என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Budget session"

    • அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
    • மாநிலங்களவை மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் ஆகியவற்றால் பாராளுமன்றத்தின் இரு அவையிலும் பணிகள் முடங்கின.

    அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதேபோல் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை காலையில் கூடியது. அப்போது அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவையை அமைதியாக நடத்துவதற்கு ஒத்துழைக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். எனினும் அமளி நீடித்தது. இதனையடுத்து மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்திருந்தனர். 

    • கூட்டத்தொடரின் நிறைவில், சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர்
    • பாராளுமன்ற முதல் வாயிலில் சோனியா காந்தி தேசியக்கொடியுடன் பங்கேற்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் முடங்கின. கடைசி நாளான இன்று மக்களவையில் எந்த அலுவலும் நடைபெறவில்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியைத் தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடரின் நிறைவில், சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தையும் எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர்.

    மேலும், மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை மூவர்ணக் கொடி பேரணி நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இந்த பேரணியில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, ஆர்ஜேடி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

    அனைவரும் மூவர்ணக் கொடியை ஏந்தி சென்றனர். பேரணி தொடங்குவதற்கு முன்பாக, பாராளுமன்ற முதல் வாயிலில் எம்.பி.க்கள் திரண்டிருந்தபோது சோனியா காந்தியும் தேசியக்கொடியுடன் பங்கேற்றார். பாஜக ஆட்சியில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 

    • ராகுல் காந்திக்காக பாராளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர்.
    • கருப்பு உடை அணிந்து மீண்டும் பாராளுமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  ஒற்றுமையை வெளிப்படுத்தின. பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன. கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே கூட்டாக போராட்டங்களை நடத்தினர். அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக எம்.பி.க்கள் எதிர்முழக்கங்கள் எழுப்பினர். அதாவது, லண்டனில் இந்திய பாராளுமன்றம் குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கையில் பாஜக உறுதியாக இருந்தது. இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளிலும் பணிகள் முடங்கின. கடைசி நாளான இன்றும் மக்களவையில் எந்த பணியும் நடக்காமல் தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்ற முடக்கம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

    ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். கடைசி நாளிலும் அவையை சீர்குலைத்தனர். கருப்பு உடை அணிந்து மீண்டும் பாராளுமன்றத்தை அவமதித்தனர்.

    பாராளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஒரு எம்.பி. ராகுல் காந்திக்காக, காங்கிரசும், அவர்களின் ஆதரவாளர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

    காங்கிரசும் அதன் கும்பல்களும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சூரத் நீதிமன்றத்திற்கு எப்படி சென்றார்கள் என்பதை நாம் பார்த்தோம். அவர்கள் ஊர்வலம் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
    • எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணிகள் முடங்கின.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் ஆகியவற்றால் இரு அவைகளிலும் பணிகள் முடங்கின.

    அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதேபோல் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    இதற்கிடையே, பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை காலையில் கூடியது. அப்போது அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அமளி நீடித்ததால் மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், காலை அமர்வின் ஒத்திவைப்புக்குப் பிறகு மதியம் 2 மணிக்கு மாநிலங்களவை கூடியது.

    சபை நடவடிக்கைகளை படமாக்கியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ரஜனி அசோக்ராவ் பாட்டீல் விவகாரம் சட்ட நடவடிக்கை குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு அப்பால் நீட்டிக்கப்பட்டுள்ளது என அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

    தி.மு.க.வின் திருச்சி சிவ, காங்கிரசின் சக்திசிங் கோஹில் ஆகியோர் காந்தியின் அறிக்கையை மாநிலங்களவையில் விவாதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் ஆட்சேபணையை நிராகரிக்கும் தன்கரின் முடிவின் தாக்கங்கள் குறித்து விவாதிக்க முயன்றனர். ஆனாலும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

    இடைநீக்கம் விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே அவைத்தலைவர் தன்கர் மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளின் அமளி காரணமாக முற்றிலும் முடங்கியது.

    • வருடாவருடம் வழக்கமாக 3 கூட்டத்தொடர்கள் நடைபெறும்
    • சிறப்பு கூட்டத்தொடரின் மசோதாக்கள் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகிறது

    ஒவ்வொரு வருடமும் இந்திய பாராளுமன்றம், பட்ஜெட் கூட்டத்தொடர் (ஜனவரி முதல் மார்ச் வரை), மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள்) மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்) என 3 கூட்டத்தொடருக்காக கூட்டப்படும். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றுவரை பாராளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அலுவல்கள் நாளை முதல் புதியதாக கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற துவங்கும்.

    இதற்கிடையே, இந்த கூட்டத்தொடரில் விவாதத்திற்காக எடுத்து கொள்ளப்படவிருக்கும் மசோதாக்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான 3 மசோதாக்கள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா, வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2023, பத்திரிக்கைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2023, அஞ்சல் அலுவலக மசோதா 2023 மற்றும் மூத்த குடிமக்கள் நல மசோதா 2023 ஆகியவை பட்டியலிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    "ஒரே நாடு, ஒரே தேர்தல்" மற்றும் "இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றம் செய்வது" ஆகிய திட்டங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    • இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
    • பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்ற முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.

    நாளை மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே இந்த தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    பீகாரில் ஆட்சி மாற்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதற்காக பாராளுமன்றத்தில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாராடாளுமன்ற கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    • பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    • அப்போது அவர் கூறுகையில், அனைத்து எம்.பி.க்களும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இது மிகவும் மகத்துவமான கூட்டத்தொடர்.

    இன்று ஜனாதிபதியின் உரையும், நாளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் உரையும் இடம்பெறுகிறது. இது மகளிர் சக்திக்கான அடையாளம்.

    இது தேர்தல் கால பட்ஜெட் என்பதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. புதிய அரசு அமைந்தபிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    இந்தக் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமைய அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

    இந்த சந்தர்ப்பத்தை எந்த ஒரு உறுப்பினரும் தவற விட்டுவிட்டாமல் முடிந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • பாராளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
    • நாளை மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்குவது வழக்கம்.

    இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்த உள்ளார்.

    இந்நிலையில், பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர். அவர்கள் ஜனாதிபதியை பாராளுமன்றத்தினுள் அழைத்துச் சென்றனர்.

    • நாளை மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
    • புதிய பாராளுமன்றத்தில் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்குவது வழக்கம்.

    இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார்.

    முன்னதாக, பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர்.

    • கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டு முழுவதுமே ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளால் நிறைந்திருந்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். புதிய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:

    * இந்த அவையில் எனது முதல் உரை இதுவாகும்.

    * சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை வளர்ச்சியடைந்த பாரதம் நிர்ணயம் செய்யும்.

    * எது தேசம் எனது மண் யாத்திரை மூலம் பல்வேறு கிராமங்களில் மண் எடுக்கப்பட்டு அமிர்த பெருவிழா கொண்டாடப்பட்டது.

    * பிர்சா முண்டாவின் பிறந்த தினம் பழங்குடியினர் கவுரவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    * கடந்த ஆண்டும் நாட்டின் வரலாற்றின் வரலாற்ற சிறப்புமிக்க வருடம்.

    * நிலவின் தென் துருவத்தில் பாரதத்தின் மூவர்ணக்கொடி பட்டொளி வீசியது.

    * சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா மிஷன் தொடங்கப்பட்டது.

    * ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்று நடத்தியது.

    * பாரா ஒலிம்பிக் போட்டியில் நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களை இந்தியா குவித்தது.

    * கடந்தாண்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    * மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மூலம் மக்களவை, மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

    * சீர்திருத்தம், செயல்பாடு போன்றவற்றில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

    * கடந்த ஆண்டு முழுவதுமே ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளால் நிறைந்திருந்தது.

    * அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

    * ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

    * ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

    * டிஜிட்டல் துறையில் இந்தியா அளப்பரிய சாதனைகளை படைத்து வருகிறது.

    * கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.

    * ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை எட்டி உள்ளோம்.

    * கதர் மற்றும் கிராமப்பொருட்களின் விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

    * வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 3 கோடியிலிருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது என்று கூறினார்.

    • உலகிலேயே செல்போன் தயாரிப்பில் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது.
    • 10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த விலைவாசி உயர்வு, தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டின் மாதாந்திர சராசரி ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது.

    * ஜி.எஸ்.டி. வரி மூலம் ஒரே நாடு, ஒரே வரி சட்டம் கிடைத்தது.

    * இன்று நமது அந்நிய செலவாணி கையிருப்பு 600 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

    * உலகிலேயே செல்போன் தயாரிப்பில் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது.

    * இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ஒரு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

    * உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு காரிடார் பணிகள் நடைபெற்று வருகிறது.

    * விண்வெளி துறையில் புதிய நிறுவனங்கள் கால் பதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * நல்ல நிர்வாகத்தை வழங்குவதே முன்னுரிமையாக உள்ளது.

    * அந்நிய நேரடி முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

    * நல்ல நிர்வாகத்தை வழங்குவதே முன்னுரிமையாக உள்ளது.

    * பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம், சிறுகுறு, நடுத்தர தொழில் துறையில் மிகப்பெரும் பலன்கள் கிடைத்துள்ளது.

    * டிஜிட்டல் மேலாண்மை துறையில் மத்திய அரசு மிகப்பெரிய சீர்திருத்தத்தை மேற்கொண்டது.

    * காலனி ஆதிக்க குற்ற நடைமுறை சட்டங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது.

    * இன்று பிற நாடுகளிலும் இந்திய அரசு யுபிஐ பண பரிவர்த்தனை வசதியை வழங்கிக் கொண்டிருக்கிறது.

    * கடந்த சில ஆண்டுகளில் நாடு, மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உள்ளது.

    * 4 லட்சம் கி.மீ.க்கும் அதிகமாக புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    * நாடு முழுவதும் அதிவேகமாக செல்லக்கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    * தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

    * நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

    * 4 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    * வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

    * உஜ்வாலா திட்டத்தின் மூலம் எண்ணற்ற குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    * எந்த ஒரு பயனாளியும் விடுபடாமல் அரசின் பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் இலக்கு.

    * 10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த விலைவாசி உயர்வு, தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

    * ரூ.2.5 லட்சத்தில் இருந்த தனிநபர் வருமான வரி விலக்கு, தற்போது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * பிரதமர் மக்கள் மருந்தகத்தின் மூலம், கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கும் குறைந்த விலையில் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

    * ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * உதான் திட்டத்தின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையில் விமான டிக்கெட்.

    * 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயமாக தொழில் செய்து வருகின்றனர் என்று கூறினார்.

    • முதன்முறையாக போர் விமானிகளாக பெண்கள் உள்ளனர்.
    • சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளோம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2 கோடிக்கும் அதிகமான பெண்களை லட்சாதிபதிகளாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    * முதன்முறையாக போர் விமானிகளாக பெண்கள் உள்ளனர்.

    * பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின்கீழ் ரூ.2.80 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    * நெல், கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

    * வேளாண் ஏற்றுமதி நான்கு லட்சம் கோடியை கடந்துள்ளது.

    * மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டைக்கான பயன்கள் கிடைத்துள்ளது.

    * சுத்தமான குடிநீர் மூலம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

    * மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை நிறைவேற்று வருகிறோம்.

    * மலைவாழ் கிராமங்களுக்கும், முதல்முறையாக மின்சாரம் இன்டர்நெட் வசதி கிடைத்துள்ளது.

    * 200க்கும் அதிகமாக பழங்குடியின கிராமங்களில் முதல்முறையாக குடிநீர், மின்சாரம் கிடைத்துள்ளது.

    * விஸ்வகர்மா திட்டம் மூலம் எளிதாக கடனுதவி வழங்கப்படுகிறது.

    * விஸ்வகர்மா சமுதாயத்தினருக்கு பயனளிக்கும் வகையில் பி.எம். விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * சாலையோர சிறு வியாபாரிகள் பிரதமர் ஸ்வநிதி திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

    * இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 28 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    * நாட்டில் உள்ள கிராமங்களை மேம்படுத்த துடிப்பான கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது.

    * அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கான பாதையை அரசு வகுத்துள்ளது.

    * இன்று இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    * சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளன.

    * இன்று மேக் இன் இந்தியா பொருட்கள் உலக அளவிலான பிராண்டாக மாறி உள்ளது.

    * சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளோம்.

    * வரும் நாட்களில் மேலும் 9 சோலார் பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    * ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள் பதிக்கும் சூர்யோதய் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

    * பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும்.

    * இந்தியாவிற்கென சொந்த விண்வெளி மையம் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    * புதிய தேசியக் கல்விக்கொள்கை வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    * பொறியியல், மருத்துவ படிப்புகளை தேசிய கல்விக்கொள்கையின் கீழ் தாய் மொழியில் வழங்க அறிவுறுத்தல்.

    * அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாக குறைந்துள்ளது.

    * 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

    * மருத்துவ படிப்புகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

    * இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

    ×