்தை இறுதி செய்து வழங்கி வந்தனர். தமிழகத்தின் முன்னணி கட்டுப்பாட்டறைகளான அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் சுமார் 150-க்கும் மேற்பட்ட கட்டண சானல்களை அதிகபட்சம் ரூ.200-க்கு கேபிள் ஆபரேட்டர்கள் வழியாக வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில் இதே சானல்களை மக்கள் தேர்வு செய்ய முயன்றால் ரூ.600-க்கும் மேலாக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

    தமிழகத்தில் 1.5 கோடி இணைப்புகள் இருப்பதாக கருதும் நிலையில், தற்போதைய விதிமுறை காரணமாக கோடிக்கணக்கில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரே‌ஷன் செலவிட வேண்டிவரும். ரூ.200-க்கு பார்க்கும் சானல்களை ரூ.600 கொடுத்து பார்க்கும் நிலையை கார்பரேட் கம்பனிகளுக்கு சாதகமாக டிராய் அறிவித்துள்ளதாக கூட்டமைப்பு கருதுகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.70-க்கு அதிக சானல்களை வழங்கினார். புதிய திட்டத்தால் பொதுமக்கள் பணம் சுரண்டப்படும் என்பதுடன், ஜெயலலிதாவின் அடிப்படை எண்ணமும் சிதைக்கப்படும் என்று அறிந்து முதல்-அமைச்சர் இதில் தலையிட வேண்டும்.



    100 சானல்கள் வழங்கிய முறை மாறி, தற்போது 500 சானல்கள் டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக கோடிக்கணக்கில் முதலீடு செய்து கருவிகள் வாங்கப்பட்டு சேவை நடந்துவருகிறது. இந்தநிலையில் திடீரென்று யாரையும் ஆலோசிக்காமல் தவறான முறையில் ரூ.130 என டிராய் அறிவித்து உள்ளது. தூர்தர்சனின் அனைத்து சானல்களையும் கண்டிப்பாக இலவசமாக காட்ட வேண்டும் என்ற விதிமுறையை அறிவித்த டிராய், இந்திய சானல்கள் அதிகபட்ச சில்லறை விலையை ரூ.5-க்கு மேல் வைக்கக்கூடாது என கூறியிருந்தால் கட்டண உயர்வு கட்டுக்குள் இருந்திருக்கும். ஜி.எஸ்.டி.யையும் ரத்து செய்ய வேண்டும்.

    பொதுமக்கள் நலன் கருதி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், ஒளிபரப்பாளர்கள், கட்டுப்பாட்டறை நிறுவனங்களை அழைத்து பேசி இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதுவரை மத்திய அரசு இந்த திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் ஆதரவோடு தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் முழு ஒளிபரப்பு நிறுத்த போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் 29 ஆயிரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால் பொதுமக்கள் தொழில் சங்கங்களை இணைத்து பிப் 10-ந்தேதி சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #CableTv #TRAI

    ×