என் மலர்
நீங்கள் தேடியது "Bromance"
- சூட்டிங்கின்போது கார் விபத்து ஏற்பட்டு நடிகர்கள் அர்ஜுன் அசோகன் மற்றும் 'பிரேமலு' புகழ் சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.
- 'ப்ரோமான்ஸ்' படப்பிடிப்பானது தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது
கேரளாவில் படத்தின் சூட்டிங்கின்போது கார் விபத்து ஏற்பட்டு நடிகர்கள் அர்ஜுன் அசோகன் மற்றும் 'பிரேமலு' புகழ் சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.
மலையாளத்தில் நிவின் பாலி- நயன்தாரா நடித்த லவ்- ஆக்ஷ்ன்- ட்ராமா படத்தை இயக்கி புகழ் பெற்ற அர்ஜுன் டி.ஜோஸ் தற்போது இயக்கி வரும் படம் 'ப்ரோமான்ஸ்' (bromance). இதில் மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
'ப்ரோமான்ஸ்' படப்பிடிப்பானது தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கொச்சி எம்.ஜி சாலையில் கார் சேசிங் காட்சி படமாக்கப்பட்டபோது உணவு டெலிவரி செய்பவரின் இரு சக்கர வாகனத்தில் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் டெலிவரி நபரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கார் கவிழ்ந்ததால் காரின் உள்ளே முன்பக்கம் இருந்த நடிகர் அர்ஜுன் அசோகனுக்கும், பின்பக்கம் இருந்த சங்கீத் பிரதாப்புக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
விபத்து குறித்து விசாரித்த காவல்துறையிர், காரை வேகமாக ஒட்டியதாக கூறி படக்குழுவை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் படப்பிடிப்பின்போது எந்தவித பாதிப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.